தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட் வெஸ்டன் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
தல்வாக்கலையிலிருந்து கிரேட் வெஸ்டன் நேர்க கிச் சென்ற முச்சக்கர வண்டியும் கிரேட் வெஸ்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேராக மோதியே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்துடன் சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி...
(மன்னார் நகர் நிருபர்)
கடந்த சில நாட்களாக வடக்கு-கிழக்கு பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ் நில பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இரவு பெய்த மழை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது. மன்னாரின் தாழ் நில பிரதேசங்களான சாந்திபுரம், ஜிம்றோன் நகர், எமில் நகர், உப்புக்குளம், எழுத்தூர், இருதயபுரம் போன்ற பிரதேசங்களே மேற்படி...
உலகை ஆட்டிப் படைக்கும் கொடிய வியாதிகளில் ஒன்றான புற்றுநோயை, முருங்கை கீரையைக் கொண்டு குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் முருங்கை கீரையானது புற்றுநோய் வரை குணப்படுத்தும் தன்மை கொண்டது என தெரிய வந்துள்ளது.
முருங்கை கீரையில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வைட்டமின் A, வைட்டமின்கள் B1, B2, B3, B6,...
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 100 வது நாளாக தொடர்சியாக இடம் பெற்று வருகின்றது தெடர்ச்சியாக மழை பெய்துகொண்டு இருக்கின்ற போதும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவண ராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு பணியானது இடம் பெற்று வருகின்றது.
கடந்த வியாழக்கிழமைக்கு பின்னர் காலை 100வது தடவையாக அகழ்வுப் பணியானது இடம்...
நடிகை திரிஷா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு அண்மையில் வெளியான 96 படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதில் அவருக்கு ஸ்பெஷல் கொடுத்த அந்த மஞ்சள் கலர் சுடிதார் தான். இந்த வருட தீபாவளிக்கு அனைத்து கடைகளிலும் சேல்ஸ்க்கு வந்துவிட்டது. பலரும் அதை வாங்கி அணிந்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் திரிஷா தான் ஆசையாக வளர்த்து வரும் செல்லப்பிராணி நாய்க்கு அதே போல...
அரசாங்க திணைக்களம் மற்றும் நிறுவனங்களில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் செயலற்ற முறையில் காணப்படுவதாக அந்தந்த பிரிவுகளின் பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் விலகியமை மற்றும் அமைச்சர்கள் மீண்டும் நியமிக்கும் நடவடிக்கைகள் முழுமையடையாமையினால், இந்த நெருக்கடி...
பிரித்தானியாவில் வசிக்காத போதும், பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும்
Thinappuyal News -
பிரித்தானியாவில் வசிக்காத இலங்கையர்களும் கூட பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, கென்யா, பிஜி, உள்ளிட்ட பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரித்தானியாவில் வசிக்காத போதும், பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரித்தானிய ஆயுதப்படைகளில் சேர்த்துக் கொள்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்தும் இந்த முடிவு பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு, இங்கிலாந்தில் 10 ஆயிரம் விளக்குகளை ஒளிரவிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்விற்காக லண்டன் சதுக்கம் ஆயிரக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பழங்கால கோட்டையின் மேலேறிய இராணுவ வீரர் ஒருவர், குழல் இசையை இசைத்து அஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தீப்பந்தம் ஏந்தி வந்த வீரர் ஒருவர் கோட்டையைச் சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்களை ஏற்றியதைத் தொடர்ந்து போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 179 குடும்பங்கள் 656 பேர் இடம்பெயர்ந்து 3 பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை கொழும்புக்கான புகையிரத சேவை மற்றும் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக இடர் அனர்த்த முகாமைத்துவ மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.சி முகமட் றியாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை...
பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு அனைத்து பஸ் சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை குறைவடைந்தமைக்கு அமைவாக பஸ் கட்டணத்தை 2 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எரிபொருள் விலை குறைவடைந்ததன் பலனை...