பிராந்திய செய்திகள்

கொழும்பு கொட்டஹேன பகுதியில் பதற்றம் தந்தை, மகன் மகள் சடலமாக மீட்பு

கொட்டாஞ்சேனை - சாந்த பெனடிக் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் மூன்று சடலங்கள் இன்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை ,மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் விஷம் அருந்தி தற்கொலை...

மகளின் திருமண நிகழ்வில் தந்தை இறந்த சோகம்.

பெற்ற மகளின் திருமண நிகழ்வில் தந்தை ஒருவர் உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று குருணாகல் மாவட்டம் பொல்பித்திகம, மடஹபொல பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது. மகளுக்கு மணமேடையில் திருமண சடங்கு நடைபெறுவதை பார்த்து கொண்டிருந்த தந்தை...

நாக தோஷம் நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் செய்யும் வல்லிபுர ஆழ்வார்.

இலங்கையின் வட மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள விஷ்ணு ஆலயம் மிகவும் சிறப்புமிக்க ஆலயமாகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரமே உள்ளது. வல்லிபுர ஆழ்வார் கோவில்...

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை

திருகோணமலை - முதலியார் குளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை நேற்று (18) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் திருகோணமலை...

அட்டனில் மக்கள் சந்திப்பின் மூலமாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தலைமையில் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி...

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மக்கள் சந்திப்பு, மக்கள் மன்றம் எனும் தொனிப்பொருளில் அட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் 19.08.2016 (வெள்ளிக்கிழமை) அதாவது இன்றையதினம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தலைமையில் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின்...

மன்னார் தோட்டவெளியில் தர்ஷினிக்கு காத்திருந்த துயரம்…

மன்னார் தோட்டவெளி பகுதியில் காதலித்தவன் தன்னை ஏமாற்றியதால் மனமுடைந்து நிலையில் தர்ஷினி வயது 26 எனும் ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்துவந்த யுவதி துாக்கில் தொங்கி உயிரிழந்துள்ளாள்.. தாயார் தோட்ட வேலைக்குச் சென்று வீடு திரும்பிய...

படுவான்கரை பகுதியில் காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாய மரணச்சான்றிதழ்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் கடந்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு வலுக்கட்டாயமான முறையில் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய மக்கள் கருத்தறிதல்...

வடக்கில் களைக்கட்டியுள்ள சிறு போக வெங்காயச் செய்கை! விளைச்சல் அமோகம்

யாழ். வலிகாமம் பகுதியில் பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் பயிரிடப்படுள்ள பெரும் போக வெங்காயச் செய்கை அறுவடை நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. இம்முறை வெங்காயத்தின் விளைச்சல் அமோகமாகவுள்ளதாக வலிகாமம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சுன்னாகம்,...

மோசடியான முறையில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 185 மாணவர்கள்!

நுவரெலியா மாவட்டத்தில் 17 பாடசாலைகளில் 185 மாணவர்கள் மோசடியான முறையில் இம்முறை நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டள்ளது. போலியான முறையில் அடையாள அட்டைகளை தயாரித்து இவ்வாறு பரீட்சைக்கு...

நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் அவர்களின் ஊடக சந்திப்பு

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான நேரடி அபிவிருத்திகளை முன்னெடுக்கும் நோக்கில் முதல் தடவையாக தமிழர் ஒருவருக்கு அமைப்பாளர் பதவியை வழங்கியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட...