இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தில் காலநிலை மாற்றமும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் முத்துகுமார மணி இதனை தெரிவித்துள்ளார். எதிர் காலத்தில் வெப்ப நிலையில் உயர்வு மாற்றங்கள் ஏற்படும் போது அது இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் 5 வீதத்தினால் குறைந்து செல்லும்...
அரசியலமைப்பு சபையின் வழி நடத்தல் குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசியலமைப்பு சபையினால் ஆராயப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து அரசியலமைப்பு சபையின் கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது. அது குறித்த தொடர்ச்சியான கலந்துரையாடல் இன்றைய கூட்டத்திலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமா தாண்டி உலக சினிமாக்களில் கலக்கி வருகிறார். இவர் இயக்கிய 'ஒன் ஹார்ட்' என்கிற இசை திரைப்படம், 2018 வருடத்திற்கான கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது. இதுதான் திரைப்படம், இசை மற்றும் நடனத்திற்கான முதல் சர்வதேச திரைப்பட விழா என்பது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.. உலகெங்கிலும் இருந்து கலந்துகொண்ட படங்களில் 22 படங்கள் திரையிடலுக்கு தேர்வாகியுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கான சதிநடவடிக்கையின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருக்கிறார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான, டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் கூட்டாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியிலிருந்து தப்பித்து கொள்ளவே...
பிரான்ஸ் நாட்டின் அதியுயர் கௌரவ விருது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசாங்கம் வழங்கும் அதி உயர் விருதான 'கொமான்தியர் டி லா லிஜியோன் தொனர்' எனும் விருதினால் சந்திரிக்கா குமாரதுங்க கௌரவிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் சார்பில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் மரன் சூ வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தின்போது இந்தக் கௌரவம் சந்திரிக்காவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த விருதைப்...
விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்துமாறு புலம்பெயர் சிங்கள மக்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி நாலக கொடஹேவா வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுக்குச் சமாந்தரமான அரச சார்பற்ற அமைப்புகளின் அமர்வில் நேற்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் அமைப்பு இல்லை என்று காட்ட ஒரு சிலர் சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனிதஉரிமைகள் ஆணையத்தின் இலங்கை தொடர்பான முன்மொழிவுகளிலும்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்சவின் தொண்டு நிறுவனமான சிரிலியே சவிய அமைப்பிற்கு சொந்தமான வாகனத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கடத்தப்பட்டார் என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் இசுர நெத்திகுமாரவிடம் இதனை தெரிவித்துள்ளனர். தாஜூடீன் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்வதற்கு சிரிலியே சவிய அமைப்பின் டிபென்டர் ரக வாகனம் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை நிகழ்வுகளுக்கு செல்லும்போது அவருக்கு எதிர்ப்பை காட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 25ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார். இந்த நிலையில் அன்றைய தினம் பிற்பகல் 12 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. போரின் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தமை...
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானின் புயலில் சிக்கி 119 ஒட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 136 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆப்கான் அணி சார்பாக ஹஷ்மத்துல்லா ஷஹதி 58 ஓட்டத்தையும், ரஷித் கான் 57 ஓட்டத்தையும்,...
-மன்னார் நகர் நிருபர்-   முசலி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலகர் ஒருவரை மன்னார் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (20) பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. முசலி பண்டாரவெளி கிராமத்தை சேர்ந்த  கிராம அலுவலகருக்கு எதிராக பூ நொச்சிக்குளம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் மேற்கொள்ள இருக்கும் வீட்டுத் திட்டம் தொடர்பாக  முசலி பிரதேச செயலாளரிடம்  முறைப்பாடு செய்திருந்தனர். மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக  குறித்த கிராம அலுவலகரை  பிரதேச செயலாளர் முசலி பிரதேச செயலகத்தில்...