தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற, கொழும்பில் நிர்மாணிக்கப்படுகின்ற தாமரை கோபுரத்தின் பல இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாமரை வடிவத்தில் நிறைவடைந்துள்ள பகுதிகளில் உள்ள கண்ணாடிகளில் இவ்வாறு நீர் கசிவதாக ஆராய்ந்த போது தெரியவந்துள்ளது. அதற்கமைய இது தொடர்பில் மீண்டும் ஆராய்வதாக நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்கின்ற சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இந்த நிர்மாணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 100 க்கு 70 வீதமான சீன...
விஜய் சேதுபதி, அடுத்ததாக வெற்றி கூட்டணியில் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ’96’ திரைப்படம் வெற்றிகரமா திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்தப்படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர்டீலக்ஸ்’, ‘சீதக்காதி’ போன்ற திரைப்படங்கள் இந்த வருட இறுதிக்குள் வெளிவரயிருக்கின்றது. மேலும் சூப்பஸ்டார் ரஜனிகாந்தின் ‘பேட்ட’ சிரஞ்சீவியுடன் ‘நரசிம்மரெட்டி’ போன்ற திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஏற்கனவே சீனுராமசாமி, விஜய் சேதுபதி, யுவன் கூட்டணியில் ‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி வெற்றித்திரைப்படமாக மாறியது. இந்தநிலையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த...
தனது அணியில் டோனி 80 வயதானாலும் விளையாடுவார் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆனால், அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் அவர் மீது விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில், ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர்...
இந்திய அணியின் தலைவரும், ரன் மிஷின் என்றும் அழைப்படும் விராட் கோஹ்லி, இன்னும் சில ஆண்டுகள் தான் விளையாடுவேன் என கூறியுள்ளதால், ரசிகர்கள் அவரின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் உள்ளனர். கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது பட்டையை கிளப்பி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஓட்டங்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோஹ்லி மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மேற்கிந்திய தீவு...
  புரட்சிகர பெண்கள் வரிசையில் தமிழ் இனத்தின் விடிவிற்காக குரல் கொடுக்கின்ற யாழ்ப்பாணத்தில் அமைச்சர் அனந்திசசிதரன் ஒரு இரும்புப் பெண்மனி  பூலான்தேவி, வீரலட்சிமி, அன்னைதிரேசா, கல்பனாசாகுல், நவநீதம் பிள்ளை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போன்றோர்கள் வரிசையில் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் தமிழிழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற அமைச்சர் அனந்தி சசிதரன் தற்பொழுது ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் ஆரம்பித்துள்ளார். அரசியலில் ஆணாதிக்கம் தலைதூக்கியுள்ள...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக 2:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 3:0 என்ற கணக்கில் வெற்றயீட்டு கைப்பற்றியுள்ளதுடன், இதில் ஒரு போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டது. இதில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டத்தினால் டக்வெத் லூயிஸ்...
அவுஸ்திரேலியாவை சேர்ந்த புதுமண தம்பதி அமெரிக்காவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் மனைவிக்கு பக்கவாதம் ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோசப் (28) மற்றும் பிரான்செஸ்கா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் அமெரிக்காவுக்கு தேனிலவு சென்றனர். தேனிலவுக்கு சென்ற இரண்டாவது நாள் ஹொட்டலில் இருந்த ஜிம்மில் பிரான்செஸ்கா சுருண்டு விழுந்தார். இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த அவரின் கணவர் ஜோசப் உடனடியாக மனைவியை மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது தான் பிரான்செஸ்காவுக்கு கடுமையான பக்கவாதம் தொடர்ந்து...
கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவ்வப்போது உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஓய்வு எடுத்துவிட்டு தனது கணவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு, நியூசிலாந்து நாட்டுக்கு செல்லவிருக்கிறார்கள். இது முதல் அரசுமுறை பயணம் என்பதால் தம்பதியினர், அதிக எதிர்பார்ப்புடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்கள். குறிப்பாக, கர்ப்பிணியாக இருக்கும் மெர்க்கல் தனது சிரமத்தையும் பொருட்படுத்தாமல், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அதிகமாக, மெர்க்கல் தனது கர்ப்பிணி வயிற்றை கையை...
மெக்சிகோவில் ஏற்பட்ட வெப்பவலய சூறாவளியில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பசுபிக் சமுத்திரத்திற்கு அருகிலுள்ள தெற்கு மெக்சிகோவின் ஒக்ஷாகோ மாநிலத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) விசன்டே சூறாவளி ஏற்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசன்டே சூறாவளியானது அடைமழையையும் இணைத்துக் கொண்டு வந்தமையினால் வெலி வெசினல் ஆறு பெருக்கெடுத்து அபாயமட்டத்தைக் கடந்தமையினால் அணை திறக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சூறாவளி, அதை தொடர்ந்து உருவான பாய்ந்தோடிய பாரிய வெள்ளம் என்பவற்றால்...
மெக்சிகோவிலுள்ள மதுசார தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை மதுசார தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இதன் போது தொழிற்சாலையிலுள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் ஒருவர் எரிகாயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையைச் சூழ புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதுடன் தீ, வான்வரை சுடர்விட்டு எரிந்ததாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.