ஆப்கானிஸ்தானில் இராணுவம், பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலீபான் கிளர்ச்சியாளர்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை தவிர ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் உட்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் இராணுவம் போராடி வருகிறது. இந்த நிலையில் ஆப்கான் தேசிய இராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள்...
துன்னாலை பகுதியில் அனுமதியின்றி இறைச்சிக்காக மாட்டினை வெட்டிய இருவரை நெல்லியடி பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்தனர். துன்னாலை பகுதியில் உள்ள காணியொன்றினுள் மாடு வெட்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மாட்டினை வெட்டியவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது அவர்கள் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மாட்டினை வெட்டியமையை கண்டறிந்தனர். இதனையடுத்து வெட்டப்பட்ட இறைச்சியையும் , கைது செய்ப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையம் கொண்டு...
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சமூக செயற்றிட்டத்தின் மூலம் ஒரு தொகுதி கூரைத் தகரங்கள் இன்றையதினம்   கழகத்தின் செயலாளர்  பி.கெர்சோன்(கரிஷ்) தலைமையில் வவுனியா தெற்கிலுப்பைக் குளத்தில்  நடைபெற்றது. இவ் நிகழ்வில்   தமிழ் தேசிய கூட்டமைப்பின்  அங்கத்துவ கட்சியான புளொட் அமைப்பின்  மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான க. சந்திரகுலசிங்கம்   புளொட் அமைப்பின் மத்திய  குழு உறுப்பினரும் ...
இலங்கை கிரிக்கெட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடந்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் சமீபகால செயல்பாடுகள் மோசமாக உள்ளது. ஆசிய கிண்ணத்தின் தொடக்கத்திலேயே இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியது. ஜாம்பவான்களான முரளிதரன், ஜெயவர்தனே, சங்ககாரா, தில்ஷான் போன்றோரின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை அணி திணறி வரும் நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது முக்கியமான விடயமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து ஐசிசியின் ஊழல் எதிர்ப்புப் பிரிவு...
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் தேசிய பொருளாதார சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறையினர், பல்கலைக்கழக உபவேந்தர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகளின் பங்குபற்றலில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தலைமையில் தேசிய பொருளாதார சபை ஒன்றுகூடியது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து புத்திஜீவிகளின் கருத்துக்கள் இதன்போது கேட்டறியப்பட்டதுடன், பல முன்னணி நிறுவனங்களின்...
புகைத்தல் சம்பந்தமான எச்சரிக்கை படமில்லாது சிகரெட் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நீதிவான் 3ஆயிரம் ரூபா தண்டம் விதித்துள்ளார். காரைநகர் பகுதியில் கடை உரிமையாளர் ஒருவர் புகைத்தல் தொடர்பான எச்சரிக்கை படமில்லாது சிகரெட் விற்பனை செய்தார் என காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். குறித்த வழக்கு நேற்றைய தினம் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , கடை உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து...
(நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்)  தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வு கோரிய தொழிலாளர்களின் தொடர் போராட்டத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் பூரண ஆதரவை வழங்கும் எனவும் தொழிலாளர்கள் உழைப்பை அடகுவைத்து நடத்தப்படும் கூட்டொப்பந்த அரசியல் நாடகத்தை இனியும் நடத்த அனுமதிக்க முடியாது என நோர்வூட பிரதேசசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித்தலைவருமாகிய பா.சிவணேசன் தெரிவித்தார். காசல்ரி பிரதேச இளைஞர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். 1992 ம் ஆண்டு முதல் தொழிலாளர்...
ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் வாக்குறுதியளித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற வடக்கு-கிழக்கு ஜனாதிபதி விசேட செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்ட பைசல் காசீம் மேற்படி பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இந்தக் கடலரிப்புக்கான காரணத்தையும் இந்தக் கடலரிப்பை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும் இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள்...
மனைவி உயிரிழந்ததன் பின்னர் தனது ஐந்து வயது ஊனமுற்ற மகளுடன் மரத்தின் மேல் வாழ்க்கை நடாத்தும் தந்தை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவப்பொத்தான புளியங்கடவல என்ற பிரதேசத்தில் வசிக்கும் குறித்த நபர் தொடர்பாகவே தகவல் வெளியாகி உள்ளது. ஹொரவப்பொத்தான பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, பொலிஸ் பொறுப்பதிகாரி ரொஷான் சன்ஜீவ உட்பட பொலிஸ் உத்தயோகத்தர் குழுவினர் கடந்த 30ம் திகதி பிற்பகல் புளியங்கடவல கிராமத்திற்குச்...
பேலியகொட சுற்றுவட்டத்துக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் கட்டுநாயக்கவுக்கான அதிகவே நெடுஞ்சாலையின் நுழைவாயில் இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது. இதன் காரணமாக பேலியகொட நுழைவாயில் பகுதிக்கான  உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளும் மாற்றப்பட்டுள்ளது. புதிய களனிப் பாலத்தின் நிர்மானப் பணிகளின் காரணமாகவே குறித்த நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இக் காலப் பகுதியில் மேற்படி நுழைவாயிலை பயன்படுத்தி கொழும்பு, கட்டுநாயக்க அதிகவே நெடுஞ்சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் வேறு...