சைனா ஹார்பர் (China Harbor) நிறுவனம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கிய 112 கோடி ரூபா பணம் ஐக்கிய அரபு அமீரக வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்த பணம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்திடம் வினவ உள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால், அமீரக அரசாங்கத்திடம் இது...
பண்டாரகம, ரம்புக்கண பிரதேசத்தில் பொல்கொட வாவியில் உயிரிழந்த நிலையில் மிதந்த  ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டிய, வீரமாவத்தையைச் சேர்ந்த 52 வயதான ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்ததாக மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளது.
உலகில் லஞ்ச லாவண்யமற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் ஸ்வீடன் இடம்பெற்றுள்ளது. உலகின் 55 முக்கிய நாடுகளை தெரிவு செய்து, 2018-ன் முதல் காலாண்டில் அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறனை கணக்கில் கொண்டு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். வாழத் தகுந்த நாடு, பணி புரிய சிறந்த நாடு, சுற்றுலாவுக்கு உகந்த நாடு என பல்வெறு வகைகளில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு 3-வது...
பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர் என்னை சந்திப்பதற்கு முன்னால், அமெரிக்க ஜனாதிபதி அடுத்த மாதம் சந்திக்கவிருப்பதா எனக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என மேகன் மெர்க்கலின் தந்தை தாமஸ் மெர்க்கல் தெரிவித்துள்ளார். தாமஸ் மெர்க்கல் வணக்கம் பிரித்தானிய என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது மகள் மற்றும் மருமகன் ஹரி பற்றி கலந்துரையாடியுள்ளார். இந்த உரையாடலின் போது, தான் விரைவில் பிரித்தானிய அரண்மனைக்கு சென்று எனது மகள் மற்றும் பிரித்தானிய மகாராணியை...
மாணவர்களின் தாக்குதல் காரணமாக கொழும்பு தேஸ்டன் கல்லூரி மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே பாடசாலையின் மாணவ தலைவர்கள் சிலர் உட்பட 40 மாணவர்கள் இணைந்து நேற்று மாலை இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரக்பி போட்டியின் இடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்துள்ளதாக கூறியே குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
மன்னார் நகர் நிருபர்  மன்னார் பொது வைத்தியசாலை இதய சத்திர சிகிச்சைக்கான விசேட வைத்தியர்கள் லண்டனில் இருந்து வருகை தந்து தமது வைத்திய சேவையை கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பித்துள்ளனர். தற்போது வரை சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைத்திய பரிசோதனையின் மூலம் நன்மை அடைந்துள்ளனர்.                   லண்டனிலிருந்து வைத்தியர் மயூரன் சண்முகநாதன் தலைமையிலான 3 பேர் கொண்ட வைத்தியர் குழு குறித்த பரிசோதனையை மன்னார் பொது வைத்தியசாலையில் மேற்கொண்டு...
அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருக்க, நேற்று பிரபல வார இதழ் வெளியிட்ட செய்தி ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அஜித் விசுவாசம் படத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களில் நடிக்க மாட்டார், அவர் இதன் பின்பு அரசியல் களத்தில் குதிக்க உள்ளார் என்று ஒரு செய்தி வந்தது. இதனால், அஜித் ரசிகர்கள் செம்ம அப்செட்டில் உள்ளனர், ஆனால், நமக்கு...
விஜய் ரசிகர்கள் எப்போதும் தளபதி மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். இந்த நிலையில் அவருக்காக எதையும் செய்ய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், இந்த அன்பே சில சமயங்களில் பெரும் தர்மசங்கடத்தை விஜய்க்கு கொடுத்துவிடுகின்றது, அப்படித்தான் சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. மதுரையில் ஒரு பள்ளி சுவரில் விஜய் பிறந்தநாள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர், இதை பார்த்து செல்லும் பொது மக்கள் தலையில் அடித்து செல்கின்றார்களாம். மேலும், தொடர்ந்து இது போன்ற சினிமா போஸ்டர்கள் இங்கு...
இருட்டு அறையில் முரட்டுக்குத்து இந்த ஒரே படத்தில் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர் யாசிகா ஆனந்த். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நோட்டா படத்தில் ஒரு முக்கியமான ரோலில் இவர் நடித்துள்ளாராம். யாசிகா தற்போது பிக்பாஸ்-2 வீட்டிற்குள் சென்றுள்ளார், அதன் மூலம் இவர் இன்னும் பிரபலமடைந்துவிட்டார். இந்நிலையில் யாசிகா ஆனந்தின் அடுத்தப்படம் மணியார் குடும்பம் தானாம், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்கவுள்ளது. இதில் இவர்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் பங்கெற்பதற்காக ஜெனீவாவிற்கு சென்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் அங்கு நீதி கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து காணாமற் போனவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு அங்கு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். இதேவேளை காணாமலாக்கப்பட்டோரின் சங்கத்தினர் சுவிட்ஸர்லாந்தில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த உறவுகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்தச் சந்திப்பு எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. காணாமலாக்கப்பட்ட உறவுகள்...