மெக்சிகோவில் ரோமன் கத்தோலிக்க கர்தினாலின் இல்லத்தின் மெய்க்காவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஓய்வுபெற்ற கருதினால் நோர்பேடா றிவேராவின் (வயது-76) இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்குதலில் அவருடைய காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில், கர்தினாலிற்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லையென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த தாக்குதலுக்கான காரணங்கள் எதுவும் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படாத அதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட துப்பாக்கிதாரி இராணுவ உடையில் இருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய கொலம்பியாவிலுள்ள மலைப்பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகள் மண்ணினுள் புதையுண்டுள்ளன. குறித்த அனர்த்தத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகத்தாழ்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்டு சீவியம் நடாத்தும் குறித்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் வாழும் பரன்கபேமெஜா நகரில் தொடர்ச்சியான அடைமழை காரணமாகவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பெற்றோலியம் விளையும் குறித்த பகுதியில் இவ்வாறான நிலச்சரிவு அனர்த்தங்கள் சாதாரணமாக...
இலங்கையில் ஆண்டு தோறும் சராசரியாக 250 யானைகள் உயிரிழப்பதாக புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன. தற்போதுள்ள புள்ளி விவரங்களின் படி இலங்கையில் 6000 யானைகள் மாத்திரமே காணப்படுகின்றன. 2017ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் 256 யானைகள் உயிரிழந்துள்ளதோடு 2016ஆம் ஆண்டு 279 யானைகள் உயிரிழந்துள்ளன. இதேவேளை, யானைகளின் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான மிக பிரதான காரணமாக காணப்படுகின்றது மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களே என கூறப்படுகின்றது. மேலும், இலங்கையின் உடவள வனப்பகுதி என்பது ஒருகாலத்தில் யானைகளின் சொர்கபுரியாக...
நுவரலியா, லிந்துலை பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவரும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாகசேனை நகரத்திலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி, நாகசேனை நகர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக...
 இந்த அரசாங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்த அரசாங்கம் மக்களுக்காக இதுவரையில் எதனையும் செய்யவில்லை. ஊழல் மோசடிகள், தரகு பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களையே அதிகளவில் இந்த அரசாங்கம் தொடர்பில் கேட்க முடிகின்றது. நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றது. அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முன்வராமை வருத்தமளிக்கின்றது. இந்த அரசாங்கம் தொடர்பில் மக்கள்...
யாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக...
ஹற்றன், தலவாக்கலை பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையால்  மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவொன்று, இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நீர்தேக்க பகுதிகளில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மலையகத்தில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கடுமையான மழை பெய்து வருகின்றது.  இதனால் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த மழையுடனான காலநிலையால்...
பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா உட்பட மூவர், தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விண்ணப்பித்து உள்ளதாக...
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ஜேர்மன் நாட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தங்காலை கடலில் குளித்துத் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிங்லர் ஸ்டீவன் மார்க் என்ற 34 வயதான ஜேர்மன் நாட்டு பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அழகாக இளைஞன் ஒருவரின் புகைப்படத்தை பேஸ்புக் முகப்படமாக பதிவிட்டு, பல இளம் பெண்களை ஏமாற்றும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இளம் யுவதிகளை ஹோட்டல்களுக்கு அழைத்து சென்ற குற்றச்சாட்டில் இந்த நபர் தெஹிவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நுவரெலியாவை...