பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்த்துக்கொள்ளும் வேளையில் அதிபர்கள் நிதி மற்றும் பாலியல் இலஞ்சம் கோருபவர்கள் தொடர்பில்1954 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக தெரியப்படுத்த விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரச பாடசாலையில் பிள்ளைகளை தாம் சேர்க்க செல்லும் வேளைகளில் நிதி மற்றும் பாலியல் இலஞ்சம் கோருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியத்தினை அடுத்து குறித்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குறித்த இயக்கத்தின் ஊடாக தெரியப்படுத்த முடியும்...
இது வரைக்காலமும் புதிய கட்சி ஆரம்பிக்கப்படாது சுதந்திரக்கட்சியே எமது உயிர், உண்மையான சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் நாம் என கூறிவந்தார் மஹிந்த. தற்போதைய நிலவரப்படி அவருடைய அரசியல் வாழ்வு தடுமாறிப்போயிள்ள நிலையில் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் கட்சியின் சின்னம் போன்றவை அறிமுகப்படுத்தி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் மஹிந்த கடந்த காலத்தில் தன் மூலமாகவும் தன் குடும்பம் மூலமாகவும் ஒரு வகை மக்கள் செல்வாக்கை சேர்த்து வைத்திருந்தார். அவர் மீது எத்தகைய...
இலங்கையில் இருந்து கப்பல் மூலம் கடத்தப்படவிருந்த பறவைகள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த வாரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது 11 கிளிகள், 6 லவ்பேட்ஸ் மற்றும் 10 சிவப்பு வர்ண புல்புல் குருவிகள் என்பன கைப்பற்றப்பட்டன. இந்த பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு பெட்டிக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் குறித்த பறவைக்கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டபோது 10கிளிகளும் 4 லவ்பேட்ஸூம் இறந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலைத்தீவை சேர்ந்த இரண்டுபேர்...
சலாவ வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சலாவ இராணுவ முகாம் வெடி விபத்துச் சம்பவத்தில் முற்றுமுழுதாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை தமது அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து சமர்ப்பிக்க உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். சலாவ வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து...
உணவுகளை அளவுக்கு மீறி நாம் சாப்பிடும் போது அந்த உணவே நமக்கு விஷமாகும். இதனை தான் ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒரு சில உணவுகளை ஒருசேர ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது, இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே...
கடந்த ஒரு மாதக்காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட, இந்திய வர்த்தக இராஜாங்க அமைச்சர் நிர்மலா சித்தாராமனின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 27ஆம் திகதி அவர் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை சந்தித்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த சந்திப்பில், இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கை (எட்கா) தொடர்பில் கலந்துரையாபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நல்லாட்சி அரசு பல்வேறு உறுதி மொழிகளை வழங்கிவருகின்றது. எனினும், இந்த உறுதி மொழிகள் தொடர்பிலும், நல்லாட்சி அரசு மீதும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சரியான பதில் கிடைத்திருக்கின்றனவா..? அல்லது அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா...? குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமையும், அபிவிருத்திக்குமான நிலையத்தின் உறுப்பினர் ஸ்டீபன் சுந்தரராஜ் வதனா தமது கருத்துக்களை லங்காசிறி...
ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 15 நன்மைகள்!!! மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!! மேலும் நிபுணர்களும்,...
முன்னைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது வளர்ந்தவர்களுக்கான நோயாக இருந்து வந்தது. ஆனால், இன்றைய காலத்தில் யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள எமது சிகிச்சை நிலையத்திற்குப் பல சிறுவர்கள் நீரிழிவு நோய்க்காகத் தினமும்அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனத் தெரிவித்தார் யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு தொடர்பான சிறப்பு வைத்திய நிபுணர் மகாலிங்கம் அரவிந்தன். யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆரோக்கிய வாழ்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டமொன்று நேற்று வியாழக்கிழமை...
யாழ். நீர்வேலி பகுதியில் தாயொருவர் சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று இன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு மனிதாபிமானம் கொண்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், ஈவிரக்கமற்ற அந்த வளர்ப்புத் தாய் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ். நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த...