இந்தியாவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி அவர்களுடைய பதவியேற்பு வைபவத்தில், இலங்கையின் வடமாகாணத்தில் இருந்து யாழ் மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கலந்து கொள்ளவுள்ளார். இந்த வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷச அவர்கள் அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதியின் தலைமையில் செல்லவுள்ள குழுவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாகியஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) சார்பில் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களுக்கும்...
நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?” எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர். இவ்வாறு அரசுசாரா அமெரிக்க இணையதளமான Roads & Kingdoms வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை ஊடகவியலுக்கான விருதுபெற்ற *Adam Matthews எழுதியுள்ளார்.மே 18, 2009 அன்று...
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆம் சரத்து விடயத்தை செயற்படுத்த, இந்தியா முனையும் என்று பாரதீய ஜனதாக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில் 13வது சரத்தை அமுல்படுத்த அவரின் அரசாங்கம் முனையும் என்று கட்சியின் பேச்சாளர் நிர்மலா சித்தாரணம் தெரிவித்துள்ளார். இலங்கையின் செய்தித்தாள் ஒன்றுடன் தொலைபேசியில் உரையாடிய நிர்மலா, இலங்கையுடன் அதிகாரப்பரவலாக்கம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலாசாரம் போன்றவை தொடர்பில் தமது அரசாங்கம், இலங்கையுடன்...
இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையியின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கொபி அனானை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இராஜதந்திரியை விசாரணைக் குழுவின் தலைவராக நியமித்து அதன்...
விண்வெளியில் ஏலியன்ஸ் நடமாட்டம் உள்ளது என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.அமெரிக்க விண்வெளி ஆய்வுக்குழுவினர் இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழுவுக்கு சமர்ப்பித்துள்ள ஆய்வு அறிக்கையில், கடந்த 50 ஆண்டுகளாக வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சான்றுகள் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
விண்வெளி மையத்தில் காய்கறிகளை பயிரிட நாசா விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.காய்கறி செடிகளை விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்ப்பதற்காக சூரிய வெளிச்சத்தை போன்று அறை ஒன்றில் மின் விளக்குகளால் வெளிச்சம், தட்பவெப்பம் ஆகியவை உருவாக்கப்படுகின்றது. இதன்பின் அங்கு சில குறுகிய கால காய்கறி செடிகளை வைத்து, அவற்றை வளர்க்கும் பணியை விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். இவ்வாறு செய்வதனால் சத்தான சான்விட்ச்சுக்கு தேவையான காய்கறிகள் விண்வெளியிலேயே கிடைக்கும் என விஞ்ஞானிகள் நகைச்சுவையாக கூறியுள்ளனர்.
இணையத்தின் முதுகெலும்பு என அழைக்கப்படும் ‘Backbone’ தகவல் பறிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.இப்போது உள்ள காலகட்டங்கள் அனைத்தும் இணையத்தை மையமாக கொண்டு கடந்து வருகின்றன. இதில் பயன்படுத்தப்படும் தகவல் பறிமாற்றத்தை பற்றி எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா? மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய வாக்காளர் தொகை, அமெரிக்காவின் மக்கள் தொகையை விட மூன்று மடங்கு பெரியது. இந்த வியக்கும் எண்ணை மிஞ்சும் வித்தை தான் ஒரு நொடிக்கு உலகம் முழுவதும் பறிமாற்றப்படும் தகவல்கள்....
பிரபல இணைய நிறுவனமான கூகுள் Project Tango எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து வருவது யாவரும் அறிந்ததே.இந்த திட்டத்தின் கீழ் முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கக்கூடிய கமெராக்களை உள்ளடக்கிய டேப்லட் ஒன்றினையும் வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதாக இந்த டேப்லட்கள் வடிவமைக்கப்படுகின்றன. மேலும் அடுத்த மாதமளவில் இந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட 4,000 டேப்லட்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.  
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடைபெற்ற யூ.கே மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்க கூட்டத்தில், மகாராஷ்டிர தமிழ்ச் சங்க இணைச் செயலரும் தோசா பிளசா அதிபருமான பிரேம் கணபதி கவுரவிக்கப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளை யூ.கே மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்கத் தலைவர் ரவிபாலன் செய்திருந்தார். சாதனை தமிழர்: தூத்துக்குடி, நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம் கணபதி. 10ம் வகுப்பு படித்தவர். மும்பையில் ஆயிரத்து 200 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்ரு நம்பி வந்த...
  அம்மா வேடத்தில் நடிக்க முடிவு செய்திருக்கும் கனிகா, அதற்காக சான்ஸ் பிடிக்கும் வகையில் உடலில் பச்சை குத்திக்கொண்டார்.‘பைவ் ஸ்டார், ‘ஆதிரை, ‘டான்ஸர் படங்களில் நடித்துள்ள கனிகா தமிழில் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு ‘வரலாறு என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழ் பக்கம் தலைவைக்காதவர் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்க மாப்பிள்ளை ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை மணந்துகொண்டு குடும்பம் நடத்த...