அரசாங்க சொத்துக்களை சொந்த சொத்துக்களாக கருதி தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
ஆளும் கட்சிக்குள் பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக மவ்பிம லங்கா கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி தொடர்பிலான மாற்றங்களை தெளிவாக அவதானிக்க முடியும்.
ஆளும் கட்சிக்குள் உள் முரண்பாட்டு...
ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம்- வைகோ
ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம் - வைகோ அவர்கள் இயக்கியுள்ள ஆவணப்படம்
TPAN NEWS
இதயத்தை அறுக்கும் ஈழத்து வீடியோ- ஈழப்போரின் இறுதி யுத்தம்
முகவரியில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறும்படம் பிறந்த மண்ணில் முகவரி துறந்து அகதிகளாய் துன்பக்காற்றையே சுவாசித்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலையும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை எடுத்துக் கூறுகிறது.
TPN NEWS
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு
மொத்தமாக 230 பேர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவினர் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இரண்டு தினங்களும், முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இரண்டு தினங்களும் விசாரணைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 60 பேரிடம்...
அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம்
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
பலஸ்தீனம் மீதான தாக்குதல்களைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக...
வெளிநாட்டு நியமனங்கள் தொடர்பபில் அனுரகுமார வெளியிட்ட மகிந்தரின் இரகசியம் அம்பலம்
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி நேற்று கடுமையாக விமர்சித்தது. வெளிநாட்டு சேவைக்காக வழங்கப்பட்டுள்ள நியமனங்களில் பெரும்பாலானவை அரசியல் நியமனங்களாகும் என சபை ஒத்திவைப்பு வேளை மீதான பிரேரணையை சமர்ப்பித்து, சபையில் உரையாற்றிய...
அமெரிக்கா கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அவருக்கெதிராக சாட்சியங்களும், ஆதாரங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும்-ருவான் வணிகசூரிய
“இலங்கையின் இறுதிப்போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர அமெரிக்காவால் முடியாது” என்று பாதுகாப்பு அமைச்சின்...
வடக்கு கிழக்கில் புதிதாக பௌத்த மத வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்படுகின்றன– சம்பந்தன்
தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
காலவரதேய சட்டம் தொடர்பிலான நாடாளுன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்து...
விமல் வீரவன்சவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில் 12 அம்ச கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது.
இந்தக்...
அவுஸ்திரேலியா அகதிகள் பிரகடனத்தை மீறிச்செயற்பட்டு வருகின்றது – சர்வதேச மன்னிப்புச்சபை
அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் தமிழர்களே...