“அநுர அரசு பெற்றுக்கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே அரசுக்கு ஆட்சியமைக்க முடியும். 170 மன்றங்களில் அரசால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்குத் தயார்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...
  கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (08) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில் இப் போராட்டம் ஆரம்பமானது. இதைத்தொடர்ந்து இராஜேஸ்வரி கல்வி நிலையத்திற்கு பேரணியாக சென்று அங்கு தமது எதிர்ப்பை மக்கள் தெரிவித்தனர். அத்துடன், ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்னாலும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன் பின்னர், கொட்டாஞ்சேனை கல்பொத்த...
  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (8) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நடைபெற்று...
  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மட்டக்களப்பு மாவட்டம் – மண்முனை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள். இலங்கை தமிழரசுக் கட்சி – 7,400 வாக்குகள் – 10 ஆசனங்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 2,630 வாக்குகள் – 3 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 2,497 வாக்குகள் – 3 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,217 வாக்குகள் – 1 ஆசனம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்...
  இதுவரை வெளியான மொத்த வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை பெறும் கட்சி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இதற்கமைய வௌியான 123 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,   தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,329,158 வாக்குகள் - 1,238 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 630,774 வாக்குகள் - 527 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
திருகோணமலை  - திருகோணமலை மாநகர சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 8,495 வாக்குகள் - 9 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி - 5.825 வாக்குகள் - 6 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,500 வாக்குகள் - 4 ஆசனங்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 409 வாக்குகள் - 3 ஆசனங்கள். சுயேட்சை குழு 2 - 747 வாக்குகள் - 1 ஆசனம். சுயேட்சை குழு...
  நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாநகரசபை இலங்கை தமிழரசுக் கட்சி 10 வட்டார ஆசனங்கள் + 3 போனஸ் ஆசனங்கள் மொத்தம் 13 தமிழ்த் தேசிய பேரவை 11+1 = 12 தேசிய மக்கள் சக்தி 4+6 = 10 ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 2+2 =4 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வட்டாரம் ஆசனம்...
  உள்ளூராட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு ஓரளவு குறைந்த வாக்குப்பதிவோடு அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது. அதன்படி, இன்று காலை 7.00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது. வாக்கு எண்ணும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா? நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்டத்தில் இதுவரை 34 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (06) காலை 7மணி முதல் மதியம் 01 மணி...
  உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களித்ததன் பின்னர் அமைதியாக வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றும், நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை முறையாகக்  கடைப்பிடியுங்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற...
  வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி மின் நினைவிடத்தை பார்வையிட்ட அநுரகுமார, சுதந்திரப் போராட்டத் தலைவரும், சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் இன் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...