லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 171. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் தலைவர் 171 படத்தின் First லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தனர். சும்மா வெறித்தனமாக இருக்கிறது என்பது தான் அனைவருடைய கருத்தாகவும் இருந்தது. லோகேஷ் பேச்சு மேலும் இப்படத்தின் டைட்டில்...
  நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு நம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக மரணமடைந்த டேனியல் பாலாஜிக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 48 வயதாகும் இவர் சித்தி சீரியல் மூலம் அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடித்து திரையுலகில் வில்லனாக மிரட்ட துவங்கினார். பின் வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பைரவா, காக்க காக்க, பிகில் போன்ற படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  நேற்று இரவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது நடிகர் டேனியல் பாலாஜியின் மரணம். மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வழியில் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் கவுதம் மேனன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேற்று இரவு வந்துள்ளனர். 48 வயதாகும் இவர் சித்தி சீரியல் மூலம் அறிமுகமானார் டேனியல் பாலாஜி. வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடித்து திரையுலகில் வில்லனாக மிரட்ட...
  கிருஸ்தவர்களின் ஈஸ்டர் தவக்காலத்தை முன்னிட்டு, ரோம் நகர சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவி, முத்தமிட்டார். சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, இயேசு தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து, அவர்களது பாதங்களை கழுவியதை நினைவுகூரும் விதமாக இந்த சடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதேவேளை இதற்கு முன் போப் பதவி வகித்தவர்களால் வாடிகன் தேவாலயத்தில் கடைபிடிக்கப்பட்டுவந்த சடங்கை, போப் பிரான்சிஸ் முதன்முதலாக சிறைச்சாலைகள், முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள்...
  ஸ்பெயின் நாட்டில் விடப்பட்டுள்ள தொடர் விடுமுறை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸ் விரும்பினார். இதன்படி, ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் அவர் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டுள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு...
  கனடாவில் தனது பெற்றோரை படுகொலை செய்ததாக மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் கென் கெதரீன்ஸ் பகுதி வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. வயது முதிர்ந்த தம்பதியினரின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு மரணங்களுடனும் உயிரிழந்தவர்களின் மகனுக்கு தொடர்பு உண்டு என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். 43 வயதான சீன் ஓவன்ஸ் என்ற நபரை நயகரா பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேரி ஓவன்ஸ் மற்றும் ஹரோல்ட் ஓவன்ஸ் ஆகிய இருவரையும் இந்த நபர்...
  சிரியா மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சிரிய படை வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர். அலெப்போ மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லெபனானின் ஹெஸ்பொல்லா நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கெட் களஞ்சியத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அலெப்போ மாகாணத்தில் ஏனைய இடங்களில் ஈரான் சார்பு குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் பாதுகாப்பு தொழிற்சாலைகளை குறிவைத்து இஸ்ரேலால் தாக்குதல்...
  குரங்கம்மை நோய் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை தொற்று குறித்து பரிசோதனைகளை நடத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். கடந்த ஜனவரி முதல் மாகாணத்தில் 26 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் மொத்தமாகவே 33 குரங்கம்மை நோயாளர்களே மாகாணத்தில் பதிவாகியிருந்தனர்.ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவு பதிவான...
  அமெரிக்காவில் பாலத்தில் மோதிய கப்பலை அகற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கைக்கு பயணித்த குறித்த கொள்கலன் கப்பல் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். படாஸ்கோ ஆற்றின் குறுக்காக நிர்மாணிக்கப்பட்டு வந்த சுமார் 3 கிலோமீற்றர் நீளமான பாலமொன்றே இதன்போது உடைந்து வீழ்ந்துள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் 27 நாட்கள் கடல் பயணமாக இலங்கைக்கு வரவிருந்த கப்பலொன்றே பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. 289 மீற்றர் நீளம் கொண்ட கப்பல் குறித்த கப்பல் விபத்துக்குள்ளாகுவதற்கு முன்னர் அதன்...
  கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் உலகில் பூரண சூரிய கிரகணம் ஒன்று ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கையில் ஒரு தடவை பார்கக்கூடிய இந்த அரிய சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பூரண சூரிய கிரகணம் கனடாவின் நயகரா நீர்வீழ்ச்சிப்...