இத்தாலியின் மிலானோ நகரிற்கு அருகாமையில், சினிசல்லோ பால்சோமா பிரதேசத்தில் இலங்கையர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டினுள் உயிரிழந்த நிலையில் இருந்த இலங்கையரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். இத்தாலி குடியுரிமைப் பெற்றுக் கொண்ட குறித்த நபருடன், இலங்கையைச் சேர்ந்த தம்பதியினரும் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை தொடர்பில் குறித்த தம்பதியினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்களை பொலிஸார் இதுவரையில்...
போலிக் கடவுச் சீட்டில் பயணம் செய்த இலங்கையர் ஒருவரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான குறித்த இலங்கையரின் கடவுச் சீட்டில் தமிழகத்தின் முகவரி இடப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடவுச் சீட்டை பரிசோதனை செய்த போது அது போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. சந்தேக நபர், தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக பொலிஸார் சந்தேக நபரை மாநில நீதவான் ஒருவரிடம் முன்னிலைப்படுத்தியதாகவும், அவரை...
ஐ.நா. மனித மனித உரிமை சபையின் 25வது கூட்டத்தை தொடர்ந்து அங்கு நடைபெற்ற பல உண்மைகளை மக்கள் அறிந்திருக்க வேணடுமென்ற காரணத்தினால், பல ஆதாரங்களுடன், “ஜெனிவா மனித உரிமை சபையில், கோமாளிகளின் கும்மாளமும், நாசகார வேலையும்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன். இக் கட்டுரையுடன் எனது மின்னஞ்சலும் சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்த காரணத்தினால், எல்லாமாக 27 மின்னஞ்சல்கள் கிடைக்கப் பெற்றன. இதில் மூன்று மின்னஞ்சல்கள் தவிர்ந்த மற்றைய மின்னஞ்சல்கள் யாவும்...
அமெரிக்க அரசாங்கம் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை மென்மைப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிசா பிஸ்வால், இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த மக்களுடனும், அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த கூற்றை மேற்கோள்காட்டியே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை அமெரிக்கா தற்போது புரிந்து...
இலங்கை இராணுவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 புதிய இராணுவ முகாம்களை உருவாக்கி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்த திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்த இராணுவ முகாம்களுக்காக மொத்தமாக 650 ஏக்கர் காணிப் பரப்பினை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த ஐந்து வருடங்களில் மொத்தமாக 145, 885 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான காணியை அரசாங்கம்...
இலங்கையில் போருக்கு பின்னர் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது முழுமை ஆதரவை வழங்கும். ஏனினும் இலங்கை நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டு;ம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தலைமையாளர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார் அத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார் இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் புரிந்துணர்வுடன் கூடிய நட்புறவு...
இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் குறித்த சர்வதேச விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிவித்தலை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்த மாத இறுதியில் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அந்தப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி விசாரணைகள் எவ்வாறு இடம்பெறவேண்டும்? அதற்கான நிதி எவ்வாறு திரட்டப்பட வேண்டும் போன்ற காரணங்கள் ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்...
இலங்கையின் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மூலோபாய திட்டத்தின் கீழ் நவீன ஹோட்டல்கள் அமைக்கப்படவுள்ள போதும் அதில் கசினோவுக்கு இடமில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது. எனினும் குறித்த ஹோட்டல்களில் உலக தரம் வாய்ந்த கசினோ வர்த்தகம் இடம்பெறும் என்று அவுஸ்திரேலிய கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பெக்கரின் இணையத்தளம் தொடர்ந்தும் கூறிவருகிறது. இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கெசினோ உடன்பாடுகள் குறித்தும் அந்த இணையத்தளத்தில் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது குறித்து அண்மையில்...
  ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்..... *முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள். * மனித...
முதலில் கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கவர்ச்சி என்பது ஆண்களைக் கவரக்கூடியது. இதை ஆங்கிலத்தில் sex appeal என்று கூறுவார்கள். அழகு என்பது அங்க உறுப்புகளின் அளவான தன்மையைப் பொருத்தது. அழகான ஒன்று கவர்ச்சியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைவுதான். பொதுவாக பருவத்தில் எல்லாப் பெண்களுமே அழகு இல்லாதவர்கள்கூட- கவர்ச்சியாகவே இருப்பார்கள். காரணம் இளமை. எல்லாப்...