திருகோணமலை - அக்போபுர பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பன்றி இறைச்சி 12 கிலோ வைத்திருந்த ஒருவருக்கு முப்பதாயிரம் ரூபாய் தண்டப் பணம் விதித்து இன்றைய தினம் நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்போபுர, தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டப் பணம் விதிக்கப்பட்டது.
குறித்த நபர் பன்றியை வேட்டையாடி, அதன் இறைச்சி 12 கிலோ கிராமை வீட்டில் வைத்துள்ளதாக அக்போபுர பொலிஸாருக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் கைது பொலிஸார்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் கீழ் பெண் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தி முனையில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி காலை சுமார் 19 இலட்சம் ரூபா கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டிருந்தது.
நிதி நிறுவன...
-மன்னார் நகர் நிருபர்-
தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் சுங்கத்ததுறை அதிகாரிகளளால் கைது செய்பட்டுள்ளனர்.கைது செய்யப்படவர்களிடம் அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தங்கச்சி மடம் கடற்பகுதியில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு அகதிகள் செல்லவுள்ளதாக இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று புதன் கிழமை அதிகாலை 1 மணியளவில் இராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்குரிய முறையில் விடுதியில்...
தேசிய குடும்பக் கட்டுப்பாட்டு தினத்தையொட்டி இன்று புதன் கிழமை கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்ற நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தபோது...
இலங்கையின் ஈழப்போரில் அதிகளவான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு திராவிட முன்னேற்றக்கழகமும் காங்கிரஸ் கட்சியுமே முழுப்பொறுப்பை ஏற்கவேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காங்கிரஸ் - திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியே முக்கிய பங்கை வகித்தது என்பது பலருக்கு தெரியாது.
காங்கிரஸ் அரசாங்கம் ஈழப்போரின் போது வழங்கிய உதவிகள் குறித்து...
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரில் உரையாற்றிய பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் மனோ கணேசனை சந்தித்துள்ளார்.
“அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே! இப்போது திருப்திதானே?” என அமைச்சர் மனோ கணேசனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளதாக அமைச்சர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, என்ன, என் உரையில் சர்ச்சை எதுவும்...
5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். இவருடைய 31ஆவது நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதை முன்னிட்டு யாழ்.நல்லூரில் இவர் உயிரிழந்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இரு இளைஞர்கள் தென்மராட்சி பகுதியிலிருந்து தூக்கு காவடி எடுத்து வந்து தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
இதை பார்த்த அனைவரது கண்களிலும் கண்ணீர் வடிந்ததுடன், மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வாக இது அமைந்துள்ளது.
மேலும் இவர் உயிரிழந்த நேரமான...
-மன்னார் நகர் நிருபர்-
தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று புதன்கிழமை(26) மன்னாரில் இரு இடங்களில் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலிபன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தின் கேட்ப்போர் கூடத்தில் தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இடம் பெற்றது.
காலை 10.48 மணியளவில் தியாக தீபம் திலிபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்...
EPDP அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியது தவறு சமகால அரசியல் பார்வையில் சமூக ஆர்வலர்கள்
Thinappuyal News -
சமகால அரசியல் பார்வையில் சமூக ஆர்வலர்கள் இருவரின் காரசாரமான கருத்து - சமகால ஆர்ப்பாட்டங்களின் மூலம் தமது கட்சியை வளர்க்கும் நோக்கிலேயே அரசியல் கட்சித் தலைவர்கள் செயற்படுகிறார்கள். EPDP அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியது தவறு.
வவுனியாவில் முஸ்லீங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் 40 மேற்பட்ட கடைகளை சட்டவிரோதமாக கட்டிவைத்துள்ளார்கள் என்று ஆர்ப்பாட்டம் நடந்தது கடைசியில் இன முறுகல்தான் ஏற்ப்பட்டது எந்த UC தலைவர்களாலும் அதற்க்கான தீர்வை பெற்றுக்கொடுக்க...
-மன்னார் நகர் நிருபர்-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அதி நவீன தொழில் நுற்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை(25) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசிலன் வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து OpenE நிறுவனத்தின் பங்களிப்பில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட'‘My...