மனித உரிமைகள் பேரவையின் விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதா கூடாதா என்பது தொடர்பான பிரேரணை ஒன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவுள்ளது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே இதனை முன்வைக்கவுள்ளனர். அதே தினத்தில் இதனை விவாதத்துக்கு எடுத்து வாக்கெடுப்புக்கு விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஏனைய பிரதான  கட்சித் தலைவர்கள் கூடி ஆராயப்படவுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தாம் இதுவரை எந்தவிதமான...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் செய்யப்பட்ட சில திருத்தங்கள் நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கட்சியின் மூல யாப்பு மற்றும் கொள்கைப் பிரடகன திருத்தம் ஆகியனவற்றை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்புக்களை சமர்ப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமஷ்டி மற்றும் இணையாட்சி என்னும் இரண்டு பதங்கள் தொடர்பில் இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமஷ்டி முறைமை...
தனது கணவனே முக்கொலையையும் செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டியதாக முக்கொலைகளைச் செய்தவரின் (தனஞ்சயன்) மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். இதனையடுத்து குறித்த நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா, வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டார். யாழ்.அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த...
வடக்கில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள்- ஊடகவியலாளர்களுக்குத் தன்னைப் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கில் அதிக இராணுவ பிரசன்னம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போதே வட மாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாணத்திற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மாற்றங்கள் நிகழவில்லை...
உலக கிண்ண கால்பந்து போட்டி திருவிழா இன்று பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. பிரேசில் நாட்டில் தொடங்கும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கிண்ண கால்பந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு பாரிய அளவு பணத்தினை செலவு செய்துள்ளது. ரூ.3,450 கோடி பரிசு இந்த உலக கிண்ண கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி...
இலங்கை அரசாங்கம், குமரன் பத்மநாதன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது குற்ற விசாரணைகளை மேற்கொண்டு தமது பொறுப்புக்கூறலை ஆரம்பிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. ஆங்கில இணையத்தளமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு பேரும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கொலை முயற்சியிலும் தொடர்புபட்டவர்களாவர். இந்தநிலையில் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைக்க...
ARTICLE இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ள விசாரணைகள் மூலம்- உண்மைகளைக் கண்டறிவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும்- தமிழ் மக்களின் சார்பாகவும் தான் இந்த கோரிக்கையை அரசிடம் முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்...
உலகின் மிகப்பழமையான தொழிலை செய்து கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விப் பதற்காக, பிரேசில் நாட்டில் சுமார் 10 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். வாடிக்கை யாளர்களை கவருவதற்காக, ஸ்போக்கன் இங்லீஷ் வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற்றுள்ள பாலியல் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர். 20வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை , 12ம்தேதி, தொடங்கி அடுத்த மாதம் 13ம்தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளை...
இன்று வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் அவர்களால் அடிக்கல் நாட்டபட்டது. தொழில் நுட்பபீட பல்கலைகழக மாவர்களின் நலன்கருதி அமையவிருக்கும் இக்கட்டிடமானது 3 மாடிகளைகொண்டதாகவும் 250 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ள இக்கட்டத்திற்கு 350 இலட்சம் ரூபா செலவில் தொழல்நுட்ப சாதனங்களும் உகரங்களும் பொருத்தப்படவுள்ளதாக நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார்...