மனிதர்கள் வசிக்கும் இந்த பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும் இரண்டு மடங்கு பெரியதுமான கெப்ளர்-10 சி என்ற புதிய கோள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோள் 45 நாளுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. பூமிக்கோளில் இருந்து இது 560 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
அதாவது, 1 ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல் தொலைவு ஆகும்.இந்த புதிய கோளின்...
தமன்னா ஹீரோயினாக நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் ஸ்ருதி ஹாசன். இந்தி சினிமாவை தொடர்ந்து தெலுங்கிலும் படு கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன். ரேஸ் குர்ரம் படத்தில் பாடல் காட்சிகளில் அவரது நடனமும் ஸ்டைலும் ரசிகர்களை கிறங்கடித்தது. இதனால் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக தமன்னா நடிக்கும் ஆகடு படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட அவரை கேட்டுள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த பட பாடல்கள்...
இந்த ஆண்டில் ஜூன் மாதம் முடியும்போது 100 படங்கள் தமிழில் ரிலீஸ் ஆகிவிடும். தமிழ் சினிமா வரலாற்றில் இது புது சாதனையாகும். கடந்த சில வருடங்களை மிஞ்சும் அளவுக்கு இந்த ஆண்டு தமிழ் படங்களின் வரத்து மின்னல் வேகத்தில் இருக்கிறது. கோச்சடையான், ஜில்லா, வீரம் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தவிர சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் என 85 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இம்மாதம்...
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போனை ஒட்டுகேட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் மீது விசாரணை நடத்த ஜெர்மனி அரசு முடிவெடுத்துள்ளது.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம்(என்எஸ்ஏ), உலகம் முழுவதும் உளவு பார்க்கிறது. பல்வேறு நாடுகளில் முக்கிய தலைவர்களின் தொலைபேசி பேச்சுகளை அந்த அமைப்பு ஒட்டுகேட்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதே போல், ஜெர்மனியில் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஏராளமானோரின் செல்போன் பேச்சுகளை என்எஸ்ஏ ஒட்டுகேட்டு உளவு வேலையில்...
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்களின் சொத்துக்களை விசாரணை அதிகாரி முடக்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர்.
எங்கள் மீதான புகாரை விசாரணை நடத்துவதற்காக ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் நியமனம் செய்யப்பட்ட நல்லம்ம நாயுடுவுக்கு புகாரை விசாரணை நடத்த மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. எங்கள்...
இங்கிலாந்து– இலங்கை அணிகள் மோதிய 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 48.1 ஓவரில் 219 ரன்னில் சுருண்டது. கேப்டன் கூக் 56 ரன் எடுத்தார். மலிங்கா 3 விக்கெட்டும், மெண்டீஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இலங்கை 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம்...
7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி 2–வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது.
இந்த ஐ.பி.எல். போட்டியில் முத்திரை பதித்த புதுமுக இந்திய வீரர்கள் வருமாறு:–
அக்ஷர் பட்டேல் (பஞ்சாப்):
குஜராத்தை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீரரான இவர் இந்த ஐ.பி.எல்.லில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த...
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) கால் இறுதியில் 8–ம் நிலை வீரரான ரோஸ்னிக்கை (கனடா) எதிர் கொண்டார்.
இதில் ஜோகோவிச் 7–5, 7–6, (7–5), 6–4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் அரை இறுதியில் 18–ம் நிலை வீரரான லாத்வியாவை சேர்ந்த குல்பிசுடன்...
12 அணிகள் இடையிலான உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தின் ஹாக் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது.
அர்ஜென்டினா வீரர் புருனெட் 31-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து 2 -வது வெற்றியை...
இந்தோனேசியாவில் கட்டுமானப்பணி நடந்து வந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு கலிமண்டன் மாகாணத்தில் உளள் சமரிந்தா நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று ஷின்குவா பத்திரிகை தெரிவித்துள்ளது.
அடுக்குமாடி கட்டிடப்பணி நடந்து கொண்டிருக்கும்போது 3 மாடிகள் திடீரென இடிந்து விழுந்ததாகவும், இதில் 4 பேர் பலியானதாகவும், படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உள்ளூர் செய்தி...