நடிகர் நாசரின் மூத்த மகன் பைசல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் நாசரின் அக்காள் மகன் உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர். பைசல் உள்பட இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.பைசல் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். அவர்...
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பெங்களூரில் இருந்து சென்னை வந்தவர் நடிகை ஸ்ருதி சந்திரலேகா. வந்த இடத்தில் சினிமா பைனான்சியராக அறிமுகமான நெல்லையை சேர்ந்த ரெனால்ட் பீட்டர் பிரின்சோ என்பருடன் காதல் ஏற்பட்டது. அவருக்கு நிறைய நண்பர்கள். பணமும், நட்பு வட்டாரமும் பெருக ஸ்ருதி தவறான பாதையை தேர்ந்தெடுத்தார். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த பிரின்சோவை நண்பர்கள் மற்றும் கூலிப்படையினரை கொண்டு கொலை செய்தார். பிணத்தை ரகசியமாக புதைத்து வைத்தாலும்...
உலக கோப்பை கால்பந்து தொடரின் பாதுகாப்புக்கு மட்டும் ரூ., 4,984 கோடி செலவிடப்படுகிறது.
பிரேசிலில் 20 வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடக்கிறது. இங்கு அவ்வப்போது கலவரம் நடப்பதால், போட்டியை காணவரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது பெரும் சிக்கலாக இருக்கும் எனத் தெரிகிறது.
இதையடுத்து, பாதுகாப்பை கெடுபிடிகளை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மொத்தம் 1,57,000...
ஐ.பி.எல்., லீக் போட்டியில், கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில், பெங்களூருவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று பெங்களூருவில் நடந்த போட்டியில் ஏற்கனவே ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறிய சென்னை, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த பெங்களூரு அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி,...
நைஜீரியா நாட்டில், 'போகோ ஹரம்' என்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, 300 பள்ளி மாணவியரை தேடும் பணிக்கு, அமெரிக்க ராணுவ வீரர்கள், 80 பேரை, அதிபர் ஒபாமா அனுப்பி வைத்துள்ளார்.
மாணவியர் மீட்கப்படும் வரை, அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள், அங்கேயே தங்கியிருப்பர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று, நைஜீரியா. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்த போதிலும், துப்பாக்கி ஏந்திய ஆயுதக்கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தும் அந்நாட்டில், போகோ ஹரம் என்ற இஸ்லாமிய...
இந்திய பிரதமராக நரேந்திரமோடி நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 151 பேர் நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுதலை செய்யப்படுகிறார்கள்.இந்த தகவலை பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் வெளியிட்டனர். இந்திய மீனவர்களுக்கான உடைகள், பணம் ஆகியவற்றை வழங்கி, வாகா எல்லைக்கு கொண்டு வரப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்களை பஸ் மூலம் அழைத்து...
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜிஞ்ஜியாங் என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 2 மணி அளவில் நகரின் மையப்பகுதியில் உள்ள சூப்பர் மார்கெட்டில் குண்டு வெடித்துள்ளது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். இது தற்கொலைப்படை தாக்குதலா எனபது தெளிவாக தெரியவில்லை. இந்த தாக்குதலில் வாட்ச்மேன் இருவர் படுகாயம் அடைந்தனர் என்று அங்குள்ள மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அரை மணி நேரம் கழித்து இஸ்லமாபாத்தின்...
அமெரிக்காவில் காரை ஓட்டிக்கொண்டே ஒரு மர்ம நபர் தெருவில் போவோர் வருவோரை எல்லாம் கண்மூடித்தனமாக எந்திர துப்பாக்கியால் சுட்டார். இதில் 6 பேர் பலியானார்கள்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
அமெரிக்காவின் சாந்தா பார்பரா நகர் அருகேயுள்ள இஸ்லா விஸ்டா நகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமைந்து உள்ளது. இது கடற்கரையையொட்டி பகுதியாகும். இங்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் ஒரு கறுப்பு நிற மர்ம நபர்...
அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகள் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
Thinappuyal News -
இலங்கை காணிப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பில் கேள்வி எழுப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளக இடம்பெயர்வாளர்களின் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி சாலோகா பியானி (Chaloka Beyani) இலங்கை இடம்பெயர் மக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.
ஏற்கனவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகள் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
இ;ந்த அமர்வுகளின் போது பியானி, இலங்கை உள்ளக இடம்பெயர்வாளர் குறித்து...