அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படம் பற்றிய தகவல் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருந்தது, திடீரென்று அந்த படத்தை பற்றிய தகவல் ஒன்றும் வெளி வராத நிலையில் இப்போது புது தகவல் ஒன்று வந்துள்ளது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது, தற்போது கௌதம், படத்திற்கான இசைக்கோர்ப்பு வேலையில் இறங்கியுள்ளார்.
இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு...
வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சித்திரை புத்தாண்டு சேமிப்பு வார்தினை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியும் பரிசுகுலுக்கலும் (28.04.2014) அன்று ஓமந்தை சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா. உதயராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி பயனாளிகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் சேமிப்பில் ஈடுபட்டவர்களுக்கான பரிசுக்குலுக்கல்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு செய்த வேலையை பாராட்டி நினைவு சின்னமும் வழங்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக...
விடுதலைப் புலிகளின் கொடியை பாடசாலைக்கு கொண்டு செல்ல கனேடிய பாடசாலை ஒன்று தடை விதித்துள்ளது.
டொரேன்டோவில் உள்ள குறித்த பாடசாலையில் நடைபெறும் வருடாந்த கலாசார கண்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக தமிழ் மாணவர்கள் விடுதலைப் புலிகளின் கொடியுடன் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இம்முறை கண்காட்சியில் புலிகளின் கொடியை எடுத்து வர தடை விதிப்பது என பாடசாலை அதிபர் தீர்மானித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கொடிகளை மாத்திரம் கண்காட்சிக்கு எடுத்து வர...
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு ஜே.வி.பிக்கு மூளையில்லை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி. ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளதாரம் தெளிவான முன்னேற்றமடைந்துள்ளது. இதனை இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
எனினும் பொருளாதார வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஜே.வி.பி வேண்டும் என்றே முட்டாள்த்தனமாக வாதங்களை முன்வைத்து வருகிறது.
இலங்கையில் மாத்திரமல்ல உலகில் எங்கும் மத்திய வங்கியை...
39 வயதான ரஞ்சித் சிறிவர்தன என்பவரே இந்த சத்தியக்கிரகப் போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளார். மதவாச்சி பொலிஸாரினால் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்ட தான், ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அக்காலப்பகுதியில் பொலிஸார் தன்னை தாக்கியதாகவும் தன்னுடைய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதவாச்சி பொலிஸார் தன்னை சட்டவிரோதமான முறையில் கைது செய்ததாக கூறியும் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதவாச்சி பஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மரத்திலேறி...
மேடைக் கச்சேரிகள் மட்டுமல்லாது ஆயிரம் படங்களுக்கு மேல் டிரம்ஸ் வாசித்தவர் டிரம்ஸ் சிவமணி. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.இந்நிலையில், கின்னஸ் சாதனைக்காக 1000 டிரம்ஸ் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் சிவமணி வாசிக்கும் நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.
இடைவிடாமல் 11 நிமிடம் வாசித்த இந்த சாதனை நிகழ்ச்சி ‘பாரத் புக் ஆப் ரெக்கார்டு’ புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நீதிபதிகள் சங்கத்தின்...
நயன்தாரா பிரகாஷ்ராஜுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.தமிழ், தெலுங்கில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நீ எங்கே என் அன்பே (தெலுங்கில் அனாமிகா). சேகர் கம்முலா இயக்கி உள்ளார். ரிலீசுக்கு முன் இப்படத்தை விளம்பரம் படத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது.
ஆனால் பட ஹீரோயின் நயன்தாரா இது தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து பட தயாரிப்பாளருக்கும்,...
இன்று நாம் காணவிருப்பது இசை துறையில் பிரபலமான பின்னணி பாடகராக திகழும் இளம் இளைஞர் 'யாசின் அவர்களை தான். கோலிசோட என்ற படத்தில் தன் வயது முதிர்ந்த பாடலான "ஜனனம் ஜனனம் " என்ற உத்வேக பாடலை படி பலரையும் மெய் சிலர்க்க வைத்தவர்.
1. சினிமா துறையில் நுழைந்த அனுபவம் பற்றி?
நான் முதலில் பாடியது மலையாளத்தில் தான், என் அப்பாவுக்கு நான் பாடகராக ஆக வேண்டும் என்று ரொம்ப...
இரும்பு குதிரை படத்தில் பைக் ரேஸராக நடித்திருக்கும் லக்ஷ்மி ராய், அடுத்து சுந்தர் சிஇயக்கத்தில் "அரண்மனை" படத்தில் நடித்து வருகிறார்.
'இரும்பு குதிரை' படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், "அரண்மனை" படமும் முடியும் தருவாயில் உள்ளது.
இரும்பு குதிரை படத்தை போலவே அரண்மனை படத்திலும் தனக்கு முக்கிய கதாபாத்திரம் என கூறும் லக்ஷ்மி ராய், இப்படத்தில் எல்லா பசங்களும் அவர் பின்னாடியே சுத்துவாங்க எனவும் கூறியுள்ளார்.
இதற்காகவே, இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும்...
இலங்கை அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடைப்பட்டியலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறித்த அமைப்புக்கள் மீது அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், இந்த தடையை தமது நாட்டில் அமுல்படுத்தப் போவதில்லை என பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தலமையிலான கனேடிய அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது....