இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 2018 ஆம் ஆண்டில் இதுவரை ஏறத்தாழ 600 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கியுள்ளது. அமெரிக்க நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மற்றும் பயனாளிகளை சந்திக்கும் நோக்கில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆயுதங்களை அகற்றுதல் மற்றும் தடுத்தல் தொடர்பான அலுவலகத்தின் தூதுக்குழுவொன்று ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது. இந்தக் குழுவினர்...
13 ஆவது டயலொக் சம்பியன் லீக் உதைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப போட்டியில் ஆடிய பேருவளை சுப்பர் சன் மற்றும் வெண்ணப்புவ நிவ் யங் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டி 1-−1 என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் நிறைவு பெற்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியில் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் வெண்ணப்புவ அணி 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் பேருவளை...
மாகாண சபை தேர்தலை பிற்போடுவது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து அரசாங்கத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார். மாகாண சபைகளின் அதிகாரத்தை ஆளுநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வழங்குவது ஜனநாயகமற்ற செயற்பாடு என்றும் சர்வாதிகாரத்திற்கு ஒப்பானதென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்துவ ஆட்சியென்பது சர்வாதிகாரத்தின் இரட்டைச் சகோதரனைப் போன்றது. அந்தவகையில், காலாவதியான மாகாணசபைகளில் அவ்வாறான ஆட்சி இடம்பெறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்...
அர்ஜெண்டீன கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் லியோனல் மெஸ்சிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மூன்று வாரங்களுக்கு அவரால் விளையாட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜெண்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, தற்போது கழக அணியான பார்சிலோனாவில் விளையாடி வருகிறார். இந்நிலையில், சிவில்லா அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்சி விளையாடினார். ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் மெஸ்சி அபார கோல் அடித்தார். அதன் பின்னர், 26ஆவது நிமிடத்தில் எதிரணி வீரரான...
நடிகை லட்சுமி மேனனை திரையில் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவர் கடைசியாக விஜய் சேதுபதியின் றெக்க படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குனர் ராம்குமார் அடுத்து இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தான் லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளது. பொரளை சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகம் வழியாக கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லவுள்ளது. எரிபொருள் விலையேற்றம் மற்றும் வெளிநாடுகளுடன் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தம் போன்ற பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. உலக பொருளாதாரத்தில் காணப்படும் நிலையற்ற தன்மையே எரிபொருள் விலையேற்றம் மற்றும்...
விஜய்யின் எவ்வளவு பெரிய மாஸான நடிகர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரின் சாதனைகளை அடுத்தடுத்து பெருகி வருவதை காணமுடிகிறது. கடந்த வருடம் அவருக்கு மெர்சல் படம் வெளியானது. இப்படம் ரூ. 250 கோடி அவரின் நடிப்பில் அடுத்ததாக சர்க்கார் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் Pre Business மிகப்பெரியளவில் நடைபெற்றுள்ளது அண்மையில் கேள்விப்பட்ட விசயமே. இந்நிலையில் மெர்சல் படத்தின் Life time gross ஐ விட சர்க்கார் Pre Business 50 சதவீதம்...
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபட்டபிரயாணிகள் ரயிலுக்கு கல்லெறிந்த சிறுவர்கள் நால்வரை ஏறாவூர் சுற்றுலா நீதி மன்றம் சிறுவர் நன்னடத்தைப் பாடசாலைக்கு அனுப்பிவைத்ததாக மட்டக்களப்பு  ரயில் நிலைய பிரதம அதிபர் கே.வசந்தகுமார் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், இதை ஒத்த சம்பவங்கள் இதற்கு முதலும் 4 தடவைகள் இடம்பெற்றள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்தத் தடவை ஏறாவூர் பொலிசாரின் தீவிர விசாரணையால் இவர்களை கைது செய்ய முடிந்தது. சம்பந்தப்பட்ட சிறுவர்கள் நால்வரும்...
ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு சுற்றை முடித்துவிட்ட ஸ்ரேயா திருமணத்துக்கு பின்பும் நரகாசுரன் படம் மூலம் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார். இதுதொடர்பில் அவர் அளித்துள்ள செவ்வியில் ’என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு. முதன்முதலாக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன். இது ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை. அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குனர்களாவதை பார்க்க பெருமையாக உள்ளது. கெமராவுக்கு முன்பு மட்டும்...
உணவு விசமாகியதன் காரணமாக ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரின் ஆசிரிய மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கல்வியியற் கல்லூரில் கல்வி கற்கும் சுமார் 70 க்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் உட்கொண்ட உணவு விசமாகியதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.