கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சுருதிஹாசனும் காதலிப்பதாக நேற்று மும்பை பத்திரிகையில் செய்தி வெளியானது. இச்செய்தி இணைய தளங்களிலும் வேகமாக பரவியது. 2013 ஐ.பி.எல். போட்டிகளில் சுருதிஹாசனை அடிக்கடி காண முடிந்தது. சென்னை சூப்பர் சிங்ஸ் அணிக்கு ஆதரவாக மைதானத்தில் தோன்றினார்.
சுரேஷ் ரெய்னா ஆடும் போட்டிகளுக்கும் சென்றார். அப்போதே சுருதிஹாசனுக்கும், சுரேஷ் ரெய்னாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. பிறகு கிரிக்கெட் போட்டிகளில் சுருதிஹாசனை காண்பது அரிதானது. இதனால்...
ஷேவாக் நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அவர் சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 58 பந்தில் 12 பவுண்டரி, 8 சிக்சருடன் அவர் 122 ரன் எடுத்தார். இந்த போட்டித் தொடரில் 2–வது சதம் இதுவாகும்.
இந்த அதிரடியான ஆட்டம் மூலம் மகனுக்கு கொடுத்த வாக்குறுதி, ஆசையை ஷேவாக் நிறைவேற்றியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–
நான் ரன் எடுக்காமல் மோசமாக விளையாடுவதால் எனது மகனை...
ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.15 கோடி பரிசளிக்கப்படும் இறுதிப் போட்டியில் தோற்று 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 10 கோடி கிடைக்கும்.
குவாலிபையர்ஸ் போட்டியில் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், எலிமினேட்டர் போட்டியில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலா ரூ. 7½ கோடி கிடைக்கும். மொத்தம் ரூ.40 கோடி பரிசளிக்கப்படும்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணி, கொல்கத்தாவை சந்திக்கிறது.
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறி...
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
13-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தில் உள்ள ஹாக் நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஜூன் 15-ந் திகதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல்...
கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள கிழக்கு உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் வரையில் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று உக்ரைன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் டன்ட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் முக்கிய அரசு கட்டிடங்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இவற்றை மீட்டெடுப்பதற்காக உக்ரைன் படையினர் அங்கு தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.
ஆனால் அந்த இரு மாகாணங்களிலும் கடந்த 11-ந்தேதி கிளர்ச்சியாளர்கள் பொது வாக்கெடுப்பு நடத்தினர். அந்த வாக்கெடுப்பில் கிளர்ச்சியாளர்கள் தரப்புக்கு அமோக வெற்றி...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள துறைமுக மேம்பாலத்தில் (ஹார்பர் ப்ரிட்ஜ்) 219 சர்வதேச கொடிகளுடன் 340 பேர் ஒரே நேரத்தில் ஏறி நின்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
ரோட்டரி இயக்கத்தை சேர்ந்த இவர்கள் நேற்று நிகழ்த்திய இந்த சாதனையின் மூலம், ஹாலிவுட் நடிகை ஓப்ரா வின்ஃப்ரே தலைமையில், போலியோ ஒழிப்பு நிதிக்காக 143 நாடுகளின் கொடிகளுடன் 316 பேர், கடந்த 2008-ம் ஆண்டு இதே பாலத்தின் மீது ஏறி...
சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்து 43 பேர் படுகாயம்
சீனாவில் யுனான் மாகாணத்தில் யிங்ஜியாங் என்ற இடத்தில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொது மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. தகவல் அறிந்ததும் மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்....
அமெரிக்காவில் தண்ணீருக்குள் 21 அடி ஆழத்தில் பிரமாண்ட ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புளோரிடாவில் கீ லார்கோ என்ற இடத்தில் தண்ணீருக்கு அடியில் பிரமாண்டமான ஓட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. அது தண்ணீருக்குள் 21 அடி ஆழத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ‘காட்டேஜ்’கள் கட்டப்பட்டுள்ளன. அதில் 4 பேர் மட்டுமே தங்க முடியும். குளிக்க வென்னீர் ‘ஷீவர்கள்’ உள்ளன.
அங்கு அதி நவீன சமையலறையும் உள்ளது. பிரிட்ஜ் மைக்ரோ வேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அவை தவிர அங்கு...
‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் உரிமையாளர் மார்க் சூகர்பெர்க். கோடீசுவரர். இவரது மனைவி பிரி சில்லா சான். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள பொது பள்ளிகளுக்கு ரூ.720 கோடி நன்கொடை வழங்குகின்றனர்.
இந்த தகவலை மார்க் சூகர்பெர்க் ‘பேஸ்புக்’கில் தெரிவித்துள்ளார். சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி மிகவும் செழிப்பானது. இங்கு பல பள்ளிகள் உள்ளன. ஆனால் அங்கு போதுமான வசதிகள் இல்லை.
எனவே அங்குள்ள பள்ளிகளுக்கு தேவையான கம்ப்யூட்டர்கள்,...