இலங்கையில் நாளுக்கு நாள் வாகனங்களின் விலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது மேலும் வாகனங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சமகாலத்தில் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியே வாகன அதிகரிப்பிற்கு பிரதான காரணம் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டில் பாரிய வாகன தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் சம்பத் மேரென்சினே தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைக்கமைய நாட்டில் ஏற்படவுள்ள வாகன தட்டுப்பாடினை...
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் குறித்தொதுக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து கந்தபுரம் கிராம அபிவித்திச்சங்கம், எல்லப்பர் மருதங்குளம், விவசாயக்கிராம கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஐம்பதுனாயிரம் ரூபா பெறுமதியான பிளாஸ்ரிக் கதிரை வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் 05.10.2018ம் திகதி மாவட்ட கிராமஅபிவிருத்தித் திணைக்களத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தித்திணைகளத்தின் மாவட்ட உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கிராம...
சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் தாதியர் விடுதிக்கான இரண்டாம் கட்ட நிர்மாணப் பணி புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச்.எம்.நியாஸின் வேண்டுகோளிற்கிணங்க இந்த இரண்டாம் கட்டப் பணிக்காக பைசல் காசிம் 2 கோரி 50 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கி இருந்தார்.
இதேவேளை,இந்த விடுதியின் முதலாம் கட்ட நிர்மாணப் பணிக்காக பிரதி அமைச்சரால் 2 கோடி ரூபா...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், அவர்களது உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும் முல்லைத்தீவில் மாபெரும் கண்டன போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த போரட்டம் வன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக எதுவித விசாரணைகளுமின்றி சிறையில் உள்ள அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்க கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"ஸ்ரீலங்கா அரசே! நல்லிணக்க அரசே! அரசியல் கைதிளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு"...
திருடர்களின் குகை போன்றே வடக்கு மாகாண சபை காட்சியளிப்பதாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மாகாண அமைச்சர் குணசீலன் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவாதத்தின் போதே தவநாதன் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட போது நாங்கள் எதிர்க்கட்சியாகவே வந்தோம். அவ்வாறு இரண்டு வருடங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கையில்...
இலங்கையில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இந்திய மாபியா கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டையில் போலி கடன் அட்டை மூலம் 37 கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
கோல்டன் சென்டரில் நடை அடகு பிடிக்கும் நிதி நிறுவனம் என்ற பெயரில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்தியாவை சேர்ந்த விசேட வைத்தியர் ஒருவரின் தலைமையின் கீழ் கடன் அட்டை மோசடி ஈடம்பெற்றுள்ளது.
மோசடியில் ஈடுபட்ட கும்பல் நேற்று முன்தினம் குற்ற விசாரணை திணைக்களத்தினால்...
ஜேர்மனியில் நடைபெற்ற கவிதைப் போட்டி ஒன்றில் இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இளம்பெண் வாசித்த கவிதை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கவிதையை வாசித்த இளம்பெண், Nicole Höchst என்னும் வலதுசாரி அரசியல்வாதியின் மகளான Ida Marie Müller ஆவார்.
தென்மேற்கு ஜேர்மனியின் Speyer நகரில் நடைபெற்ற அந்த கவிதைப்போட்டியில், 100 பார்வையாளர்கள் கூடியிருந்த நிலையில் அவர்கள் முன் Ida அந்த கவிதையை வாசித்தார்.
இனவெறியைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையில்,...
தேசிய விஞ்ஞான மன்றத்தின் பொன்விழா நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் அரச, தனியார் மற்றும் கைத்தொழில் துறையினருக்கு தேவையான விஞ்ஞான, தொழில்நுட்ப ஆய்வு பற்றிய அறிவினை பெற்றுக்கொடுக்கும் விசேட செயற்பணியை நிறைவேற்றிவரும் தேசிய விஞ்ஞான மன்றம், விஞ்ஞானிகள், கல்வியியலாளர்கள், பட்டதாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய, சர்வதேச மட்டத்தில் இடம்பெறும் விஞ்ஞான ஆய்வுகள்,...
உடல் எடையை குறைப்பது என்பது எல்லார்க்கும் கடினமான விஷயம். மேலும் உடல் எடையை குறைய வெந்தயத்தைப் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.
வெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது?
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவித்து அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கின்றது.
வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும்.
வெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்....
சந்தோசமான வாழ்க்கைக்கு உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மிகவும் அவசியம்.
ஆனால் வேலை, குடும்பம், சமூகம் என பல வேலைகளில் நாம் அதிகம் கவனம் செலுத்துகின்றோம்.
மேலும் இதுபோன்ற சமயங்களில் நாம் செய்யும் சில செயல்கள் நம் உடல் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கிறது.
ஆரோக்கியமாக வாழ செய்யவேண்டியவை
தினமும் காலை எழுந்தவுடன் நிதானமாக 1லி தண்ணீர் பருகுங்கள். இப்படி தினமும் தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய முடியும்.
தினமும் காலையில்...