சமாரா எரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய எச். குழு போட்டியில் செனகலை எதிர்த்தாடிய கொலம்பியா, ஒரு கோல் போட்டு வெற்றிபெற்றதன் மூலம் அணிகள் நிலையில் மூன்றாம் இடத்திலிருந்து முதலாம் இடத்துக்கு முன்னேறி இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றது. இரண்டு அணிகளும் வெற்றியை குறிவைத்து விளையாடிபோதிலும் செனகலுக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை. போட்டியின் 74ஆவது நிமிடத்தில் யுவான் குவின்டீரோவின் கோர்ணர் கிக்கை முறையாகப் பயன்படுத்திக்கொண்ட யெரி மினா உயரே தாவி தலையால் முட்டி அற்புதமான...
உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் நேர்த்தியான விளையாட்டின் (பெயார் ப்ளே) அடிப்படையில் முதல் தடவையாக ஓர் அணி இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெறுகின்றமை ரஷ்ய உலகக் கிண்ணப் போட்டியில் நிகழ்ந்துள்ளது. போலந்திடம் ஜப்பானும் கொலம்பியாவிடம் செனகலும் 1 க்கு 0 என்ற ஒரே கோல் எண்ணிக்கையில் தோல்வி அடைந்தன. இதனை அடுத்து ஜப்பானும் செனகலும் போட்ட கோல்கள், விட்ட கோல்கள் மற்றும் நிகர கோல்கள் அனைத்திலும் சமமாக இருந்தன. இதன்...
ஏறாவூரில் எழுச்சிக் கிராமம் திறந்து வைக்கப்படவுள்ளதையொட்டி சுமார் 300 பேருக்கு இலவசமாகக் கண் பரிசோதனை செய்து இலவசமாக கண்ணாடிகள் வழங்கும் கண் பரிசோதனை முகாம்  இடம்பெற்றது. வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் நகர்ப்புற தீர்வு அபிவிருத்தி அதிகார சபையின் சமூகநலத் தயாரிப்புப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த வைத்திய முகாமில் சமூக அபிவிருத்தி உதவியாளர் நாலக ஜயசேகர, கண்பரிசோதனை நிபுணர் வி. தருமலிங்கம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார...
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது ஸ்ரீ லங்கா அரசு, இராணுவத்தினரால் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக்கு எதிராக இலங்கையை சர்வதேச நீதி மன்றத்திற்கு பரிந்துரை செய்யக்கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள்  லண்டன் Lewisham பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  Vicky Foxcroft அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கடந்த 22.06.2018 அன்று மதியம் 2.30 மணியவில் lewisham பகுதியில் நடைபெற்றிருந்த சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசின் மனித...
நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வை இளைஞர்களுக்கு ஊட்டி இளைஞர் சமுதாயத்தை சமாதானத்துக்காகத் தயார்படுத்துவதே சமகாலத் தேவையாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையால் அரச திணைக்களங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், பொலிஸ் மற்றும் சிவில் சமூகப் பிரதிகள் ஆகியோருக்கு யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையிலும் செயற்படுத்தப்பட்டு வரும் சமாதான சௌஜன்ய செயற்பாடுகளைப் பற்றி தெளிவுபடுத்தும் கருத்தரங்கு மட்டக்களப்பு...
ஜேர்மனி உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனமானது தனது தொண்டு சேவையின் அடிப்படையில் கல்வி வாழ்வாதாரம் மற்றும் தொழில் முயற்சி போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் சேவையை விஸ்தரித்து வட கிழக்கு பகுதிகளில் புதியதொரு தடம்பதித்து சிறப்பு மிக்க பணிகளை ஆற்றி வருகின்றது. அதன் ஒரு அம்சமாக கடந்த கால யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு தனது இரு கைகளில் உள்ள 09 விரல்களையும் இழந்த கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியை வசிப்பிடமாகக்...
மன்னார் நகர் நிருபர் மன்னார் நகர நுழைவாயிலில்  உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித  எலும்பு அகழ்வு பணிகள்  (28) வியாழக்கிழமை 23 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில் இடமாற்றம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை தாங்கிவருகின்றார் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் பூச்சிகளின் தாக்கத்தினால் வேளாண்மைகள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வாகனேரி குளத்தை நம்பி விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் ஐயாயிரத்து மேற்பட்ட ஏக்கர் வயல்கள் அறக்கொட்டி பூச்சியின் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.                             இதனை கட்டுப்படுத்தும் வகையில் விவசாயிகள் எழுபதாயிரம் ரூபாவுக்கு மேல் மருந்துகள் கொள்வனவு செய்து ஐந்து தடவைக்கு மேல் மருந்து தெளித்துள்ளதாகவும், அவ்வாறு மேற்கொண்டும் பூச்சிகள்...
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளதுடன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1330 பேர் உயிரிழந்ததாக அதன் பிரதிப் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.டீ.ஏ. தனஞ்சய குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1439 பேர் உயிரிழந்துள்ளனர்....
திருகோணமலை - இலுப்பைக்குளம் கிராமசேவகர் பகுதிக்கு உட்பட்ட சிறுப்பிட்டி கிராமத்தில் காணாமல்போன குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுப்பிட்டி கிராமத்தை சேர்ந்த இராசரட்ணம் பிரபு எனும் 33 வயதுடைய குடும்பஸ்தர் நேற்று அதிகாலை 4 மணியளவில் வேலைக்கு சென்றுள்ளார். எனினும் அவர் காலை 10 மணி வரையில் வீடு திரும்பாமையினால் உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். இதன்போது அவர் பயணம் செய்த மோட்டர்சைக்கிள் இலுப்பைக்குளம், கன்னியா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த...