ஆபிரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உகண்டாவின் ஜனாதிபதி ஜொவேரி முசவெரியை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தமது நாட்டின் தொழில்நுட்ப பயிற்சி நிலையமொன்றை தரமுயர்த்துவதில் இலங்கை வழங்கிய உதவிகளுக்கு உகண்டா ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார். மேலும், தமது நாட்டின் பொருளாதாரத்தில் இலங்கை முதலீட்டாளர் வகிக்கும் பங்கு பற்றியும் அவர் மேலும் குறிப்பிட்டார்....
வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார். இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பு சமர்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை பதவி நீக்கியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம்...
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறுகையில் வடக்கு மக்களுக்கு கருணை, இரக்கம், பிரிவு என்பதே தேவை என கூறியுள்ளர். நேற்று முன்தினம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டச் செயலக முன்றலில் பாதிக்கப்பட்டவர்களின் குறிப்பிட்ட தொகையினருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் மேலும் தெரிவித்தது தமிழ் மக்களுடன் நான் இங்கே வாழ்ந்து வருகின்றேன். அவர்களின் கலாச்சாரம் மனித நேயம், மனிதத் தன்மை அவர்களின் துன்பங்கள் அனைத்தையும் நன்கு புரிந்துள்ளேன்...
07 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் 48 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கொட்டுகச்சிய, தங்கஹவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வயலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது குறித்த சிறுமி வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
நம்முடைய முகமானது, வெயில், சுற்றுப்புற மாசு ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்மையான நிறத்தின் பொலிவினை இழக்கச் செய்கிறது. மேலும் முகத்திற்கு போடும் சிலவகை க்ரீம்களை நாம் பயன்படுத்துவதால், சருமத்தின் செல்கள் அழிந்து, முகத்தில் கறுமை நிறம் அதிகரித்து, சருமத்தில் சுருக்கங்கள் போன்ற பலவிதமான சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே கடுமையான வெயில் காரணமாக நமது முகப் பொலிவின் அழகை தடுப்பதற்கு நமது வீட்டிலேயே இருக்கு அற்புதமான சில வழிகள்! பால் மற்றும் தேன் ஒரு...
சமூக வலைதளங்களில் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது டுவிட்டர் தான். மக்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் அதிகம் ஆக்டீவாக இருப்பது டுவிட்டர் பக்கத்தில் தான். எந்த ஒரு பட டிரைலர், பாடல் ரிலீஸ் என்றாலும் இதில் தான் முதலில் தகவல் வருகிறது. அப்படி மிகவும் பிரபலமாக இருக்கும் டுவிட்டர் பக்க உரிமையாளர்கள் அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். அதில் தங்களது பக்கத்தில் என்னென்ன அதிகம் பிரபலமானது என்ற விவரத்தை வெளியிட்டனர். அப்போது இந்த...
ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்கவீரதுங்க விரைவில் இலங்கை திரும்பி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராவார் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மிக்விமானக்கொள்வனவு மோசடி தொடர்பில் உதயங்கவீரதுங்க மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவரிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையிலேயே அவரது சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளனர். உதயங்கவிரைவில்  நாடு திரும்பி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராகதிட்டமிட்டுள்ளார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். உதயங்கவீரதுங்கவை தன்னால் இலங்கைக்கு அழைத்துவரமுடியும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
சிவா அஜித்துடன் தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம் என்று மூன்று படங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது 4வது முறையாக விசுவாசம் படத்திலும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்நிலையில் சிவா விவேகம் தோல்விக்கு பிறகு எந்த ஒரு மீடியாவைவும் சந்திக்காமல் இருந்தார், தற்போது தம்பிராமையா மகன் நடித்த மணியார் குடும்பம் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார். இதில் இவர் பேசுகையில் விசுவாசம் 40% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம், படம் பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய முயற்சி செய்து...
சர்கார் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் எல்லோரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. இந்த நிலையில் சர்கார் படம் தான் இந்த வருடத்திலேயே டுவிட்டரில் அதிகம் வரவேற்பு பெற்ற படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக நேற்று நடந்த வணக்கம் டுவிட்டர் விழாவிலேயே அறிவித்தனர், சர்கார் படம் வருவதற்கு முன்பே சாதனைகளை தொடங்கிவிட்டது.
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்து தமிழகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில், தனது மகள்கள் இருவரும் தனது அரசியல் வருகை குறித்து கவலைப்பட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து செயல்பட்டு வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், எனது அரசியல் வருகை குறித்து என...