கல்முனை நீதி நிருவாகத்திற்குட்பட்ட எல்லைக்குள் புதிய வைகயான போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்குள் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவா மற்றும் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள்கைதாகியுள்ளனர். கைதானவர்களிடம் கைவிரல் அடையாளம் பெறப்பட்டு 9 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
கல்முனை நீதிவான் நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட...
பிரித்தானியாவில் தந்தை கையால் கொல்லப்பட்ட மகள் இறுதியாக அழகான சிரிப்புடன் பீட்சா சாப்பிட்ட மனதை உருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
வில்லியம் பில்லிங்கன் என்பவர் தனது மனைவி டிரேஷியுடன் வசித்து வந்தார். தம்பதிக்கு மயிலி என்ற மகள் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் வில்லியமுக்கும், டிரேஷியவுக்கு இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து டிரேஷிக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார்.
இது வில்லியமுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில் அவரை பழிவாங்க அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அங்கு...
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ரெஹாம் அல்...
லண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொலை செய்யே முயற்சித்த கும்பலொன்றை தேடும் நடவடிக்கையில் அந் நாட்டு பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
லண்டனில், ஆர்பிங்டன் பார்க் உட்பார்க் பகுதியில் வசித்துவரும் இந்தியக் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களது வீட்டை ஐந்து இளைஞர்கள் கொண்ட கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதைக் கண்ட அயலிலுள்ளவர்கள் குறித்த குடும்பத்தரை எழுப்ப அவர்கள் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறினர். இதையடுத்து சம்பவ...
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜட்டை நவம்பர் 8ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர சபையில் முன்வைப்பார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், விவாதத்துக்குரிய கால எல்லையைக் கருதியே 5 நாட்களுக்கு முன்னரே வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முதல்நாளன்று...
யாழ்ப்பாணத்தில் 100 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் 100 ஜோடிகளுக்கு திருமணங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.
திருமணம் செய்யாமல் நீண்ட காலமாக குடும்பம் நடத்திய ஜோடிகளுக்கே இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி...
இலங்கையில் சமகாலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.
அத்தியாவசிய பொருளான சீனியின் விலை அதிகரிக்கப்பட்டமையினால் பல இடங்களில் ஒரு கோப்பை தேனீரின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.
ஒரு கோப்பை தேனீரின் விலை 30 ரூபாவுக்கும் ஒரு கோப்பை பால் தேனீரின் விலை 50 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.
இதேவேளை திட்டமிடப்பட்டுள்ள எரிவாயு விலை அதிகரித்தால் இந்த விலை மேலும் அதிகரிக்கும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான விலை...
திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ள சில உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி இன்று காலை திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்கட்சி தலைவரின் குலதெய்வ கோயிலான திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலுக்கு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட வரவேற்பினை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியுடன் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம், ஐ.நா தீர்மானம்...
கொஸ்கம - அவிசாவளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் கற்கும் 26 வயதான பியல் ரத்னகுமார என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகம் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞன் மீது பேருந்து மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை நேற்றைய தினம் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
நெஞ்சு பகுதி மற்றும் தலையில்...
இலங்கைக்குள் இனப் பிரச்சினை என்று எதுவுமில்லை. நந்திக்கடலில் வழங்கப்பட்டது அரசியல் தீர்வு என்பதால், மேலும் தீர்வுகள் அவசியமில்லை என்று பேராசிரியர் சந்தன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
உலக தேசப்பற்றுள்ள இலங்கையர் பேரவையின் சார்பில் மனித உரிமை பேரவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தமிழ் வேளாள தலைவர்களின் இனவாத நோக்கங்கள் மற்றும் போலியான வரலாறு காரணமாக அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன.
இலங்கை...