வடமாகணத்தில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பொது மக்கள் குடிநீர் பிரச்சனையை எதிர் கொண்டுள்ளனர். கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான கிளிநொச்சி குளம் நீர்வற்றி வறட்சியின் உச்சத்தை நிருபித்துகாட்டுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது.   இதேவேளை, இந்த குளத்தில் இருந்து பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தூயநீர் வழங்கும் பிரதான குளமாக...
மாணவ சமூகத்தை உருவாக்கி அவர்களுக்கு உயிரோட்டம் கொடுக்கும் ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். உலக ஆசிரியர் தினத்தையொட்டி அவர் வாழ்த்து செய்தியொன்றை விடுத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக மாற்றுவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதேபோல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். அக்டோபர் மாதம் 6ம் திகதி அனைத்துலக ஆசிரியர் தினத்தை...
2020ஆம் ஆண்டில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அதுவரையான காலப்பகுதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படவில்லை என்றால் அது உறுதியான விடயம் என குறிப்பிட்டுள்ளார். சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கினால் அடுத்த நாடாளுமன்ற...
இரத்மலானையில் அமைந்துள்ள போக்குவரத்து சேவை மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இரத்மலானையில் பாரிய தீ விபத்து! கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திண்டாட்டம் இரத்மலானையில் அமைந்துள்ள போக்குவரத்து சேவை மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெஹிவளை - கல்கிசை தீயனைப்பு பிரிவு...
இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு செயல்திறனான தீர்வுக்காணும் வகையில் இலங்கை இந்திய அதிகாரிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அன்று சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு, புதுடில்லியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் மீனவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, 2017 ஆம் ஆண்டு வெசாக் தினக்கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக பங்கேற்கவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்புக்கு இந்திய பிரதமர்...
இன்று கலண்டரில் தேதியை மாற்றும் போது நீங்கள் ஒருபுதுமையை உணரலாம். 06/10/2016ல் என்ன விசேஷம் என்றால், இந்த தேதியை அப்படியே திருப்பி பார்த்தாலும் 6102016 என்று தான் வரும். இதற்கு பெயர் 'பாலின்டிரோம்' திகதி. பாலின்டிரோம் என்பது இடமிருந்து வலது பக்கம் பார்த்தாலும், வலமிருந்து இடதுபக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கும். உதாரணமாக 'விகடகவி' என்ற தமிழ் வார்த்தையை கூறலாம். இந்த நுாற்றாண்டில் (2001 முதல் 2100 வரை) ஏழு இலக்கங்களை கொண்ட 26...
பொதுவாக மோதிரம் அணிவது என்பது மனித விரல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காரணப் பெயர்கள் உண்டு. அவை, 1.கட்டை விரல்: இந்தவிரல் ஏனைய நான்கு விரல்களுள் மிகமிக முக்கியத்துவம் நிறைந்தது. இந்த விரலின் துணை இல்லாமல் மீதி உள்ள நான்கு விரல்களாலும் தனித்து எந்தக் காரியத்தையும் செய்திட இயலாது. 2. ஆள்காட்டி விரல்: இந்த விரலுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என்பது இந்த விரலின் பெயரிலேயே உள்ளது. 3.நடு விரல்: இந்த விரலுக்கு...
ஏழைக்கும் எளிதில் கிடைப்பது இந்த நெல்லிக்காய் ஒன்று தான்.. இந்த நெல்லிக்காயில் அதீக அளவுக்கு மருத்துவ பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அதே போல் தேனிலும் அதீத அளவுக்கு மருத்துவ பண்புகள் காணப்படுகனிறன. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் பயன்களுக்கு அளவே இல்லை. ஆம் தேனில் ஊற வைத்த‌ நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?. தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு...
தோற்றத்தில் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் போன்ற காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்குதல் என்பது எப்போதுமே ஒரு ஆபத்தான காரியம் தான். ஆனால், போலிகள் தான் சந்தையை ஆளாகின்றன முக்கியமாக குளோன் அல்லது கள்ள மொபைல்களின் விலை மக்களை அதிகம் ஈர்க்கிறது. உதாரணமாக, ஒரு க்ளோன் மொபைலின் தொடுதிரையில் தரம் குறையும், ப்ராசஸர் மெதுவாக இயங்கும் அல்லது அல்லது பேட்டரி அதிக நேரம் தாக்கு பிடிக்காது. சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட தொலைபேசிகள் என்று ஒரு...
  சமூகவலைதளங்களில் பரவும் சசிகலா புஷ்பாவின் அவதூறு புகைப்படங்களை உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என்றுடெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்த அவதூறு செய்திகள் மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னை பற்றிய அவதூறு செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா...