நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் புத்தளம் முதல் காங்கேசன் துறை வரையான கடற்பரப்பிலும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பிலும் பலத்த காற்று வீசும் எனவும் இதனால் கடல் அலையின் வேகம் அதிகரிக்கும் என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள விவேகானந்தபுரம் பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய அரியநாயகம் நிருலஷனி என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது, குறித்த சிறிமியின் வீட்டில் நேற்று மாலை 5 மணியளவில் உறவினர்கள் எவருமில்லாத நிலையில் வீட்டின் கூரையில் சேலையினை...
ஊர்காவற்துறை, அராலி இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் இரத்தினபுரி, உடகிரில்ல பிரதேசத்தை சேர்ந்த நபராகும். இந்த மரணம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்றை தினம் அவரது பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் தினம் தினம் ஆக்கிரமிக்கப்பட்டு, முழுமையான ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகும் அபாயம் தோன்றியுள்ளதாக வட மாகாண கல்வி  அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. கடந்த காலங்களில் கிராமப்புற பாடசாலைகளில் கல்வி கற்ற பலர் இன்று உயர் பதவிகளை வகித்து...
மன்னார் நகர் நிருபர் மன்னார் மாவட்டம் புதுக்குடியிருப்பு கிராமத்தின் பாதுகாக்கப்பட்ட வன பிரதேசமான நாரா பாடு பகுதியில் சட்டவிரோதமாக கற்றாலை அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை 9.00 மணியளவில்  புதுக்குடியிருப்பு கிராமத்தின் நாரா பாடு பகுதியில் சட்டவிரோதமாக கற்றாலை அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த இருவரும் பிடுங்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 253...
வெளிநாட்டில் இருந்து பணம் வந்தமையினால் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறவன்புலவைச் சேர்ந்த 47 வயதான சிவராசா சிவரூபன் என்பவரே இவ்வாறான விபரீத முடிவால் நேற்று முன்தினம் தன் உயிரை மாய்த்துள்ளார். வெளிநாட்டிலிருந்து பணம் வருவதால் மனைவி தன்னுடன் சந்தோசமாக இருப்பதில்லை என்று கடிதம் எழுதிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான சிவரூபன்...
உடல் எடையை பேணுவதற்க உலகின் பல இடங்களில் கையாளும் முறைகளை தெரிந்துகொள்ளுங்கள். சீனா சீன மக்கள் உடல் எடை குறைந்தவர்களாகவும், அந்த எடையை பேணுவதிலும் அக்கறை காட்டிவருகின்றனர். அவர்கள் தினமும் முட்டைக்கோஸ், கரட், சிவப்பு மிளகாய், தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் சூப்பினை தினமும் 3 அல்லது 4 வேளைகள் பருகி வருகின்றனர். சூப்புடன் கலோரிகள் குறைந்த உணவை உட்கொள்கின்றனர். தினமும் இந்த சூப்பினை எடுத்து கொள்வதனால் அவர்களால் உடல் எடையை...
வரும் ஜூலை 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதன் காரணமாக முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி அன்று முழு சந்திர கிரகண நிகழ்வு ஏற்பட்டது. இந்த சந்திர கிரகணத்தின் போது ‘Super Moon’, ‘Blue Moon' ஆகிய...
சர்வதேச கிரிக்கெட்டில் 100-க்கும் அதிகமானவர்களை அவுட்டாக்கிய ஐந்தாவது இலங்கை விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டிக்வெல்ல படைத்துள்ளார். நிரோஷன் டிக்வெல்ல தற்போது வரை விக்கெட் கீப்பராக மொத்தம் 105 பேரை அவுட்டாகியுள்ளார். இப்பட்டியலில் குமார் சங்ககாரா 671 பேரை விக்கெட் கீப்பராக இருந்து அவுட்டாக்கி முதலிடத்தில் உள்ளார். கலுவித்தரனா 325 பேரை அவுட்டாக்கி இரண்டாமிடத்திலும், பிரசன்னா ஜெயவர்தனே 161 பேரை வீழ்த்தி மூன்றாமிடத்திலும், சண்டிமால் 127 பேரை வீழ்த்தி நான்காமிடத்திலும்...
இங்கிலாந்துக்கு எதிராக காலினிங்க்ராட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் 1 க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெல்ஜியம் 100 வீத வெற்றி பெறுபேறுடன் ஜீ குழுவில் முதலாம் இடத்தைப்பெற்றது. இப் போட்டிக்கு முன்பதாகவே இரண்டு அணிகளும் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்த நிலையில் இரண்டு அணிகளிலும் நேற்றைய போட்டியில் பெரு மாற்றங்கள் செய்யப்பட்டன. இங்கிலாந்து பயிற்றுநர் கெரத் சௌத்கேட் தனது அணியில் எட்டு மாற்றங்களையும்...