வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வெடிவைத்தகல் கிராமத்தில் இடம் பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டவர்களின் சடலங்கள் பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவெளை இச் சடலங்களின் மரணவிசாரணை நடத்தும் அதிகாரமும்  அனுராதபுரம் நீதிவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும தெரியவருகின்றது. வவுனியா நெடுங்கேணி சேமமடு வீதியில் உள்ள வெடிவைத்தகல் பிரதேசத்தில்  மக்கள் குடிமனையற்ற  மூன்று உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக...
அணையாத் தீபம் அன்னை பூபதியின் இருபத்தியாறாம் ஆண்டு நினைவுநாளும் நாட்டுப்பற்றாளர் தினமும் டென்மார்க்கில் வையின் நகரத்தில் நினைவுகூரப்பட்டது. பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள் திரு. கணேசையா விமலேஸ்வரன் திரு.தம்பிஐயா மார்க்கண்டு திரு.செல்வராசா ஸ்ரெபஸ்ரியன் திரு.மதியழகன் கார்த்திகேசு அவர்களின் திருவுருவ படங்களிற்கு அவர்களின் குடும்பத்தினரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களால் மலர் வணக்கம் சுடர் வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் எழுச்சி கானங்களோடு நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து...
நாங்கள் மண் மீது கொண்டிருந்த பற்று காரணமாகவே வருடக்கணக்கில் போரிட்டோம். வடக்கு மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகளே அதற்கு சாட்சியாகும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். வெருகலில் நடைபெற்ற வெருகல் படுகொலை நினைவு தினத்தின் நினைவுரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஒஸ்லோ உடன்படிக்கையையும் 2002 சமாதான ஒப்பந்தத்தையும் கிழித்தெறிய வழிசமைத்த முதலாவது யுத்த நிறுத்த மீறல்...
நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு இராணுவ படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த மோதல் சம்பவத்தில் பிரதான தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒருவரான...
  பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர் என்றும் சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதும் இலங்கையில் நடக்கும் விடயங்களே நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு...
  ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்த அரசுத் தலைமைப் பீடம் தீர்மானித்துவிட்டது. அரசுடன் நெருங்கிய வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதியாகத் தெரிவித்தாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 28ம் திகதி நடைபெற்ற தென்மாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிக்கச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச, அச்சமயம் தம்மைச் சந்தித்த செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என்று கோடிகாட்டியிருந்தார். அதன்படி 2016 நவம்பரில்தான் புதிய ஜனாதிபதியின் பதவிக்...
பாகிஸ்தானின் தலை நகரான இஸ்லாமபாத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள சந்தை ஒன்றில் கைக் குண்டு வெடித்ததில் குறைந்த பட்சம் 23 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. பழக் கூடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு வெடித்ததில் பலர் காயமுற்றுள்ளதாகவும், அந்த நகர் மக்களை இச் சம்பவம் வேதனையிலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளாதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமபாத்திற்கு மிக அன்மையிலுள்ள ராவல்பிண்டி நகரில் இடம் பெற்ற இக் குண்டு வெடிப்புச் சம்பவமானது, இப் பகுதியில்...
  ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன? ஜெனீவாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார்? அதற்கான காரணிகள் எவை? , ஈழத்தமிழரின் தேவை, நோக்கம் என்ன?, அதை எப்படி அடையலாம்? , அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன லாபம்? தீர்மானத்தின் வெற்றிக்கு உழைத்தோர், தீர்மானத்தை ஆதரிப்போர் யார்? தீர்மானத்தை எதிர்ப்போர் யார் யார் அவர்களின் தேவை  நோக்கம் என்ன?. அடுத்து என்ன நடக்கலாம்.தமிழரின் செயற்பாடுகள் எப்படி இருக்கவேண்டும்? ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன?. இலங்கையில் தனிமனித சுதந்திரம்,ஊடக சுதந்திரம்,பேச்சுச் சுதந்திரம், ஒன்று  கூடும் சுதந்திரம் போன்றவை சரியாக இல்லை. மனிதஉரிமை மீறல்கள் மனிதத்திற்கெதிரான குற்றங்கள்...
  விடுதலைப் புலிகள் மீது குற்றத்தினை சுமத்தி அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரால் பொது மக்கள் கொல்லப்பட்டமையே அதிகம். இதற்கான சுயாதீனமான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று செனல்-4 ஊடவியலாளர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளும் எவ்வித திட்டமும் எமக்கில்லை. நாம் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக நினைத்து அரசாங்கம் எம்மை எதிர்க்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஸ்ரீகொத்தாவில் நேற்று ஐக்கிய தேசியக்...
 . தனது 66ஆவது சுதந்திர நாளைச் சிறிலங்கா கொண்டாடும் இந்த வேளை சிறிலங்காவிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைதியையும் நீதியையும் சம உரிமையையும் நிலைநாட்ட சர்வதேயத்தின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். எதிர்வரும் மார்ச் மாதம் யெனீவாவில் சிறி லங்காவுக்கு எதிராகப் போர்க் குற்றங்கள், மாந்த நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழின அழிப்புத் தொடர்பாகச் சர்வதேய சுயாதீன விசாரணை மேற்கொள்ளும் பயனுள்ள தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என...