மில்டன் ஒரு படத்தை இயக்கப் போகிறார் அல்லவா? இப்படம் ஷூட்டிங்குக்கு போகிறதுக்கு முன்பே படத்தை வாங்க நான், நீ என்று ஒரு கும்பல் போட்டி போடுகிறது.
தற்போது வந்த தகவல் படி இப்படத்தை 24 ரூபாய் கோடிக்கு வாங்கி கொள்வதாக ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஃபாக்ஸ் ஸ்டார் பேசுவதற்கு முன்பே லிங்குசாமி நிறுவனம் நாங்கள் ரூ.24 கோடி என்ன ரூ. 28 கோடி தருகிறோம் என்று சொல்லி இருந்தோம்...
கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தில் விஜய் சேதுபதி தனுஷின் தயாரிப்பில் உதயநிதி மனைவி கிருத்திகாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளி வந்தது.
இதை கேள்வி பட்ட விஜய் சேதுபதி, நான் தனுஷ் தயாரிப்பில் நடிக்க உள்ளேன் என்ற செய்தி வெறும் வந்தியே.
இது வரை என்னை தனுஷ் தரப்பில் யாரும் வந்து அணுகவில்லை.அப்படி வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றார் விஜய் சேதுபதி.
தற்போது புறம்போக்கு, வன்மம், இடம் பொருள்...
அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக அவரின் குடும்பத்தினருக்கு வீசா வழங்குவதில் பிரச்சினை தோன்றியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்த லியோ சீமான்பிள்ளை என்ற 29 வயது இளைஞர் கடந்த வாரம் தனக்கு தாமே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில் சீமான்பிள்ளையின் உடலை அவரின் பெற்றோர் தற்போது தஙகியுள்ள...
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவும் அவருடைய தாயாரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயாரும் இம்மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவருக்கு அடைக்கலம் வழங்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் சமர்ப்பிக்கப்படாதுள்ள தடுத்துவைக்கும் உத்தரவினை...
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் அட்டகாசம் புரிந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் படையாதிகாரி ஒருவரும் அவரது நண்பர்கள சிலரும் மாவத்தகம பிரதேசத்தில் அமைந்துள்ள கங்கா ஹோட்டலின் காசாளரை கடுமையாக தாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 4ம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடிபோதையில் குறித்த ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியோகத்தரும் அவரது நண்பர்களும் காசாளரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
42 வயதான சுமித் பிரியங்கர...
இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, இரு பாதிரியார்களின் ஒரு மாத கால தொலைபேசி பதிவுப் பட்டியலை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு, எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதி யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமாரினால் ஒத்திவைக்கப்பட்டது.
கொன்சலிற்றா, ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி காணாமற்போயிருந்த போதும், அவர் மறுநாள் 14 ஆம்...
யாழ் காக்கை தீவுப் பகுதியில் துர்நாற்றத்துடன் வெளியாகும் புகை இது.யாழ் மாநகரசபை ஆணையாளரின் திறமையான கழிவகற்றும் முகாமைத்துவம் இதுதான். தெருவால் செல்லும் எத்தனை மக்கள் சுவாச நோய்களுக்கு உள்ளாகின்றார்கள் என்பதைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாது நடாத்தப்படும் இந்தச் செயற்பாடுபற்றி எவரும் கவனிப்பதாகத் தெரியவில்லை.
யாழ் மாநகரசபை ஆணையாளர் தகவல் தொழில் நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர் என மாநகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் பதவிக்கு வந்த புதிதில் ஜீ.பி.எஸ் சிஸ்டம்...
வவுனியா நகர்பகுதியில் நேற்று (06.06) அதிகாலை கழுத்தில் சுருக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வவுனியா கூமாங்குளம் பகுதியினை சோ்ந்த 60அகவையுடைய சின்னராம் கணேஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவரது தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு நகரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது பொலிஸ் கான்ஸ்டபிள்
Thinappuyal News -
இலங்கையில் காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முல்லைத்தீவு நகரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசுரேஸ்ச்சந்திரனுடன், கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும், காணாமல்போனவர்களின் குடும்ப உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
காவல்துறையின் அனுமதி...
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரின் போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 18,600 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனை குறித்த ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு, கடந்த ஜனவரியில் இருந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மூன்று அமர்வுகளை நடத்தியுள்ளது.
நான்காவது அமர்வு இந்த வாரத்தில் மட்டக்களப்பில் நடத்தப்படவுள்ளது.
இந்தநிலையில் இதுவரை ஆணைக்குழுவுக்கு 18,600 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதில் 5000 முறைப்பாடுகள்...