சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து கொண்டு அரசாங்கம் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளை பாரியளவில் வரையறுத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். அத்தியாவசிய சேவைகளில் பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் சில நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தை...
 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனக்கு எதிராக சேறுபூசி வருவதாகவும் எவ்வித வெட்கமும் இன்றி, தன்னிடம் இரண்டு பாதுகாப்பு ஜீப் வண்டிகளையும் 10 இளம் பொலிஸாரையும் கேட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.உயிரிழந்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் இளைய சகோதரர் சாலிய திஸாநாயக்கவிற்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தபோது, அங்கு கூடியிருந்த அமைச்சர்களிடம் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.உண்மையில் ரணிலுக்கு வெட்கமில்லை. என்னை விமர்சித்து கொண்டே, என்னிடம்...
வடமாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு திங்களன்று முதற் தடவையாக விஜயம் செய்துள்ளார். ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்தார். ஒட்டுசுட்டான் பகுதியில் பாவட்டிமலை பகுதியில் மூன்று இடங்களில் பாரிய அளவில் கருங்கல் தோண்டுதலும், மணல் அகழ்தலும் இடம்பெற்று வருவதனால், இங்கு கற்களை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற வெடிகளினால் ஏற்படும் நில அதிர்வு காரணமாக அயலில்...
யுத்த நிறைவின் பின்னர் பல்வேறு தரப்பினரும் பல்வேறு புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு மாறுபட்ட புள்ளி விபரத் தகவல்களை வழங்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 2011ம் ஆண்டில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உயிரிழந்த சிவிலியன்களின் எண்ணிக்கை 10000 மாக குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் உயிரிழந்த சிவிலியன்களின் எண்ணிக்கையை...
ருகுணு பல்கலைக்கழகத்திற்குள் பொல்லுகள், கம்பிகளுடன் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரியவின் குண்டர்கள் சுமார் 200 பேர், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். இதனால் பல்கலைக்கழத்தில் இன்று மதியம் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சனத் ஜயசூரியவின் ஆதரவாளர்கள், பல்கலைக்கழகத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, வெளியில் வந்த பல்கலைக்கழக மாணவர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மத்தியில் சனத் ஜயசூரிய...
இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாவிட்டால் அதற்கு தமது பரிந்துரைகளையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரப்பட்டுள்ளது. தகவல் அறிந்த தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் கடந்த வருடத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும் முனைப்பை ஆரம்பித்தது. எனினும் அதில் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி என்பன பங்கேற்பதில்லை என்று அறிவித்து விட்டன. எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வு நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாகவே காணப்பட...
மத்திய கிழக்கு நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பாலூட்டும், வளர்ப்புத் தாய் முறைமை காணப்படுகிறது. வளர்ப்புத் தாயாக செயற்படுவர்களுக்கு பெருந் தொகை சம்பளமும் வழங்கப்படுகிறது. அத்துடன் தனக்கு பாலூட்டி, வளர்த்த பெண்ணை சொந்தத் தாயாகவே பிள்ளைகள் கருதுவதும், தன்னிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளை தம் சொந்த மக்களாக அந்த பெண்கள் கருதுவதும் தொன்றுதொட்டு இருந்து வரும் மரபு வழி பழக்கமாக உள்ளது. இந்நிலையில், சவுதியில் வசிக்கும் ஒரு தம்பதியர் சுமார் 25 ஆண்டு...
நாகாலாந்தில் உள்ள கரிபெமா கிராமம், நாட்டிலேயே புகையிலை பொருட்களை முற்றிலுமாக பயன்படுத்தாத முதல் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, கரிபெமா கிராம சபை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பான அறிவிப்பை மாநில முதன்மைச் செயலாளர் ஆர்.பென்சிலோதாங் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கரிபெமா கிராம சபை, கிராம தொலைநோக்கு பிரிவு மற்றும் கிராம மாணவர்கள் சங்கம் ஆகியவை மேற்கொண்ட முயற்சியின் பலனாக அந்த கிராமம் புகையிலையில்லா...
  அமெரிக்காவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பாட்டில் குண்டுகள் வெடித்த விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கடந்த 24ம் திகதி பாட்டில் குண்டு வெடித்துள்ளது. ஆனால் இச்சம்பவத்தில் உயிர்சேதம் இல்லை என்றும் யாரும் காயம் அடையவில்லை எனவும் திரையிரங்கு உரிமையாளர்களால் கூறப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், ஜாய்னெர்(20) என்ற வாலிபன் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து இவர்...
ஜப்பானில் தந்தை ஒருவர் தனது இறந்த மகனின் உடலை 5 ஆண்டுகளாய் மறைத்து வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ மாகாணத்தில் லொறி ஓட்டுநராய் பணிபுரியும் யுகிஹிரோ சைடோ என்ற நபர் தனது மனைவி மகனுடன் (70) வசித்து வந்தார். இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்துகொண்டிருந்ததால்,கடந்த 2005ம் ஆண்டில் அவர் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இவர் மனைவி மீதுள்ள கோபத்தால் மகனுக்கு சரியாக உணவளிக்காமல் அவர் இருந்துள்ளதால்...