பிராந்திய செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெளத்த விகாரை அமைக்கப்படவேண்டும் எனக்கோரி துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்திற்குள் கலைப்பீடப் பகுதியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மேற்படி துண்டு பிரசுரங்கள் இன்று காலை அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் – ஆசிரியருக்கு பொலிஸ் விசாரணை

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01 முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால்...

யாழ்.மத்திய பேருந்து நிலைய மலசலகூடம் மூடியுள்ளதனால் பயணிகள் அசௌகரியம்!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மலசலகூடம் கடந்த 2 வாரங்களாக பூட்டப்பட்டிருக்கும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்துவரும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர். இந்தநிலையில், மேற்படி மலசலகூடத்தின் மலக்குழி நிறைந்துள்ள நிலையில் அதனை...

பெண்ணின் வயிற்றில் 8 கிலோ கல் – டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சைக்கு வெற்றி

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை 26.01.2016 அன்று மேற்கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றில் சாதனைப்படைத்துள்ளது. அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நான்கு மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் மூலம் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக...

முல்லைமாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தில் காணி பிணக்குகள் சம்மந்தமாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் எடுத்துரைப்பு.

25.01.2016 அன்று நடைபெற்ற மாவட்ட இணைக்குழு கூட்டத்தில் காணி தொடர்பான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் உரையாற்றினார். முக்கியமாக முற்றிலும்...

கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சம்பூர் - 07 ஆம் வட்டாரத்தில் கல்லொன்றுடன் கட்டப்பட்ட நிலையில்  கிணற்றில் வீசப்பட்ட சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று அதிகாலை 12.10 மணியளவில்...

மலையக மக்களை இலக்கு வைக்கும் ‘சிறுநீரக வியாபாரக் கும்பல்கள்’

இலங்கையின் மலையகத்தில் வறுமையில் பிடியில் வாடும் தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுவருவதாக மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்களை இலக்குவைத்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள்...

சேயா கொலை வழக்கு 25.01.2016 முதல் நாள்தோறும் விசாரணை

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா சதவ்மியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கு இன்று முதல் நாள்தோறும் விசாரணைக்கு எழுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷம்பா...

வடக்கில் படையினரின் வசமுள்ள பொது மக்களின் காணிகள் குறித்த தகவல்கள் திரட்டப்படும்

வடக்கில் படையினரின் வசம் உள்ள பொது மக்களின் தனியார் காணிகள் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தகவல்களைத் திரட்டவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார் இவ்வாறு திரட்டப்படும் தகவல்களை ஜனாதிபதிக்கு...

பாடசாலை மாணவியின் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு கண்டனம் தெரிவித்து பெற்றோர் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கறுவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியரினால் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர் பாடசாலையின் வாயிலை மூடி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர். வல்லுறவுக்குட்படுத்திய ஆசிரியரை சட்டத்தின் முன் நிறுத்து, உடந்தையாக...