ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுக்கு, ஓமனில் உள்ள கணவர் வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கொடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் உதவி கோரியுள்ளார். பாதிக்கப்பட்ட ஹுமா சைரா (29) என்ற பெண் கூறுகையில், 62 வயதான ஓமன் குடிமகனை கடந்தாண்டு மே மாதம் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டேன். பின்னர் ஓராண்டுக்கு ஓமனில் அவருடன் வசித்தேன். திருமணத்துக்கு பின்னர் எனக்கு குழந்தை பிறந்த நிலையில் உடல்நலக்குறைவால் மூன்று மாதத்தில் இறந்துவிட்டது. இந்நிலையில் என்னை என் கணவர்...
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதைய போட்டியாளர்களில் ஒருவர் விஜய லட்சுமி. சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமானவர் இவர் என்பது தெரிந்திருக்கும். அண்மையில் கூட நாயகி சீரியலில் அறிமுகமாகி பின் நின்றுவிட்டார். இந்நிலையில் Wild Card சுற்று மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அவரும் இதுவரை சரியாக இருப்பது போல தான் தெரிகிறது. இந்நிலையில் அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு களத்தில் இறங்கியுள்ளார் பிரபல இயக்குனர் அகத்தியன்....
பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய இரண்டு மாணவர்கள் அரசு அறிமுகம் செய்துள்ள கல்வித்திட்டம் தங்களைப் போன்றோருக்கு பாதகமாக இருப்பதாகக் கூறி அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். டொரண்டோவைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களான Ryan (15) மற்றும் Noah (15) என்னும் இருவர், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாலியல் கல்வி, தங்கள் போன்ற மாணவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே 2015ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கல்வித்திட்டம் முறையானதாக...
பிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்களிடம் கேட்டால் ஒரு பதிலும் வராது. முதல் சீசனை போல இரண்டாவது சீசனில் யார் ஜெயிப்பார்கள் என்று கணிக்க முடியவில்லை. காலையில் வந்த புதிய புரொமோவில் ஐஸ்வர்யா வழக்கம் போல் எல்லோரிடமும் சண்டை போட்டார். அடுத்த வந்த வீடியோவில் பிக்பாஸ் ஜெயிக்க யார் தகுதியானவர்கள் என்று நிரூபிக்க சொல்கிறார். இதனால் போட்டியாளர்களுக்குள் ஒரு பேச்சு வார்த்தை நடக்கிறது. அதில் ஜனனி ஒன்று சொல்ல யாஷிகா...
ஹாங்காங் அணிக்கு எதிராக பந்துவீசிவதில் தவறு செய்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ண தொடரில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி போராடி ஹாங்காங்கை வென்றது. இந்தியா நிர்ணயித்த 286 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஹாங்காங், 8 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. கத்துக்குட்டி அணியான ஹாங்காங்கின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனால் ஹாங்காங் வெற்றியை நெருங்கியது....
கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ராஷ்மிகா. இவர் நடித்துள்ள கிரிக் பார்ட்டி, அஞ்சனி புத்ரா, ஜமக் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படமும் வெற்றி பெற்றது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. ராஷ்மிகாவும் கன்னட படங்களில் கதாநாயகனாக நடிக்கும் ரக்ஷித்தும் காதலித்தனர். இருவரும் கிரிக் பார்ட்டி படத்தில் ஜோடியாக நடித்தபோது நெருக்கமாகி காதல்வயப்பட்டனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். கடந்த ஜூலை...
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.  சிம்பு, பிரபுதேவாவுடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளை குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் கொடி கட்டி பறக்கும் அவரது கால்ஷீட்டுக்கு பெரிய கதாநாயகர்கள் காத்து இருக்கிறார்கள். சமீபத்தில் திரைக்கு வந்த நயன்தாராவின் படங்கள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்துள்ளன. இதனால் சம்பளத்தை ரூ.5...
இலங்கை ரூபாவின் பெறுமதியானது நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கின்றது. இந்நிலையில் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு  நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்சியாக சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்றைய தியம் 167 ரூபா 41 சதமாக ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக கடந்த 16 ஆம் திகதி இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர் மீது தனியார் பஸ்ஸின் நடத்துனர் ,சாரதி மற்றும் பஸ்ஸின் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இவ் தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பஸ் நடத்துனர்  28 வயதுடைய நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பில்  தனியார் பஸ்ஸின் நடத்துனர் , சாரதியினை நேற்று முன்தினம் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆயர்படுத்தியபோது எதிர்வரும்...
பஸ் கட்டணம் 4 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பஸ் கட்டண அதிகரிப்பு நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, ஆரம்ப பஸ்கட்டணத்தில் எவ்வித மாற்றங்களுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது