(மன்னார் நகர் நிருபர்) மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் குமாரதேவன் அவர்களின் தலைமையில் உலக நதிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு (25)காலை பத்து மணியளவில் மன்னார் மாவட்ட நீர்ப்பாச திணைக்களத்தின் ஏற்பாட்டில் நானாட்டான் அருவி ஆற்றங்கரையில் நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வன்னிமாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை ஆற்றும் போது, ஆறுகள் நதிகள் என்பன இயற்கை நமக்களித்த ...
-மன்னார் நிருபர்-   முக்கிய சேவைகளாக இருக்கின்ற சுகாதாரம்  மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளிலும் கூட  நிதிகளை மக்களின் தேவைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்கின்ற போது, சரியான தேவைகளை அறிந்து சரியான முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அதி நவீன தொழில் நுற்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட விசேட...
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதைநெல் அல்லது அதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை அவர்களிடமிருந்து எவ்விதமான பதில்களும் கிடைக்கவில்லை என வட மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார்.   அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக வடக்கு மாகாணத்தில் நிலவும் வரட்சி காரணமாக விவசாயச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பாதிப்புக்களால் தமக்கான விதைநெல் இல்லாத நிலையில் பெருமளவான விவசாயிகள் காணப்படுகின்றன. தற்போது...
எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள். இதில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை அமர்வில் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ. நா தலைமையகத்தில் ஆரம்பமானது. முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர்...
இந்தியாவின், தனுஷ்கோடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி வர முயற்சித்த பெண் உட்பட இருவரை கைதுசெய்துள்ளதாக ராமநாதபுரம் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பைச் சேர்ந்த 42 வயதுடைய ரமணி என்ற பெண் சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டின் திருச்சியில் தங்கியிருந்தார். இந் நிலையில் குறித்த பெண் இன்று அதிகாலை தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்பிவர முயற்சித்தபோதே ராமநாதபுரம் சுங்கத்துறையினர் இவரை கைதுசெய்துள்ளனர். அத்துடன் இவர் இலங்கைக்கு தப்பிவர உதவி புரிந்த...
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று இரவு வீட்டிற்குள் முதலை ஒன்று புகுந்துள்ளது.  இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் வனஜீவராசிகள் அதிகாரிகள் வரவில் தாமதம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து இன்று காலை முதலையை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 8மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு அருகிலுள்ள வீட்டு வளவு ஒன்றிற்குள் பூந்தோட்டம் குளத்திலிருந்த முதலை ஒன்று உணவு, தண்ணீர் தேடிச் சென்று ஒழிந்து கொண்டுள்ளது. வீட்டு...
  தியாகி திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு செய்ய மாத்திரம் அல்ல மீண்டும் தூபியை நிர்மாணிக்கவும் சட்ட அங்கிகாரம்! அஞ்சலி நிகழ்வை தடைசெய்யக்கோரி நீதிமன்ற்றத்தில் பொலிசாரால் தொடரப்பட்ட வழக்கினை எதிர்த்து சாணக்கியமாக வாதாடி தடையினை நீக்கி வெற்றி பெற்றுக்கொடுத்தார்  சுமந்திரன் இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள் பணிவதும் குணிவதும் இனியில்லை தமிழ் குடிகளுக் அழிவில்லை....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைமைத்துவத்திலான அரசாங்கமொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது எனவும் சுட்டிக்காட்டினார். பொலன்னறுவையில் இடம்பெற்ற எலிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் இறையான்மை ஒருமைப்பாடு மற்றும் தேசிய...
ஜப்பானை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை 5 ஆண்டுகளாக உண்டியலில் வைத்து பாதுகாத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோவை சேர்ந்த பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த இரண்டு மணி நேரத்தில் இறந்துள்ளது. இந்நிலையில் கணவர் இல்லாத அப்பெண்ணை வீட்டில் இருந்து காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக இறந்த குழந்தையை உண்டியல் ஒன்றில் வைத்து வீடு மாறி இருக்கிறார்...
பிரபலங்களின் மரண செய்தி என்றாலே ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். மலையாள சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் திருச்சூரில் உள்ள கோயிலுக்கு மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வி ஆகியோருடன் காரில் சென்றுள்ளார். வழிபாடு முடிந்து வீடு திரும்புகையில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சின்ன குழந்தை இறந்துவிட்டது. பாலா பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உயிருக்கு...