நூருள் ஹுதா உமர் அரசாங்கத்தின் கொள்கை சட்டமான “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின்கீழ் பிரதமரும் மற்றும் மதவிவகார அலுவல்கள் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களது வழிகாட்டுதலின்கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அம்பாரை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட ஆலயங்களின் அபிவிருத்திக்கான கொடுப்பனவு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் தலைமையில்...
  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் லட்ச கணக்கில் அபராதம் விதித்துள்ளது. செப்டம்பர் 21ம் திகதி (செவ்வாய்க்கிழமை) இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தா்ன ராயல்ஸ் அணி கடைசி ஓவரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப்பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்து வீசாமல் ராஜஸ்தான் அணி அதிகமான நேரம் பந்து வீசுவதற்கு...
  ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியுடனான தோல்வி குறித்து மனம் நொந்து பேசியுள்ளார் பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல். ஐபிஎல் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியின் கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 4 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் அதை...
  பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமேஷ் ராஜா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து செய்த துரோகத்திற்கு பழி தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். டாம் லாதம் தலையிலான நியூசிலாந்து அணி சமீபத்தில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருந்தது. இதற்காக நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் வந்தது. ஆனால் முதல் ஒருநாள் போட்டி துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு திடீரென்று பாதுகாப்பு அச்சுறுத்தல்...
  ராஜ்ஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், கடைசி ஓவரில் 6 ஓட்டங்கள் அடிக்க முடியாமல் தோற்ற வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், சஞ்சு சாம்சன் தலையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் வெற்றியின் அருகில் வந்த பஞ்சாப் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஆட்டத்தின் கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின்...
  மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளரான பும்ராவின் பந்து வீச்சை யாரால் எளிதாக அடிக்க முடியும் என்பதை முன்னாள் இந்திய வீரர் காம்பீர் கூறியுள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த முறை ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி ஜெயிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கோலி தலைமையிலான...
  அனுபவ வீரர் ஷிகர் தவான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எளிதாக வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ். ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துடுப்பாட்டம் தெரிவு செய்தது. இதனையடுத்து டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அன்ரிச்...
  நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. பஞ்சாப் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் அணிக்கு எதிராக எதிர்பாராத தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் வீரர் தீபக் ஹூடா, இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்திருந்த புகைப்படம் ஒன்று சூதாட்ட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி ஆரம்பமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ‘ஆரம்பிக்கலாங்களா’ என கேப்ஷன் கொடுத்து ஹெல்மெட்டை அணியும் தனது...
  ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி வீரர் அஸ்வின் விக்கெட் எதுவும் வீழ்த்தாத நிலையில் அவர் பந்துவீச்சு தொடர்பில் இந்திய கேப்டனாக தோனி நடந்து கொண்ட விதம் குறித்து சேவாக் பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 2.5 ஓவர்கள் வீசி 22 ரன்களை கொடுத்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஒரு விக்கெட்டை...