தற்போது இலங்கையில் இடம் பெற்று வருகின்ற மாற்றங்கள் உலகத்திற்கு ஒருஎடுத்துக் காட்டாக அமைவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமாதெரிவித்துள்ளார். நிவ்யோர்க் நகரில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று மாலை சந்தித்த ஒபாமா இதனை கூறியுள்ளார். மாறிவரும் இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும்ஆதரவளிக்கும் என ஒபாமா இதன் போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கனடாவின் பிரதமர் Justin Trudo,அவுஸ்திரேலியாவின் பிரதமர் Malcolm Turnbull மற்றும் பாகிஸ்தான் பிரதமர் Nawaz Sherif ஆகியோரை ஜனாதிபதி...
  இன்று பிற்பகல் 2.30 மணியளவில் .யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் பொலிஸாருக்கும் யாழ்.விளையாட்டுக் கழகங்களுக்குமிடையே விளையாட்டு போட்டிகள் நடாத்தப்படவுள்ளது. இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு யாழ் மாவட்ட பொலிசாருக்கும் தேர்வு செய்யப்பட்ட கழகங்களுக்குமிடையிலேயே போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட், காற்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் போன்ற போட்டிகள் நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக D.I.G சஞ்சீவ தர்மதாச கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 5ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று புதன்கிழமை இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்...
ரோஹித்தா, புஜாராவா யார் சிறப்பாக பயிற்சி செய்கிறார்கள் என்பது போல வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அறிவிக்கப்பட்டதில் ரோகித் சர்மா, தவான் ஆகியோருக்கு அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் துலீப் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட காம்பீருக்கு இடம் மறுக்கப்பட்டது.தூலீப் தொடரில் சிறப்பாக செயல்படாத ரோகித்...
இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீரை தனக்கு பிடிக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. அத்தொடரில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் காம்பீர் ஒரு ஓட்டம் எடுப்பதற்காக ஓடிய போது பாகிஸ்தான் வீரர் அப்ரிடி வழிமறித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று சண்டை வரை செல்ல முயன்றது. இதை அங்கிருந்த...
தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மக்களை கால்பந்து விளையாட்டு விளையாடக்கூடாது என்று ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். அதனை மீறி அவர்கள் கால்பந்து விளையாட்டு விளையாடினாலோ அல்லது விளையாட்டு வீரர்களின் சீருடையை அணிந்தாலோ அவர்களுக்கு தங்க தண்டனை வழங்கப்படும் என அறிவுறுத்ததப்பட்டுள்ளது. ஏனெனில், கால்பந்து விளையாட்டின் மீது இவர்கள் அதிக ஆர்வம் செலுத்தினால், நாளடைவில் அந்த விளையாட்டிற்கு அடிமையாகி அதன் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவர். இதன் காரணத்தினாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் ஈராக்கின் மொசூல்...
கிங் ஆப் சிக்ஸ் என்று அழைக்கப்படும் மேற்கிந்திய தீவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் மின்னல் மனிதன் உசைன் போல்ட்டை வெல்வேன் என குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் கூறியதாவது, தனது சுயசரிதை புத்தகமான சிக்ஸ் மெஷின் போல் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியின் சுயசரிதை புத்தகம் வெளியானால் அதற்கு கூல்...
உலக கபடிப் போட்டி குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நிருபர் ஒருவர் உலகக் கிண்ண கபடி போட்டிக்கு ஏன் பாகிஸ்தானை அழைக்கவில்லை என்று கேட்டபோது கபில்தேவ் அவரிடம் கோபமாக பேசினார். அகமதாபாத் நகரில் அக்டோபர் 7 ஆம் திகதி உலக கபடி போட்டி நடைபெறவுள்ளது. இது குறித்து மும்பையில் செய்தியாளர்களின் கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதில் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் கபில்தேவ் கலந்துக் கொண்டார். அப்போது அந்தக் கூட்டத்தில் நிருபர் ஒருவர் கபடி போட்டிக்கு ஏன்...
மருந்தே உணவு என்பது தான் தமிழர்களின் வாழ்க்கை முறை. நம்முடைய அன்றாட உணவு வகைகளில் சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால் தான் உடலில் உண்டாகும் நோயின் பிடியில் இருந்து சிக்காமல் இருக்க முடியும். அந்த வகையில் பார்க்கும் போது பீட்ரூட் எண்ணிலடங்காத மருத்துவ குணங்களைக் கொண்ட ஒருவகை கிழங்கு ஆகும். இதைத் தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் சொல்வார்கள். பீட்ரூட்டில் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின்,...
பெங்களூருவில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு கே.ஜி.ஹல்லி அருகேயுள்ள சாராய்பாளையாவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் யாஸ்மின் பானு (38) என்பவரை காதலித்து திருமனம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவரின் சொத்தை அபகரிக்க ஆசைபட்ட யாஸ்மீன் இம்ரானிடம் ரொக்கமாக பல லட்ச ரூபாய் பெற்று...