வட்டுவாகலில் படையினரிடம் சரணடைந்த புலிகள் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள் தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், சம்பவத்தின்- நிகழ்வுகள் பற்றிய . விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள், இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அவர்கள் சரணடைந்ததை பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடியாகக் கண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது, எங்கே வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல்கள்...
  வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அவர் இவ்வாறு சாட்சியளித்துள்ளார். வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்சேகா நீதிமன்ற விசாரணையின்போது கூறுகையில், வெள்ளைக் கொடியுடன்...
மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 508 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வில்லியம்சன் 113 ரன்களும், ஜிம்மி நீசம் 107 ரன்களும் விளாசினர். துவக்க வீரர்...
கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் ரத்தம் தோய்ந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காணும் முயற்சிகளை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் முயற்சித்தார்.ஆனால், பலனேதும் ஏற்படாத நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் பாதியில் முடிவடைந்தன.இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போராளிகள் உட்பட குறைந்தது 37 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் குறித்து நேற்று...
சர்வதேச பயங்கரவாதியான பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்தின் தலைமை தளகர்த்தர் காயிர் முண்டோஸ். இந்த இயக்கம் மேற்கத்திய சுற்றுலாப்பயணிகளை கடத்தி பிரபலமானது.பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்திடமிருந்து இந்த அபு சய்யாப் தீவிரவாத இயக்கம் நிதி உதவி பெற்று வந்துள்ளது. அதில் காயிர் முண்டோசுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த காயிர் முண்டோஸ்...
  வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் இன்று மன்னாரில் மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மீ.மு.ஸியான் தலைமையில் அல் அஸ்கார் தேசியப் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.     
நாம் ஒருபோதும் முஸ்லீம்கள் விடயத்தில் தலையிடுவதில்லை, ஆனால் எமது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எம்மைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லீம்களுக்கு இறுதி ஆதரவு நாம் தான் என தெரிவித்த பொதுபலசேனா இஸ்லாமிய மார்க்கம் என்ன என்பதை முஸ்லீம் இனவாத தலைவர்களுக்கு நாம் கற்றுத் தருகின்றோம் எமது வகுப்புக்கு வாருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.   இந்த அமைப்பு மேலும் குறிப்பிடுகையில், நாம் ஒருபோதும் முஸ்லிம்கள் விடயத்தில் கடுமையாக செயற்படவில்லை....
ஐநா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று புதன்கிழமை  சபாநாயகரிடம் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆளும் கூட்டமைப்பின் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்தப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர். இதன் மூலம், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும்  போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு, ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு இலங்கையில் விசாரணை...
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பிரான இனியபாரதி கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அண்மையில் கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து, அவரது வெற்றிடத்திற்கே இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளர்.