சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் அமெரிக்க உதவித் திட்டம் தொடர்ந்தும் கவனம்
Thinappuyal News -0
இலங்கை ஏதேச்சாதிகாரத்தை நோக்கி நகர்வதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஏதேச்சாதிகாரம் நோக்கி நகர்ந்த போதிலும், தேர்தல்கள் நடத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டியதென அமெரிக்க உதவித் திட்டத்தின் ஆசிய பிராந்திய வலய பதில் துணை நிர்வாக அதிகாரி டெனிஸ் ரோலீன்ஸ் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர் மக்கள் சொந்த இடங்களில் அல்லது அதற்கு அருகமையில் குடியேறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் அமெரிக்க உதவித் திட்டம் தொடர்ந்தும்...
மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதன் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் கடந்த 29 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் வீசிய மினி சூறாவளியால் அப்பகுதி வாழ் மக்களின் வீட்டுக்கூரைகள் வாழைத்தோட்டங்கள் என்பன சேதமடைந்துள்ளன.
இந்த சேத விபரங்களை சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளோ, அரச...
ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில் யேர்மன்வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வை வெளிநாட்டவர்களின் நிகழ்வுடன் இணைந்து நேற்று வியாழக்கிழமை யேர்மனியில் பல நகரங்களில் (Berlin, Bremen, Hamburg, Stuttgart, Düsseldorf,Göttingen, Saarbrücken, Frankfurt )மிகவும்...
நல்லூர் பிரதேச சபையினால் சுமார் 19.5 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கொக்குவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதியும் மற்றும் கடைத் தொகுதியும் இன்று காலை 8.00 மணியளவில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவினாலும் திறந்து வைக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தலைமையில நடை பெற்ற இந்நிகழ்வில் பெயர்ப் பலகையை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான...
பீரங்கிகளைத் தொட்டு சுட்டுப்பழகியவர்கள் நாம், விளையாட்டு துப்பாக்கிகளுக்கு அஞ்சப்போவதில்லை:
Thinappuyal News -
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலொன்று நடைபெறுமானால் தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டைவிட்டு தப்பியோட வேண்டிய நிலை வரும். பீரங்கிகளைத் தொட்டு சுட்டுப்பழகியவர்கள் நாம், விளையாட்டு துப்பாக்கிகளுக்கு அஞ்சப்போவதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை புத்ததாஸ மைதானத்தில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மேதினக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சித் தலைவருமான சரத் பொன்சேகாவே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு...
சேமிப்புவாரத்தினை முன்னிட்டு நெடுங்கேணி சமுர்த்தி வங்கிச்சங்கத்தினரின் விளையாட்டுப்போட்டி
Thinappuyal -
வவுனியா வடக்கு நெடுங்கேணி சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சேமிப்பு வார்தினை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி இன்றையதினம் (02.05.2014) வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.பரந்தாமன் அவர்களின் தலைமையில் நெடுங்கேணி கதிர்வேலாயுத சுவாமிகள் முருகன் ஆலய முன்னறலில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் கலந்துவெற்றிபெறுபவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -
பௌத்த, மத விவகார அமைச்சின் அனுமதியின்றி எந்த வழிபாட்டுத்தலத்தையும் அமைக்க முடியாது! – புதிய சட்டம்
Thinappuyal News -
பௌத்த மற்றும் மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதியின்றி இனிமேல் நாட்டில் எந்த வழிப்பாட்டுத் தலங்களையும் அமைக்க முடியாது என அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் 20 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் 10 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் பௌத்த வழிப்பாட்டுத் தலங்கள். புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படும் போது வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. சட்டத்திற்கு அப்பால் சென்று மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளினால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாட்டு மக்கள்...
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் சர்ச்சையை ஏற்படுத்திய மேதின உரை-
Thinappuyal News -
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுற்றி வளைத்த நிலையில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளார்.
சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் என்று பொருள்பட பேசியதாக விளங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலர் தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில்...
ஆண்டான்டு காலங்கலாக வாழ்ந்துவருகின்ற மக்களின் சுயநிர்ணயங்களில் ஒன்றான தொழில் தர்மத்தை உலக அரங்கிற்கு காட்டும் ஒன்றாக இந்த உழைப்பாளர் தினம் அமைகின்றது. உலகெங்கிலும் நெற்றி வியர்வைசிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தினப்புயல் பத்திரிகை சிரம்தாழ்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. போரின் அடிமைவிலங்கினை உடைத்து சுதந்திரக்காற்றை சுவாசிக்காத போதிலும் மனித வாழ்க்கையில் உழைப்பு என்பது இன்றியமையாததொன்று. நாட்டின் சுதந்திரம் இறையாண்மை பேணப்பட்டு வராதபோதிலும் தொழிலாளர்களின் முயற்சிகளின் மூலமே இன்று ஒவ்வொரு நாடும்...
தொழலாளர்களின் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் 80 ஆவது தொழிலாளர் தினம் நாடாளவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக
மட்டக்களப்பு,
அம்பாறை,
கிண்ணியா,
வவுனியா,
திருக்கோவில்,
கிளிநொச்சி,
கண்டி,
கல்முனை,
தலவாக்கலை ஆகிய இடங்களில் இடம் பெற்ற நிகழ்வுகளின் தொகுப்புக்கள் இங்கே இணைக்கப்படுகின்றது.