சூப்பர் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா. பின் அடுத்த ஆண்டே 2 தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்திருந்தார். கடந்த 8 ஆண்டுகளில் 25 தெலுங்கு படங்களிலும், தமிழில் 8 படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அனுஷ்கா தமிழ், தெலுங்கு மொழிகளை விட எந்த மொழிகளிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பெங்களூரு சென்றிருந்த அனுஷ்கா கன்னடப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது முதன்முறையாக கன்னட படத்தில் கமிட்டாகியுள்ளார்...
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் ஜெனரல் ரசாட் மஹ்மூட் வரும் 7ம் நாள் தொடக்கம் 11ம் நாள் வரை சிறிலங்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் சிறிலங்கா இடையிலான நெருக்கமான இராணுவ உறவுகளின் வெளிப்பாடாகவே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. கடந்த நவம்பரில் பாகிஸ்தான் படைகளின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், இவர்...
இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச பங்காளிகளுடன் பிரித்தானியா நெருங்கிய நிலையில் செயற்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே இந்த கருத்தை வலியுறுத்தினார். தம்மைப் பொறுத்தவரை இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை, நல்லிணக்கம் என்பன அந்த நாட்டின் சமாதானத்துக்கு அவசியமானவை என்று கமரூன் சுட்டிக்காட்டினார். இந்த நடைமுறைகளே இலங்கை காத்திரமான இடம் ஒன்றை...
க.பொ.த உயர்தரம் கற்க 1,76,534 மாணவர்கள் தகுதி - 5737 பேர் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி - 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை. 176,534 மாணவர்கள் இவ்வாறு தகுதி பெற்றிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இவர்களில் 5737 பேர் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திபெற்றிருப்பதுடன், பரீட்சைக்குத் தோற்றிய 264,772 மாணவர்களில் 9,444 மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்திபெறவில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். உயர்தரத்திற்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை...
  2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் திகதி காலை ஒரு வழிகாட்டி ஏவுகணை நாசகாரிக் கப்பல் உட்பட ஐந்து சீனக் கடற்படைக் கப்பல்கள் இரசியாவிற்கும் ஜப்பானிற்கும் இடைப்பட்ட பன்னாட்டுக் கடலினூடாக முதல் தடவையாகப் பயணம் செய்தது. இது ஜப்பானுக்கு சீனா காட்டும் பூச்சாண்டியாகவே பார்க்கப்பட்டது. . அதன் படையினரின் எண்ணிக்கை 22 இலட்சமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் அது தனது பாதுகாப்புச் செலவைக் கூட்டிக் கொண்டே போகிறது. பொதுவாக சீன ஆட்சியாளர்கள்...
    தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் மற்றும் மேல், தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல் மாகாண முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும் தென்மாகாண முதலமைச்சராக சான் விஜயலால் டி சில்வாவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.  
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்குலக நாடுகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களிடையே பல்வேறு பிரபதிலிப்புக்களைத் தோற்றுவித்துள்ளது. ஜெனீவாவில் மிகப் பெரும் அதிசயம் நிகழப் போகின்றது என எதிர்பார்த்திருந்து ஏமாற்றத்திற்கும், அதன் விளைவாக விரக்திக்கும் ஆளானவர்களைப் பொறுத்தவரை ஏதோ ஒன்று நடந்திருக்கின்றது என்ற ஆசுவாசம் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. மறுபுறத்தில் ஜெனீவா தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று ஆதங்கப்பட்டவர்களுக்கும் ஏதோ...
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக,  பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும், தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப் புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க...
தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிகளில் பங்கெடுக்கமாட்டோமென கூறி வந்த கூட்டமைப்பு தலைமை தற்போது அதனை கைவிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் உள்ளிட்ட குழுவொன்று ஆரம்ப கட்டப்பேச்சுக்களிற்காக அங்கு பயணிக்கவுள்ளமையினை அம்பலப்படுத்தியுள்ளார் சிவாஜிலிங்கம். அதே வேளை   இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்கா முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையினை ஏற்கமுடியாது என்றும் அவ்வாறான முயற்சியினை நிராகரிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் மேலும்...
  நேற்று வெளியாகிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முன்னணி வகிக்கின்றது. இந்தப் பாசாலையில் தோற்றிய மாணவர்களில் 28பேர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். பாடசாலை ரீதியாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி 9ஏ தரச் சித்தி பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு: வேம்படி மகளிர் உயர் தரப் பாடசாலை ஆங்கில மொழி மூலம் - அபிராமி ரவிதரன், ஜனந்தினி சிவபாலன்,...