போதைப் பொருள் கடத்தல்காரர்களின் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்கும் விசேட கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாருடன் தொடர்பு கொள்கின்றார்கள் என்பதனை இந்த கருவிகளின் மூலம் சுலபமாக கண்டறியலாம் என தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருள் வர்த்தகர்களின் தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்பாடல் வழிகளின் ஊடாக தகவல் பரிமாற்றத்தை குறித்த கருவிகளின் ஊடாக வழிமறிக்க...
நாடாளுமன்றத்தின் பொதுநிறுவனங்கள் நிலைக்குழு மற்றும் கணக்கீட்டுக்குழு கூட்டங்களில் எதிர்வரும் நாட்களில் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.
அத்துடன் குறித்த குழுக்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தனியான தகவல் அதிகாரியொருவரும் நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கான சட்டஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளுக்கான சட்டமூலம் விரைவில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
அதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கான வரைபு தற்போதைக்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
சீனிகம வரலாற்று சிறப்பு மிக்க தெவொல் விகாரையின் வருடாந்த பெரஹரா காரணமாக நாளை தொடக்கம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை காலி - கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் 1.10 மணிக்கு பெரஹரா வீதி உலா வரவுள்ள நிலையில் குறித்த காலப்பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
அதேபோல், நாளை மறுநாள் பிற்பகல் 1.15 தொடக்கம் 17 ஆம் திகதி இரவு 9.30 மணி...
வெகுவிரைவில் புதிய அரசியலமைப்பின் வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக கடந்த பாராளுமன்ற அமர்வில் அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை. அவ்வாறு அரசியலமைப்பின் வரைபை விரைவில் சபையில் சமர்ப்பிப்பது தொடர்பில் பிரதான வழிநடத்தல் குழுவில் ஆராயப்படவில்லை என்று கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இன்று நாடு பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றது.ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கிறது. மக்கள் பாரிய சுமையை ...
திருகோணமலை பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை அப்பகுதியில் 3.5 ரிக்டர் சிறிய அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லையென புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் கருத்து தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் கருத்து தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அஜித் தமிழ் சினிமாவில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவரை பல இளம் நடிகர்கள் பாலோ செய்கின்றனர்.
இதை அவர்கள் நேரடியாகவே கூட கூறியுள்ளனர், இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சீமராஜா ப்ரோமோஷனில் அஜித் குறித்து பேசியுள்ளார்.
இதில் இவர் கூறுகையில் ‘நான் அஜித் சாரை சந்திக்கும் போதெல்லாம் ஒரு எனர்ஜி கிடைக்கும், அவரை அடிக்கடி சந்திக்க மாட்டேன்.
ஆனால், சந்திக்கும் போது பல அட்வைஸுகளை வழங்குவார், அதில் ஒன்று ஒழுங்காக வரியை...
மெர்சல் தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பிரமாண்ட ஹிட் அடித்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.
சுமார் ரூ 250 கோடி வரை வசூல் செய்த மெர்சல், டீசரிலும் செம்ம சாதனை ஒன்றை நிகழ்த்தியது, ஆம், மெர்சல் டீசர் ஒரே நாளில் 10 மில்லியனுக்குள் மேல் ஹிட்ஸை அடித்தது.
இந்நிலையில் நேற்று 2.0 டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவர,...
தளபதி விஜய் தான் இன்று தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் தமிழகத்திலேயே ரூ 125 கோடி வசூல் செய்தது.
முதல் நாள் மட்டுமே ரூ 22 கோடி வசூல் செய்து இன்று வரை முதலிடத்தில் உள்ளது, ஆனால், அவரின் பைரவா படம் தயாரிப்பாளர் தரப்பில் ரூ 16 கோடி வசூல் என கூறப்பட்டாலும், விநியோகஸ்தர்கள் தரப்பில் ரூ 12.5 கோடி தான் வசூல்...
அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார்: ஜேர்மனி
Thinappuyal News -
ஏற்கனவே ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுடன் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது இத்தாலியுடனும் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல வார பேச்சு வார்த்தைகளுக்குப் பின் இத்தாலியுடன் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் கையெழுத்தாக உள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் Horst Seehofer நேற்று தெரிவித்தார்.
இத்தாலியுடனான ஒப்பந்தம் முடிவாகிவிட்டது, அதில் இன்னும் இரண்டு...