ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றாலும்இ ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்தியாவின் இலங்கை கொள்கையில் மாற்றம் வரும் என்கிறார் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி சஹாதேவன். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன் மொழியப்பட்டிருக்கும் தீர்மானம் அடுத்தவாரம் ஐநா மன்றத்தின் மனித உரிமை அவையில் கொண்டுவரப்பட இருக்கும் சூழலில்இ இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகள்இ குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்த...
கருணா அம்மான் எனப்படும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ள தனது பிள்ளைகள் தொடர்பில் கருணா அம்மான் தான் பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான தந்தையொருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது அரசாஙகத்தில் மீள்குடியேற்ற துணை அமைச்சராக பதவி வகித்து வருகின்றார். வடக்கு- கிழக்கு மாகாணங்களில் காணாமல்...
இலங்கையில் நடைபெற்று வந்த யுத்தம் இன்று சர்வதேச அளவில் இடம்பிடிக்கும் அளவிற்கு அதனுடைய செயற்பாடுகளை உலக அரங்கிற்கு எடுத்துரைத்தது ஊடகங்களே. அந்தவகையில் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சனல் 4 ஊடகமானது இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்கத்தொடங்கியது. இராணுவ புலனாய்வினரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணப் படங்களே இன்று உலகவளம் வருகின்றது. அதனடிப்படையில் ஜெனிவாவில் நடைபெற்ற அமர்வுகளில் எல்லாம் இலங்கை தொடர்பான ஒளிநாடாக்கள் மட்டுமல்லாது சர்வதேச ஊடகங்களில் கூட புலித்தேவன், ரமேஸ்,...
இலங்கைத் தீவினில் வாழும் சிறுபான்மை இனமக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்ற தன்மையினை ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், பேரணி கள், போன்றவற்றின் ஊடாகத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு வடமா காணசபையை தமிழ்த் தலைமைகளி டம் கொடுத்திருந்தாலும் மக்களுக்காக வழங்கிய வாக்குறுதிகளை தமிழ அரசி யல் தரப்பு இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறதே தவிர அவற்றை நிறைவேற்றமுடியாத கையாலாகாத நிலை யில் இருக்கின்றது என்பது மனவருந்தத்...
மக்களினால் எதிர்பார்க்கப்பட்ட மார்ச் 23 ஜெனிவா மகாநாடு தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றே அனைவராலும் கருதப்பட்ட நிலையில் ஜீ.எல் பீரிஸின் கருத்துக்களானது இலங்கையில் சனல் 4 ஊடகமோ அல்லது ஏனைய ஊடகங்களோ, தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ கூறும் அளவிற்கு எந்தவொரு நடவடிக்கைகளும் நடைபெறவில்லை என்றே இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கருத்துத் தெரிவித்திருந்தார். அவ்வாறாயின் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் எவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றது என்று பார்க்கும்பொழுது, மனிதாபிமான நடவடிக்கைகளையே இராணுவத்தினர்...
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையை கையிலெடுத்துக்கொண்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்கின்ற நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது நெறியாண்மையை வெளிப்படுத்தத் தொடங்கினார். 1947 ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை நடை முறையில் இருந்ததும் மக்கள் வாழ்க்கை நன்கு பரிட்சயமானதுமான பாராளுமன்ற முறைமையினை நீக்கிவிட்டு 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் கீழ் உருவாக்கப்பட்டதே நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஆகும். அரசயில்...
முல்லைத்தீவு கோபாபுலவு கிராம அபிவிருத்தி சங்க தலைவன் பரமேஸ்வரன் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்ப்பதில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் முடிவடைந்து ஏறத்தாழ நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இந்த நான்கு வருடங்களும் பொது சமுக செயல்பாடுகளில் இராணுவ தலையீடுகளை எதிர்த்தும், இராணுவ மயப்படுத்தப்படும் சூழலை கண்டித்தும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில் பல்வேறு பொது சமுக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் போராடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய போராட்டங்களின்...
இலங்கை படைகளினது அச்சுறுத்தல்கள் தடைகளினையும் தாண்டி தமிழ் மக்களுக்கான மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் சாத்வீகப் போராட்டம் ஒன்று இன்று காலை முதல் மன்னார் நகரில் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன. இப் போராட்டமானது மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப் படுகொலைக்கு பக்கச்சார்பற்ற நீதியான சர்வதேச விசாரணை...
தான் கண்காணிக்கப்படுவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அவர்கள் கூறிய குற்றச்சாட்டு ஆதரமற்றது என்று இலங்கை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது. இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அவர்கள், தன்னை இலங்கை அரசாங்க உளவுப் பிரிவினர் கடுமையாகக் கண்காணித்து வருவதாக குற்றஞ்சாட்டியதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் பதிலளித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க அவர்கள் சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்களுக்கு கடிதம்...
இலங்கையின் இடம்பெற்ற மோதலில் தமிழ் மாணவர்கள் 7 பேரும் சிங்கள மாணவர்கள் 3 பேரும் என 10 மாணவர்கள் காயமடைந்து அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்திலுள்ள விடுதியில் நேற்று நள்ளிரவு இந்த மாணவர்களுக்கிடையிலான மோதல் இடம்பெற்றுள்ளதாக சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் காவல்துறை கூறுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் போது மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் எதிரொலியாகவே இந்த...