இலங்கை வந்த பாகிஸ்தானின் இராணுவ குழு கடந்த திங்கட்கிழமைஇன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. குறித்த குழுவினரை இலங்கை இராணுவத்தினர் அழைத்துச் சென்று யாழ்.கோட்டைப் பகுதியை காண்பித்தனர்.
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினரே இந்தப் பயணத்தில் இடம்பெற்றிருந்தனர். தாம் பல்வேறு நாடுகளுக்கும் இவ்வாறான பயணங்களில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தக் குழுவினர் யாழ்.கோட்டைப் பகுதியை பார்வையிட்டதன் பின்னர் யாழ். துரையப்பா மைதானத்திலிருந்து உலங்கு வானூர்தியில் புறப்பட்டுச் சென்றனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் பலர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தளமிட்டிருப்பதாக புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரபாகரனுடைய தலைமைத்துவம் அல்லாது விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை வைத்து மீளவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இலங்கையரசிற்கு ஒருபக்கம் ஆதரவை தெரிவிக்கும் அமெரிக்கா மறுபுறத்தில் எதிர்ப்பையும் காட்டிவருகிறது. ஜெனிவாத் தீர்மானத்தின் போதும் தமிழ் மக்களுக்காதரவாக அமெரிக்க அரசு செயற்பட்டுவந்தது. அமெரிக்க அரசானது தனது சுயநலத்திற்காக விடுதலைப்புலிகளை...
பௌத்த மதம் பற்றி கற்பிக்க வேண்டிய நீங்கள் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது- அசாத் சாலி
Thinappuyal News -
முஸ்லிம் மக்கள் பற்றி முன்னெடுத்து வரும் பிரசாரம் சம்பந்தமாக தன்னுடன் பகிரங்க நேரடி விவாதத்திற்கு வருமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, பொதுபால சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பொதுபல சேனா அமைப்பு கடந்த ஒன்றரை வருடங்களாக முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு எதிராக முன்னெடுத்து பகையான வேலைத்திட்டங்கள் தொடர்பில் மிகவும் உன்னிப்பாக...
நிர்மாணம், இயக்கம் மற்றும் மாற்றுகை (பிஓடி) என்ற திட்டத்தின் வடக்குக்கான அதிவேக பாதை அமைப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் தற்போது சீன நிறுவனம் ஒன்றுடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாக பெருந்தெருக்கள் துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இந்த பாதை தம்புள்ளையில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. இந்தப்பாதை எந்தரமுல்ல என்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கும். அத்துடன் கொழும்பின் சுற்றுப்புற பாதைகளான கம்பஹா, மீரிகம, குருநாகல் முதல் தம்புள்ளை ஆகிய இடங்களில் வெளியேறும்...
இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்கள், தாதியர் பயிற்சி நெறிறை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்டதாக இராணுவத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிப்பெற்ற 10 தமிழ் பெண்களுக்கு அண்மையில் கிளிநொச்சி இராணுவ படைத்தளத்தில் வைத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக இந்த பயிற்சியின்போது தமிழ்பெண்களுக்கு முதலுதவிகள், சத்திரசிகிச்சையின் போது மேற்கொள்ளப்படும் உதவிகள், முகாமைத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
இதன்போது பயிற்சிகளில் சிறப்பாக செயற்பட்ட ஆர்.இன்சார், பி.சிபோரா மற்றும் பி.பிரிசில்லா ஆகியோருக்கு விருதுகளும் வழங்கப்பட்டதாக இராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டமை தொடர்பான திடுக்கிடும் தகவல்கள்.
Thinappuyal News -
வரணிப் புதைகுழிகள் மூடப்பட்டன!! இரவுபகலாக கனரக வாகனங்கள் சகிதம் லங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய படைத்தளமாக இருந்ததும் முன்னைய முன்னரங்க நிலையான முகமாலைக்கான விநியோக தளமாகவும் இருந்த வரணிப் புதைகுழிகள் மூடப்பட்டன. இரவுபகலாக கனரக வாகனங்கள் சகிதம் மூடப்பட்டன. படைத்தளத்தினிலிருந்த பாரிய வெளியாகியுள்ளது.
இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் 1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையினில் பருத்தித்துறை – கொடிகாமம் வீதியினில் வரணியினில் பெருமளவு நிலப்பரப்பினை ஆக்கிரமித்து 522 வது படைத்தளம் அமைக்கப்பட்டிருந்தது....
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தின் வெடிவைத்தகல் காட்டுப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் விமானிகளில் ஒருவரும் அந்த அமைப்பை மீன்டும் இலங்கையில் உருவாக்க முன்னின்றவர் எனவும் பாதுகாப்பு தரப்பால் அடையாளப்படுத்தப்பட்ட தேவியன் பயன்படுத்தியதாக கூறப்படும் வேன் வண்டியை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ். நல்லூர் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வேனானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட குறித்த வேனானது...
ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது இன்றைய தினத்திலாகும்.
Thinappuyal News -
ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம்
சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.
1999இன் நடுப் பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, “புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்” என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார்.
ஆனையிறவு...