மாமியார் ஜெயா பச்சனின் எதிர்ப்பை மீறி மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை மணந்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார் ஐஸ்வர்யாராய். அவரை மீண்டும் படத்தில் நடிக்க பல்வேறு இயக்குனர்கள் அழைப்புவிடுத்தனர். ஆனால் குழந்தை ஆரத்யாவை வளர்க்க வேண்டியதால் ரீ என்ட்ரி வாய்ப்பை ஏற்காமல் இருந்தார். குழந்தை வளர்ந்து பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்த நிலையில் அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்து சரியான...
  சிம்புவிடமிருந்து முற்றிலும் தான் விலகிவிட்டதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார். சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு என்ற படத்தில் நடித்துவந்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர்.இதனை இவர்கள் பகிரங்கமாகவும் அறிவித்தனர். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை சிம்புவின் இந்த காதலும் தோல்வியிலேயே முடிந்ததது. இந்த காதல் பிரிவுக்கு முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சிம்பு நடித்துவருவதுதான் என்று கூறப்பட்டது. மேலும் ஹன்சிகாவின் தாயார் ஆரம்பம் முதலே இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது....
ரஜினிகாந்தின் நடிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்சரிங் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் சவுந்தர்யா மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கோச்சடையானில் என் தந்தை நடித்தது, படத்தை இயக்கும் நான் அவரது மகள் என்பதால் அல்ல. கதை...
ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் தல அஜித் நடிக்கவுள்ள 55 படத்தை பற்றி நேற்று தெரியாத பல தகவல்கள் வெளியாகின. தலயின் 55 படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், மேலும் இந்த படத்தின் டெக்னீஷியன்களை பற்றி விரையில் அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.படப்பிடிப்புக்கு மூன்றே நாட்கள் உள்ள நிலையில் படத்தை பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் கௌதம் மேனன் இந்த படத்தினை ஒரே ஷெடியூலில் முடிக்க...
சூப்பர் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா. பின் அடுத்த ஆண்டே 2 தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்திருந்தார். கடந்த 8 ஆண்டுகளில் 25 தெலுங்கு படங்களிலும், தமிழில் 8 படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அனுஷ்கா தமிழ், தெலுங்கு மொழிகளை விட எந்த மொழிகளிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பெங்களூரு சென்றிருந்த அனுஷ்கா கன்னடப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது முதன்முறையாக கன்னட படத்தில் கமிட்டாகியுள்ளார்...
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் ஜெனரல் ரசாட் மஹ்மூட் வரும் 7ம் நாள் தொடக்கம் 11ம் நாள் வரை சிறிலங்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் சிறிலங்கா இடையிலான நெருக்கமான இராணுவ உறவுகளின் வெளிப்பாடாகவே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. கடந்த நவம்பரில் பாகிஸ்தான் படைகளின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், இவர்...
இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச பங்காளிகளுடன் பிரித்தானியா நெருங்கிய நிலையில் செயற்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே இந்த கருத்தை வலியுறுத்தினார். தம்மைப் பொறுத்தவரை இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை, நல்லிணக்கம் என்பன அந்த நாட்டின் சமாதானத்துக்கு அவசியமானவை என்று கமரூன் சுட்டிக்காட்டினார். இந்த நடைமுறைகளே இலங்கை காத்திரமான இடம் ஒன்றை...
க.பொ.த உயர்தரம் கற்க 1,76,534 மாணவர்கள் தகுதி - 5737 பேர் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி - 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை. 176,534 மாணவர்கள் இவ்வாறு தகுதி பெற்றிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இவர்களில் 5737 பேர் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திபெற்றிருப்பதுடன், பரீட்சைக்குத் தோற்றிய 264,772 மாணவர்களில் 9,444 மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்திபெறவில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். உயர்தரத்திற்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை...
  2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் திகதி காலை ஒரு வழிகாட்டி ஏவுகணை நாசகாரிக் கப்பல் உட்பட ஐந்து சீனக் கடற்படைக் கப்பல்கள் இரசியாவிற்கும் ஜப்பானிற்கும் இடைப்பட்ட பன்னாட்டுக் கடலினூடாக முதல் தடவையாகப் பயணம் செய்தது. இது ஜப்பானுக்கு சீனா காட்டும் பூச்சாண்டியாகவே பார்க்கப்பட்டது. . அதன் படையினரின் எண்ணிக்கை 22 இலட்சமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் அது தனது பாதுகாப்புச் செலவைக் கூட்டிக் கொண்டே போகிறது. பொதுவாக சீன ஆட்சியாளர்கள்...
    தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் மற்றும் மேல், தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல் மாகாண முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும் தென்மாகாண முதலமைச்சராக சான் விஜயலால் டி சில்வாவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.