கொழும்பின் இருவேறு பகுதிகளில் நேற்று 268 கிராமுக்கும் அதிகமான நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயம் ஒன்றுக்கருகில் வைத்து வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதன்போது மட்டக்குளியைச் சேர்ந்த 26 வயதுடைய லியனதுரு லக்மால் தில்ருக்ஷ என்பவரே இவ்வாறு 250 கிராம் 560 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டார். நேற்று  கைது செய்யப்பட்ட இவர் மேலதிக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் நேற்று அல்ஹிலால் புரத்தில் ஆரம்பித்து வைத்தனர். 270 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் தம்பாளை, வெவேதென்ன, ரிபாய்புரம், அல்ஹிலால் புரம், சேவாகம, லங்காபுர...
நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வடக்கு மாகாணசபை உறுப்பினர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- “நாட்டில் அந்நியரின் ஆட்சி நிலவிய காலத்தில் தேயிலை செய்கையை நாட்டில் மேற்கொள்வதற்காக மலைநாட்டுப் பகுதிகளுக்கு இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட...
வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அரசியல் ரீதியான உயர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுவது தொடர்பில் வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் பொது அமைப்புக்கள், கல்விமான்கள் உடனான கலந்துரையாடல் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக...
2019 ஆம் ஆண்டு முதல் அரிசிக்குக்  கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க,  விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது. சந்தையில் அரிசிக்கு நிலையான விலையைப்  பேணும் நோக்கத்துடனேயே, இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரிசிக்கு சந்தையில் தற்போது இருக்கின்ற விலையை விட,  10 ரூபாவைக்  குறைக்க ஆலை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அடுத்த மாதம் முதல் "பி.எம்.பீ.  அரிசி" என்ற அரிசி வகையை விற்பனை செய்ய,...
பர்முயுலா-1 கார்பந்தயத்தில் அமெரிக்கன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெர்ராரி அணியின் வீரரான கிமி ரெய்க்கோனன், முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா-1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின் 18ஆவது சுற்றான அமெரிக்கன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று, நேற்று அமெரிக்காஸ் ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 308.728 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில்...
மோட்டோ ஜிபி பந்தயத்தின், ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும். அந்த வகையில் ஆண்டின் 16ஆவது சுற்றான ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று டுவின் ரிங் மோடிகி  ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 4,801 கிலோ மீற்றர்கள், பந்தய தூரத்தை நோக்கி, 27 வீரர்கள் மோட்டார்...
தாய்வான் ரயில் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை அந்நாட்டு ஜனாதிபதி டிசை இன்ங் வென் இன்று (திங்கட்கிழமை) சந்தித்துள்ளார். வடகிழக்குத்தாய்வானில் நேற்றைய தினம் ரயில் தடம்புரண்டு இடம்பெற்ற பாரிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 175 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். கடந்த மூன்று தசாப்தங்களில் இடம்பெற்ற பாரிய அனர்த்தம் இதுவெனக் குறிப்பிடப்படுகிறது. குறித்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூடியிருக்கும் இலன் நகரத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி டிசை இன்ங் வென் விஜயம் செய்து...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்துவதில், பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்து பல்கலைக்கழக சமூத்தினால் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக இடம்பெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். தென்கிழக்குப் பல்கலைக்ககழக நிருவாகக் கட்டடிடத் தொகுதியை ஆக்கிரமித்து பல்கலைக்கழகத்தின் நிருவாக செயற்பாட்டிற்கு தடையாக...
மாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அரச அலுவலர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது. பஸ்கொட பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கடமையாற்றும் 44 வயதுடைய ஈ.எச்.சமிந்த தயாரத்ன என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளார். இவர் இன்று காலை 9.25 மணியளவில் அகுரஸ்ஸ தோட்டம் வலஸ்முல்ல பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணமாகியுள்ளார். இவ்வாறு சென்றவர்...