திடீ­ரென உடல் நடுக்­கம் ஏற்­பட்டுப் பெண் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று சர­சாலை வடக்­கில் நடந்­துள்­ளது. நேற்­றுக் காலை வீட்டு வளவை துப்­பு­ர­வு செய்துவிட்டு குளித்­து­ முடித்த அவர், காலை உணவு அருந்­தி­யுள்­ளார். அப்­போது அவ­ருக்கு உடல் நடுக்­கம் ஏற்­பட்­டுள்­ளது. அதன்­பின்­னர் அவர் படுக்­கச் சென்­றுள்ளார். அவர் அசை­வின்­றிக் காணப்­பட்­டதால் வைத்தியசாலைக்­குக் கொண்டு சென்­ற உறவினர்களிடம், பரி­சோ­தனை செய்த வைத்தியர் அவர் இறந்­து­விட்­டதாக கூறி­யுள்ளார். உயி­ரி­ழந்­த­வர் 36 வய­து­டை­ய­வர் என தெரியவந்துள்ளது. மேலும்,...
(மன்னார் நகர் நிருபர்) தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ( வனரோபா) வனமாக்கல் செயற்பாட்டின் கீழ் மன்னார் மாவட்டதில் 2000 கண்டல் தாவரங்களை நடுகை செய்யும் நிகழ்ச்சி ஆனது இன்று காலை 8 மணியளவில் ஆரம்பம் ஆனது. தேசிய சுற்றாடல் தினமானது இன்று ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம் பெறுவதையிட்டு கரையோர பாதுகாப்பு மற்றும் மூல வள முகாமைதுவ திணைக்களத்தின் எற்பாடில் மன்னார் தள்ளாடி பகுதியில் உள்ள கரையோர...
-மன்னார் நகர் நிருபர்- நீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் இடம் பெறும் 'வனரோபா' அதாவது வனமாக்கள் தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (5) காலை மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றது. மன்னார் -மதவாச்சி பிரதான வீதியில் உள்ள தம்பனைக்குளம் பகுதியில் இன்று (5) வெள்ளிக்கிழமை  காலை 9.30 மணியளவில் 'வனரோபா' தேசிய...
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக இருந்த முன்னாள் அணித்தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக இருந்து வந்தார். ஆனால், அவரது மனைவி ரூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருவதால், தனது இயக்குனர் பதவியை ஸ்ட்ராஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தனது மனைவியின் சிகிக்சைக்காக பதவியை ராஜினாமா செய்வதாகவும், இயக்குனர்...
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோஹ்லி மற்றும் ஜடேஜாவின் அபார சதத்தின் உதவியால் இந்திய அணி 649 ஓட்டங்கள் குவித்துள்ளது. இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை துவங்கியது. அதன்படி, இந்திய அணியில் அறிமுக வீரரான பிரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ராகுல்...
வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால் அவை உடலின் சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி, உடலை பலவீனமாக்கிவிடும் மேலும் ஒருவரது உடலில் ஒட்டுண்ணிப் புழுக்கள் அதிகம் இருந்தால், பல கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உடலில் அரிப்புக்களுடன் காய்ச்சல், வீக்கம், வாந்தி, அசாதாரண அல்லது தீவிர தலைவலி, வேகமான இதய துடிப்பு, மங்கலான பார்வை இவ்வாறு அறிகுறிகள் காணப்பட்டால் அது உடலினுள் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். அடிக்கடி வயிற்றுப் போக்கு வயிற்றில் புழுக்கள் அதிகம்...
கண் பார்வை குறைப்பாடு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இக்காலத்தில் உள்ள குறைப்பாடுகளில் ஒன்றாகும். இதற்கு காரணம் சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு கொழுப்பு உணவுகளை பலரும் விரும்பி உண்ணுகின்றனர். இதனாலே கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுகின்றது. மேலும் கண் பார்வை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து தினமும் உண்டு வந்தால் ண் பார்வையை மேம்படுத்தலாம். கீரை வகைகள் வார‌த்‌தி‌ல் குறை‌ந்தது இர‌ண்டு முறையாவது...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்றைய தினம் இந்தியாவை சென்றடைந்துள்ளார். நேற்றைய தினம் இந்தியா வந்தடைந்த புட்டினை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவாஜ் வரவேற்பளித்ததுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புட்டினை கட்டித் தழுவி வரவேற்பு கொடுத்தார். இதனையடுத்து இருவருக்கிடையிலான தனிப்பட்ட சந்திப்பு நடந்தது. அதன் பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். புட்டினின் இந்த விஜயத்தின் போது இந்தியாவுடன்...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன் ஜெனரல் இக்ரம் உல்ஹக், இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதானி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜய குணரட்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியேரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையில் மேலும் பன்முக மற்றும் வலுவான...
ஹங்வெல்லயில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை - கொழும்பு பிரதான வீதியின் ஹங்வெல்ல பகுதியில் குறித்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. தனியார் பயணிகள் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதுண்டதிலேயே முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவத்தில் 80 வயதுடைய தந்தையும் 44 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர்...