பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் நோவாக் ஜோகோவிச், ஷரபோவா ஆகியோர் வெற்றி கண்டனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பெய்ததால் ஆட்டங்கள் தாமதமாக ஆரம்பமானது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரர்...
7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும்...
7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் 2 இடங்களை பஞ்சாப், கொல்கத்தா பிடித்தன. 3–வது இடத்தை சென்னை சூப்பர் கிங்சும், 4–வது இடத்தை மும்பை இந்தியன்சும் பிடித்தன. இந்த இரு அணிகளும் மும்பையில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். ஜெயிக்கும் அணி குவாலிபையர் ஆட்டத்தில் தோற்ற அணியுடன் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதும். இதில் வெல்லும் அணி...
இந்திய விளையாட்டு மேம்பாட்டு அக்கடமி (இஸ்பா) சார்பில் 13–வது கோடை கால தடகள பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. எஸ்.டி.ஏ.டி.யுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முகாமில் 10 வயதில் இருந்து 22 வயது வரை உள்ள 140 பேர் பங்கேற்றனர். இதன் நிறைவு விழாவில் அர்ஜூனா விருது பெற்ற கைப்பந்து பயிற்சியாளர் ஜி.இ.ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக விளையாட்டு இயக்குனர்...
இஸ்லாமியப் பெரும்பான்மையினர் வசிக்கும் இந்தோனேஷியாவில் அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனோ அமைச்சரவையில் மத அமைச்சராக செயல்பட்டு வந்தவர் சூர்யதர்மா அலி ஆவார். மெக்காவிற்கு செல்லும் புனிதப் பயணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் முறைகேடாக செலவு செய்யப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2012-13ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணத்தின்போது 20 மில்லியன் டாலர் மதிப்பிலான சிறப்பு நிதி தவறான முறையில் கையாளப்பட்டிருப்பதாக அந்நாட்டின் ஊழல்...
தென்கொரியாவின் வடக்கு பகுதியில் கோயாங் நகரம் உள்ளது. அங்குள்ள பஸ்நிலையத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தீ ‘மளமள’வென பரவியது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது அங்குள்ள கழிவறையில் 7 பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே சாவு...
ஆப்கானிஸ்தானுக்கு திடீரென வருகை தந்த ஒபாமாவை சந்திக்க அந்நாட்டு அதிபர் கர்சாய் மறுத்துவிட்டார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. அப்படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென ஆப்கானிஸ்தான் வந்தார். அங்குள்ள பக்ராம் விமான படை தளத்துக்கு சென்று அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். பின்னர் அமெரிக்கா திரும்பினார். ஆப்கானிஸ்தான்...
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் இன்று காலை நடைபெற்ற பேருந்து விபத்து ஒன்றில் 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள கலம் மலைவாசஸ்தலத்திற்கு இந்த பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அருகிலிருந்த நதியை ஒட்டிய சாலையோரத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இறந்தவர்களில் ஐந்து பெண்களும், 10 குழந்தைகளும் அடங்குவர் என்று ஸ்வாட்...
சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச பாடசாலைகளின் மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்க அனுமதிக்கப்படுவதனால், ஏனைய பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சர்வதேச பாடசாலைகளில் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தும் மாணவர்கள், இனி வரும் காலங்களில் தேசிய பாடசாலைகளில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. இது தொடர்பில் தேசிய பாடசாலைகளின் அதிபர்ளுக்கு ஏற்கனவே...
யாழில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான ஆசிரியை நேற்று முதல் காணவில்லையென அவரது சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்தனர். நேற்றுக் காலை தொண்டைமானாறு காட்டுப்புலம் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்றவர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லையென சகோதரன் தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர். இது தொடர்பான...