கிளிநொச்சி விவசாயிகளினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை தொடக்கம் கரைச்சி பிரதேச சபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் உறுதிமொழிகளினையடுத்து கைவிடப்பட்டது. இந்நிலையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் தமிழ்த் தேசிய மக்கன் முன்னணியின்...
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என பிரித்தானியாவின் சிங்களப் பேரவைத் தலைவர் டக்ளஸ் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக பொரளாதாரத் தடைகளை விதிக்கும் முனைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் பிரித்தானிய அரசாஙகத்தை கோரத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களை கொள்வனவு செய்வதனை தடுக்க முயற்சிகள்...
  கடனை திருப்பி கொடுக்காத வெங்கட்பிரபு மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார் சோனா. குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்கள¤ல் நடித்திருப்பவர் சோனா. இவர் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன் டைரக்டர் வெங்கட்பிரபுவும், நானும் நட்புடன் இருந்தோம். எனக்கு ஒரு படம் இயக்குவதாக கூறி இருந்தார். இதற்காக என்னிடம் பணம் பெற்றிருந்தார். சில காரணங்களால் அப்படம் டிராப் ஆனது. ஆனால் என்னிடம்...
இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் தனது செல்லப்பிராணியாக முயலை வளர்த்து வருகிறார்.டேரியஸ் என்ற பெயரைக் கொண்ட இந்த முயல், உலகிலேயே மிகப்பெரியது என்று கருதப்படுகிறது. இது சுமார் 4 அடி 4 அங்குலம் நீளம் கொண்டதாகும். குறித்த முயல் உணவாக தினமும் 12 கேரட்டுகளை சாப்பிடுகிறது. அப்படியெனில் இது வருடத்திற்கு சுமார் 4000 கேரட்டுகளை சாப்பிட்டு வருகிறது. இது குறித்து அதன் உரிமையாளர் கூறுகையில் "டேரியஸை பராமரிப்பதற்கு மட்டும்...
தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு சென்ற மிகப்பெரிய சொகுசு கப்பல் விபத்துக்குள்ளானது.கப்பலில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர். விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து பயணிகளை மீட்கும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 179 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீட்பு பணியில் குறிப்பிடத்தக்க வகையில், கப்பல் உள்ளே ஜன்னலை உடைத்து பயணிகள் கேபினில் இருந்து முதன்முதலாக மூன்று சடலங்களை கண்டெடுத்துள்ளனர். இதையடுத்து கப்பல் விபத்தில் பலி...
கூகுள் நிறுவனம் குறைந்த விலையுடைய Nexus சாதனத்தை உற்பத்தி செய்து இந்த வருட இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.பல்வேறு திட்டங்களை தற்போது கூகுள் நிறுவனம் மிகவும் இரகசியமான முறையிலேயே மேற்கொண்டு வருகின்றது. இதானால் அவை தொடர்பான எந்த அறிவிப்பினையும் உத்தியோகபூர்வமாக வெளியிடாது இருக்கும் அந்நிறுவனம், குறித்த திட்டங்களை அறிமுகப்படுத்தும் காலப்பகுதியிலேயே உத்தியோபூர்வ அறிவிப்பினை வெளியிடுகின்றது. அதேபோலவே MediaTek Processor இனை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படும் இப்புதிய Nexus சாதன உற்பத்தியும்...
தற்போது மொபைல் சாதனங்களில் தரவு, தகவல்களை சேமிப்பதில் microSD கார்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.இதன் காரணமாக தொடர்ந்தும் பல்வேறு சேமிப்புக்கொள்ளவு, வேகம் உடைய microSD கார்ட்கள் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக Toshiba நிறுவனம் உலகிலேயே வேகம் கூடிய microSD கார்ட்டினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 260MB/s வேகத்தில் தரவுகளை வாசித்துக்கொள்ளவும், 240MB/s வேகத்தில் தரவுகளை பதித்துக்கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீன் மாதத்தில் ஜீவாவின் "யான்" நடிகர் ஜீவா தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் "யான்". இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் அவர்கள் முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இப்படத்தில் ஜீவாவுடன் "கடல்" நாயகி துளசி நடிக்கிறார்.இவர் நடிகை ராதாவின் இரண்டவது மகள். இவருடைய முதல் மகள் கார்த்திகாவும் ஜீவாவுடன் "கோ"படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபாமேசன் நிறுவனத்தை சேர்ந்த எல்ட்ரைட் குமார் தயாரிக்கிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.இப்படம் வரும் யூன் மாதம்...
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் ஜோடியாக நடித்த படம் நிமிர்ந்து நில். இந்த படத்திற்கு பிறகு ஒரு புதிய படத்தை தானே நடித்து, இயக்கபோவதாக சமுத்திரக்கனி கூறியிருந்தார். மேலும் இந்த படத்தில் நாயகியாக அமலாபால் நடிக்க இருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார். சமீபத்தில் இந்த படத்தில் வரும் ஒரு காட்சிகளுக்காக அமலாபால் ஆடு மேய்ப்பதை கூட கற்று வந்திருந்தார். இந்நிலையில் தற்போது சமுத்திரக்கனிக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு போன் கால்...
வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த வாரம் மாத்தறை பொல்ஹேன பகுதியில் 22 வயதான பிரித்தானிய பெண், தாம் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கை சுற்றுலா சபையில் அறிக்கைப்படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 43 வீதமானோர் பெண்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமக்கு சுற்றுலா வழிகாட்டியாக வந்த ஒருவரே தம்மை துன்புறுத்தியதாக குறித்த பெண்...