தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தீர்வு திட்டம் ஒன்றினைத் தயாரிப்பதற்கு த.தே.கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரிவத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், இதற்காக தமிழ் மக்களிடமிருந்து கருத்துக்களை அறிந்து கொள்ளும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோப்பாய் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானித்ததன் பிரகாரம்...
கிளிநொச்சி- செல்வாநகர் பகுதியில் போரில் காயமடைந்து நிரந்த அங்கவீனமாக்கப்பட்ட பெண்ணை பொல்லுகள், தடிகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்குறித்த பெண்ணின் கணவர் எங்கே எனக்கேட்டு பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளி.செல்வாநகர் நாகதம்பிரான் ஆலயத்திற்கு சமீபமாக வீடொன்றில் வசிக்கும் அனுஸ்குமார் சுமதி என்ற இரு பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் வீட்டிற்கு இன்றைய தினம் மாலை 5மணியளவில், முழுமையாக முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசங்கள் அணிந்தவாறு இரு மோட்டார்...
60 வயது மதிக்கதக்க வெள்ளை நிற சேட்டும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்த நிலையில் இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் தலைப்பகுதியில் அடிபட்டகாயங்களுடன் உடல் பகுதியில் அங்கங்கே சிறு காயங்களுடன் காணப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் அரசங்குளம் பகுதியில் புகையிரத பாதையோரமாக ஆண் ஒருவரின் சடலம் அடிபட்டகாயங்களுடன் இன்று காலை (03.06) மீட்கப்பட்டுள்ளது. புகையிரதத்தில் பயணிக்கும் பொழுது தவறி விழுந்திருக்கலாம் அல்லது யாராவது தள்ளி விழுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பகிறது இன்று அதிகாலை குறித்த பிரதேசத்தின் பிரதேசவாசி...
தென்னிந்திய சினிமாவில் திடீரென்று வந்து ஒரு கலக்கு கலக்கியவர் அஞ்சலி. ஆனால் அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் திரையுலகை விட்டு கொஞ்ச நாட்கள் தள்ளியிருந்தார். தற்போது பழசையெல்லாம் மறந்து புதிய மேனஜர் ஒருவரை வைத்து மறுபடியும் படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் நம்ம அஞ்சலி. தற்போது கோனா வெங்கட்டின் தெலுங்கு படம் ஒன்றில் கடந்த 20 நாட்களாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பாங்காக் மற்றும் தாய்லாந்தில் நடந்து வருகிறது....
சுருதிஹாசன், என்னதான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும், அவர் முன்னுரிமை கொடுப்பது என்னவோ பாலிவுட்டுக்கு தான். அவர் பெரும்பாலும் ஹிந்தி படங்களில் நடிப்பதால், மும்பையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆனால் கடந்த வருடம் நவம்பர் மாதம் சுருதிஹாசன் மீது தாக்குதல் நடந்தது. மர்ம மனிதன் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து சுருதிஹாசனை தாக்கினான். ஒருவழியாக தப்பித்த அவர் தன் தோழியுடன் தங்கியிருந்தார். இப்போது அவர் சொந்தமாக ஒரு...
l இந்திய திரையுலகமே விரும்பும் இயக்குனராகிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது ஹாலிடே படத்தின் புரமோஷன் வேலையில் பிஸியாக இருக்கும் நிலையில், மனம் திறந்து உருக்கத்துடன் அவர் சில நினைவுகளை கூறியுள்ளார். இதில் ’என் அப்பா ஒரு நாளும் என்னை இப்படி ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை, உன் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை நேர்மையாக செய், என்று கூறுவார். ஆனால், நான் அவருக்கு ஒரு காபி கூட வாங்கி கொடுத்தது இல்லை’ என்று மிகவும்...
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக  இலங்கை அரசு அறிவித்துள்ள போதும் அவர்கள் மகிந்தவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவினது அடியாட்களென கண்டறியப்பட்டுள்ளது. நாமலினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளையடுத்தே அவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு இராணுவ சேவையில் இணைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை இராணுவ தொண்டர் படையணியில் பயன்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தில் தமிழ் பெண்களை இணைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசு ஈடுபட்ட போதும் அது...
இளையராஜா தனது 71 வது பிறந்தநாளை மரக்கன்று நட்டு கொண்டாடினார். இவ்விழாவில் இயக்குனர் பாலா அவர்கள் கலந்து கொண்டு இசைஞானியை மனம் திறந்து பாரட்டியுள்ளார். இதில் பாலா கூறியிருப்பது ‘ஒரு தனியார் இதழில் இளையராஜா எழுதிய கேள்வி பதிலை அது வெளியானபோதே படித்தேன். இருந்தாலும், நேற்று இரவு மீண்டும் அதை வாசித்தேன். அப்போது அவர் சொல்லியிருந்த இரண்டு விஷயங்கள் என்னை வெகுவாக பாதித்தன. ஒன்று, நான் எழுதியுள்ள இந்த கேள்வி...
அரசாங்கமும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளன. கொழும்பின் செய்தித்தாள்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. 30 வயதுக்கு மேற்பட்டவர்களை சட்டக் கல்லூரியில் அனுமதிப்பதில்லை என்று அமைச்சரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. இந்தநிலையில் ஹக்கீமுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அரசாங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...
இறுதிப்போரில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன? போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளை முன்வைத்து அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் 5ம் திகதி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்து...