EPRLF இன் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் முகத்திரையை கிளிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொண்ணம்பலம்
  புதுக்குடியிருப்பு மத்தியகல்லுரி மாணவர் இருவர் குளத்தில் ழூழ்கி மரணம்-சம்பவ இடத்திற்கு வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சென்று பார்வையிட்டார்.புதுக்குடியிருப்பு பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .பொதுமக்களின் உதவியுடன் இவர்களின் சடலம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது    
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு சற்றுமுன் வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (24.12.2017) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. புதிய தேர்தல் முறை பற்றிய விடயங்கள் , தேர்தலின்போது வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்படுகின்றது குறித்த கருத்தரங்கில் தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...
  'நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் நாளை, தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை தூபி அருகில் உடலை தகனம் செய்ய ஏற்பாடு' இது 21.12.2017 உதயன் பத்திரிக்கையில் உட்பக்கத்தில் ஒரு செய்தி வெளிவந்தது. அந்தச் செய்தி எம்மைப்போன்ற பல இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் மனதில் வேதனையும் இதை தடுக்க வேண்டும் என்ற உணர்வும் பெருக்கெடுத்தது. அந்த வகையில் அந்;த இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் சார்பில் இதை தடுக்க...
  இலங்கை வரலாற்றில் ஜனாதிபதிகளாக வில்லியம் கோபல்லவாவிலிருந்து இன்றைய மைத்திரிபால சிறிசேன வரை பலர் வந்து போனாலும் எமக்கு நினைவுக்கு வருபவர்கள் இருவர். ஒருவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, மற்றையவர் மஹிந்த ராஜபக்ஷா. முதலாமவர், பாராளுமன்ற இறைமையைப் பாதிக்கக்கூடிய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைக் கொணர்ந்தவர். தன்வசம் அதிகப்படியான அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட, ஜனநாயக விரோதமான, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறைமையை 1978இல் அறிமுகப்படுத்தியவர். பாராளுமன்றத்தில், தட்டிக்கேட்க ஆளிருந்தும்...
  இறந்த முஸ்லிம் ஒருவரின் காணிக்கு கள்ள உறுதி முடித்து திருமலை லிங்கநகரிலுள்ள 56 தமிழ் குடும்பங்களிடம் இரண்டுகோடியே நாற்பது லட்சம் கோருகின்றார் சம்பந்தன்  தமிழரசுக் கட்சியினாலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் ஈழத் தமிழர்களுக்கு அறிமுகமானவர் இரா சம்பந்தன். தமிழினத்தின் தலைவர்கள் கொல்லப்பட்டு வெற்றிடங்கள் ஏற்பட சம்பந்தன் தமிழினத்துக்குத் தலைவர் ஆகிவிட்டார். இவர் தமிழினத்துக்காக இதுவரை எந்தத் தியாகத்தையும் செய்தது கிடையாது. திருகோணமலை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்படுவார். தமிழரசுக் கட்சி...
நேரிடையாக தமிழரசு கட்சியை மட்டும் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக கூட்டமைப்பையும் சேர்த்து குற்றம் சாட்டுவது காரணத்துடனே தமிழரசு கட்சியின் தவறுகளை தட்டி கேட்க்காமல் அவர்களுடன் சேர்ந்து பயணித்து தவறுக்கு துணை போனது.   2015 ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு சர்வதேச சக்தியுடன் இணைந்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்த தென்னிலங்கை அரசியல் தலைமைகள் பல ரகசிய சந்திப்புகளை மேற்கொண்டதை யாவரும் அறிவர் குறிப்பாக ஐயா சம்பந்தனும் பிரதமர் ரணிலும் முன்னால்...
தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படாமல், வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாமல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல், சமஷ்டி என்னும் சொல் இடம்பெறாமல் புதிய அரசியலமைப்புச் சட்டம் வருமானால் அதனை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்க ள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து  தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது...
  வடகிழக்கு இணைப்பு வேண்டுமென்று கூவித்திரிபவர்களினால், வடகிழக்கு இணைப்பினைச் செய்ய முடியுமா? – சுமந்திரன் யாழ்ப்பாணம்; வடகிழக்கு இணைப்பு வேண்டுமென்று கூவித்திரிபவர்களினால், வடகிழக்கு இணைப்பினைச் செய்ய முடியுமா? நான் சவாலாக கேட்கின்றேன். கூவித்திரிபவர்கள் இணைப்பதற்குரிய உண்மைக்காரணங்களை சொல்வதற்கு தயாரா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் சவால் விடுத்துள்ளார். தமிரசு கட்சியின் முஸ்லீம் ஆதரவாளர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில், வடக்கின் மக்களாக எழுவோம் எனும் தொனிப்பொருளிலான தமிழ் முஸ்லீம் ஐக்கிய மாநாடு நேற்று...
  தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக ஏற்­பட்­டு­வரும் சூழ்­நிலை மாற்­றத்­தையும் சிங்­கள மக்­க­ளி­டையே ஏற்­பட்­டு­வரும் மன­மாற்­றத்­தையும் நாம் மிகவும் கவ­ன­மாக கருத்தில் கொள்­ள­வேண்டும். அதேவேளை, தமிழ்­பேசும் மக்­களின் அர­சியல் தீர்வை முன்­னெ­டுத்­து­வரும் த.தே.கூட்­ட­மைப்பு தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா சம்­பந்தனுக்கு ஆட்­சி­யா­ளரும் சிங்­கள அர­சியல் கட்சித் தலை­வர்­களும் வர­வேற்­ப­ளிப்­பதும் மற்­றுமோர் சாத­க­மான சூழ்­நி­லை­யாகும். தலைவர் சம்­பந்தனின் அர­சியல் அணு­கு­முறை, அர­சியல் அனு­பவம், இரா­ஜ­தந்­திரம் அவரை தமிழ் மக்­களின் பெரும் தலை­வ­ராக மதிக்க வைத்­துள்­ளது. சம்­பந்தனின் அர­சியல்...