யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்கள் பாரியளவில் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. யாழ்ப்பாணத்திலும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர் சமூகம் சீரழிகின்றது.- போதைப் பொருள் மற்றும் மதுபான பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுங்கத் திணைக்களம் இதுபற்றி எவ்வாறு பேசினாலும், நாட்டுக்கள் சட்டவிரோதமாக போதைப் பொருள்...
ரஷ்யாவின் பசுபிக் பிரிவின் மூன்று கடற்படை கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. ரியர் அத்மிரல் விளடீமீர் ஏ. திம்மித்ரிவ் தலைமையிலான இந்த ரஷ்ய கப்பல்களின் அதிகாரிகள் ஒய்வுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன. மார்ஷல் ஷப்போசினிகேவ், இல்ருக்ட், பயான் ஆகிய கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படையின் மரபுகளுக்கு இணங்க வரவேற்றனர். மார்ஷல் ஷப்போசினிகேவ் என்ற கப்பலின் கட்டளை அதிகாரியாக முதல் தர கப்டன் தகுதியை கொண்ட திமித்திரி வி.பஸ்சென்யூக் பணியாற்றி வருவதுடன் அந்த...
வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து வலயக்கல்விப்பணியாளர்களிற்குமான அவசர மாநாடொன்றை ஆளுநர் (04.06.2014) அன்று நடத்தியுள்ளார். எனினும் இம்மாநாடு பற்றி வடமாகாண கல்வி அமைச்சரிற்கு தகவல்கள் ஏதும் வழங்கப்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபைக்கும் ஆளுநர் சந்திரசிறிக்குமிடையேயான அதிகார இழுபறிகளிடையே மீண்டும் தன்னிச்சையாக அதிகாரங்களை ஆளுநர் அமுல்படுத்த முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்புடைய அமைச்சரான தனக்கு தகவல் வழங்காது அதிகாரிகளை அழைத்து சந்திப்புக்களை நடத்துவது தனக்கு திட்டமிட்டு அவமதிப்பினை ஏற்படுத்தும் செயலென வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா கவலை...
புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தின் கருத்தின்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் தற்போது புனர்வாழ்விற்குள்ளாகி வருகின்றனர். 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் ஏறத்தாழ 12,000 விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சரணடைந்தோ அல்லது தடுப்பிற்கு உட்படுத்தப்பட்டோ இருந்தனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக தெரிவித்தார். எஞ்சியுள்ள 132 முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தற்போது ஒருவருட புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு...
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. காவல்துறை அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய விடயங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். வட மாகாண முதலமைச்சரினால் மாகாண காவல்துறை ஆளுனரை நியமிக்க அனுமதியளிக்க வேண்டுமென தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள...
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அஸ்கிரி பீடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடாது 13ம் திருத்தச் சட்டத்தை உடனடியாக அரசாங்கம் ரத்து செய்ய வேண்டுமென அஸ்கிரி பீடத்தின் சிரேஸ்ட உறுப்பினர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்நோக்கி வரும் அழுத்தங்களுக்கு 13ம் திருத்தச் சட்டமே முக்கிய ஏதுவெனத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது னஎ...
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை உருவாக்க அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.   கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஆளும் கூட்டணியை கட்டியெழுப்ப உதவியவர்கள். அவர்கள் படித்த முக்கியமான நபர்கள். ஏதேனும்...
எதிர்வரும் 10ம் திகதி இலங்கை குறித்த விசாரணைக் குழுவினை ஐக்கிய நாடு;கள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பெயரிட உள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி மனித உரிமைப் பேரவையின் சாதாரண அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அதற்கு முன்னதாக விசாரணைக் குழு நியமிக்கப்பட உள்ளது. இந்த விசாரணைக்குழு ஜெனீவாவில் இருந்து விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கிற்கு சென்று விசாரணை நடாத்த இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்காது என...
கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை! தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி திருக்கோயில் காட்டுப் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளினால்ää 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடாத்துமர்று ஓய்வு...
  நேற்றைய தினம் கவனயீர்ப்புபு; போராட்டம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 12 ஆட்கொணர்வு மனுவுக்கு ஆதரவு தெரிவித்தும், 05 வருடங்கலாக சரணடைந்த மற்றும் காணாமற்போன உறவினர்களை தேடிக்கொண்டிருக்கும் குடும்ப அங்கத்தவர்களின் நிலைமைகளை உணர்த்துவதற்குமானதொரு போராட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. திட்டமிட்ட நிகழ்வுகள் இராணுவத்தினராலும், இராணுவ புலனாய்வாளர்களாலும், அரச சார்பான குழுக்களும் இணைந்து இரு பேரூந்துகளில் மக்களை ஏற்றிவந்ததுடன், அவர்களுக்கு பணம், நிவாரணம் வழங்குவதாகக் கூறியே கேப்பாப்புலவு பண்ணையில் கடமையாற்றும் மக்களைக் கொண்டுவந்து விடுதலைப்புலிகளுக்கு...