இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சி­யல்­தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­யல்­யாப்பை பெற்­றுத்­த­ரு­வ­தற்கு இந்­தியா உத­வி­பு­ரி­ய­வேண்டும். அதற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்­க ­வேண்டும் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான  இரா.சம்­பந்தன்   இந்­தியப் பிர­தமர்  நரேந்­தி­ர­ மோ­டி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார். அர­சியல் யாப்பை உரு­வாக்கும் முயற்சி தோல்­வியில் முடி­வ­டை­யு­மானால்     வடக்கு, கிழக்கில்  தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பை விட தீவி­ர­மான போக்கைக் கொண்ட தமிழ்  தலைமை உரு­வா­வ­தற்கும்   வாய்ப்பு ஏற்­படும் என்றும்  சம்­பந்தன்  சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இந்திய சென்றுள்ள...
மஹிந்த தலைமையில் கொழும்பில் நடத்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க ஊழியர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்க நிறுவனத்தில் பணியாற்றும் 42 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு நிர்வாக அதிகார சபை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊழியர் சங்கத்தின் அழுத்தத்திற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பொதுஜன பெரமுன கட்சியின் தொழிற்சங்க தலைவர்...
காதலிக்கும் ஜோடிகளிடம் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லேவெல நீர்த்தேக்கத்திற்கு அருகில் பாதிக்கப்பட்ட காதல் ஜோடியினர் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். கிடைத்த தகவலுக்கமைய கலேவெல பொலிஸ் அதிகாரி உட்பட குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தகவல் வழங்கிய ஜோடியின் பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன. மேலதிக வகுப்பு என...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்வதேச ரீதியாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய சில முந்திரி பருப்பால் இலங்கையின் தேசிய விமான சேவை, சர்ச்சையில் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் உடனான தனது பயணம் ஒன்றின் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சில முந்திரிப்பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முறைப்பாடு செய்துள்ளார். அவை நாய்களுக்கு கூட தகுதியானவை...
அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் மோட்டார் சைக்கில் விபத்துக்கள்ளான சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்   சம்மாந்துறை சலாம்பள்ளி வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய சின்னலெப்பை நவுஷாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் கடந்த 9 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் குறித்த இருவரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்ற போது சம்மாந்துறை கிளிவெட்டி சந்தியில்  வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி...
நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள நசராவ மாகாணத்தில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்களில் ஏற்பட்ட தீ விப்தில் 18 பேர் பரிதாபமாக உடல் கரு உயிரிழந்ததுடன் 50 க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். நசரவா மாகாணத்தின் தலைநகர் லிபியாவில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கிலேயே இந்த விபத்து நேற்று மாலை திங்கட்கிழமை திடீரென வெடிசத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பங்கர தீ விபத்தும் ஏற்பட்டது. இந்த தீ விபத்தையடுத்து அப்பகுதியின்...
லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தங்கக்கலை தோட்ட மேற் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல் பணமும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம்  நேற்றிரவு இடம்பெற்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் லிந்துல பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். களவு போன பொருட்களின் பெறுமதி தொடர்பில் மதிப்பிடுகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஆலய கட்டுமானத்திற்காக வைக்கப்பட்டிருந்த சில...
சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இந்தியாவை சேர்ந்த 32 வயதுடைய வியாபாரி என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த நபர் இன்று அதிகாலை 10.05 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் நடடிவக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய...
பதுளை பசறை கல்விவலய கோனாகல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 17வயதுடைய நந்தகுமார் எனும் மாணவன் நேற்று 10 ஆம் திகதி கரவனல்லை பகுதியிலுள்ள களனி ஆற்றின் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கரப்பந்தாட்ட போட்டி ருவன்வெல்லயில் நேற்று இடம்பெற்றது. அப்போட்டியில் பங்குகொள்வதற்காக அப்பாடசாலையை சேர்ந்த 28 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் வருகைத்தந்த போது இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்போட்டியில் பங்குபெறும் மாணவர்களை கரவனெல்ல சிங்கள பாடசாலையில் தங்கவைத்துள்ளனர். இதன்போது...
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞனை நேற்று பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை பலாத்காரமாக அழைத்துக்கொண்டு அனுராதபுரம் பகுதியில் இருவரும் தங்கியிருந்துள்ளனர். சிறுமியின் உறவினர்கள் இவர்கள் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து அனுராதபுரம் சென்று சிறுமியை...