பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் பதவி ஏற்கவுள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த டேவ் வாட்மோரின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரப்படுத்தியது. இப்பொறுப்புக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிசும் விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து...
பாலிவுட் நடிகை லீபக்‌ஷி எல்லவாடி உடன் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்க்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.பாலிவுட் நடிகைகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே அடிக்கடி இனம் பிரியாத இணைப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் காதல் வலையில் சிக்கி இருப்பது பற்றி பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர்...
காதலியின் பிரிவு என்னை  சோகத்தில் ஆழ்த்தவில்லை என்று இளவரசர் ஹாரி நிரூபித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இளவரசர் ஹாரி, தனது காதலியான க்ரேசிடா போனஸை பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இளவரசர் ஹாரி மற்றும் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் தங்கள் நண்பரான பெல்லி திருமணத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளனர். இந்த திருமண விழாவிற்கு ஹாரி, தனது காதலியுடன் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் மட்டும் தனியாக வந்து திருமண விழாவில்...
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள், சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ள காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சிரியாவில் நடைபெற்று வரும் போர்குற்றங்களுக்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் உதவிசெய்து வருகின்றனர். இவர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள இஸ்லாமியவர்கள் ஆவார். இந்நிலையில், இந்த தீவிரவாதக்குழுவினர், சிரியா பாலைவனத்தில் ஒரு நபரை முழங்காலில் முட்டி போட வைத்து கொலை செய்துள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த காணொளியில்,...
சர்வதேச ஊடக சுதந்திர  தினம்  அனுஸ்டிக்கப்படும் இன்றைய தருணத்தில்  தகவல் அறியும் உரிமை சட்டமாக்கப்பட வேண்டும் என்பதையும்  ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களின்  பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கைத் தமிழ்  ஊடகவியலாளர்கள்  ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டுள்ளது. ஊடக சுதந்திரம் தொடர்பில் அரசாங்கம் வழங்கும் வாக்குறுதிகள்  அனைத்தும் எழுத்தில் மட்டுமே உள்ளதாகவும் நடைமுறையில்  ஊடகத்துறை  மீதான  அச்சுறுத்தல்  தொடர்வதாகவும்  இலங்கைத் தமிழ்  ஊடகவியலாளர்  ஒன்றியத்தின்  செயலாளர் கே.ஜெயேந்திரன்  ஊடக சுதந்திர...
குருநாகல், பொத்துஹெர பகுதியில் புதன்கிழமை (30) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பளைக்கான  ரயில் சேவை  அட்டவணையின்படி இன்று இயங்குவதாகவும் சிறு திருத்தங்கள் இன்று காலையுடன் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பிற்பகல் இரண்டு மணியுடன் ரயில் பாதை முற்று முழுதாக தயாராகுமெனவும்  ரயில்வே அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  
கிளிநொச்சி குமாரசாமிபுரம் கிராமத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி கருதி கனடா மொன்றியல் மாநிலம் விக்ரோறியா றோட் மொன்றியல் வர்த்தகர்களின் அனுசரணையுடன் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் அப்பியாசக்கொப்பிகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அக்கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், மாதர் சங்க பிரதிநிதிகள்ஈ கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகத்தை சேர்ந்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என திரண்டு வந்திருந்தனர். இங்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர் புஸ்பராசா,...
பௌத்த சட்டம் தொடர்பான பேருரையாற்ற பூட்டான் பிரதம நீதியரசர் லியோன்போ சோனம் டெப்பிகியோ இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 10 ம் திகதி அவர் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இந்த உரையை ஆற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய உலக சட்டத்துறையில் பௌத்த சட்டத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
பாகிஸ்தான் உளவாளி முகமது ஜாகீர் உசேன், என்பவரோடு தொடர்பு வைத்திருந்த மேலும் 2 பேர் நேற்று அதிகாலையில் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டின் பயங்கர உளவாளி முகமது ஜாகீர் உசேன், என்பவர் கைது செய்யப்பட்டார். கியூ பிரிவு பொலிஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் 6 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேதின உரையின்போது தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்தொன்று தொடர்பில் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் தனது மேதின உரையில், 'இராணுவத்தை ஒருபோதும் வட மாகாணத்திலிருந்து எடுக்க மாட்டோம் என்று ஜனாதிபதி இறுமாப்பாகக் கூறியதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன். ஒருகாலத்தில் பிரபாகரனும் கேட்பாரின்றி அதிகாரத்தில் இருந்தார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியாயிருந்தும் இப்படியான சவாலான கருத்துக்களை அவர் ஏன் முன்மொழிகின்றார்...